தைப் பொங்கல் வைப்போம்

பொங்கல் வைப்போம் புத்தரிசிப் பொங்கல் வைப்போம் சர்க்கரைப் பொங்கல் வைப்போம் வீட்டு வாசலில் மாட்டுப் பொங்கல் வைப்போம் முன் வாசலில் கோல மிட்டு, பெண்டிர் கும்மி அடித்து செங்கரும்புப் பந்த லிட்டு சீராய்த் தோரணம் கட்டிப் பால் பொங்கல் வைப்போம் ! புத்தாடை அணிந்து பூரிப்போடு பொங்கல் வைப்போம். பொழுது புலர்ந்ததும் விடி வெள்ளி விழித்ததும் வெண் பொங்கல் வைப்போம். கூட்டாகத் தமிழர் கொண்டாடும் அறுவடைத் திருவிழா கோலகல மாகப் பொங்கலோ பொங்கல் என்று மங்கையர் பாடிக்… Read More தைப் பொங்கல் வைப்போம்

Rate this:

உடையநாடு பெண்கள் அரபிக் கல்லூரி

தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம் , உடையநாடு என்ற ஊரில் பெண்கள் அரபிக் கல்லூரி. ‘மதரஸா அஸீஸிய்யா’ கட்டுமானப் பணி தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. மௌலானா சையது முகமது புகாரி பாஜிலே மன்பஈ(மலேசியா) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆலிம் அகமதுஷா, ஏர்வாடி இப்ராஹிம் ஜமாலி, காளிக்காவிளை இமாம் போன்றோர் சிறப்புரையாற்றினர். மேலும் சென்னை அஸ்ஸாதிக், சாகுல் ஹமீது, தலைமையாசிரியர் குலாம் கனி, உள்ளூர் மற்றும் சுற்றுப்புறத்திலுள்ள ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர். மதரஸாவிற்கு இடம் வழங்கியதுடன் கட்டிடத்தையும் தானே… Read More உடையநாடு பெண்கள் அரபிக் கல்லூரி

Rate this:

ரிஸானாவின் இறுதி நிமிடங்கள்…

கீழே இருக்கும் மடல், ரிஸானாவின் வழக்கில் முதலிலிருந்து கவனம் எடுத்த, இறுதி நிமிடங்களில் மௌன சாட்சியாய் இருந்த மௌலவி மக்தூம் அவர்களின் மடல், ரிஸானாவின் பெற்றோருக்கு. கண்டிப்பாக முழுதும் படியுங்கள். அஸ்ஸலாமு அலைக்கும் : றிஸானாவின் பெற்றோரின் கவனத்திற்கு, நீங்கள் ஷரீஆ சட்டப் படி உங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்று கொண்டுள்ளீர்கள் என்ற செய்தியை வாசித்தவுடன் மிகவும் சந்தோசம் அடைந்தேன். இதன் மூலம் பொறுமையை கடைப் பிடித்து இறைவனின் நற்செய்திக்கு உரித்தானவர்களாகவும், பிறருக்கு முன்மாதிரியாகவும் ஆகிவிட்டீர்கள்.… Read More ரிஸானாவின் இறுதி நிமிடங்கள்…

Rate this:

படிப்பால் பண்பாடு பலம்பெற வேண்டும்

– அ. முஹம்மது கான் பாகவி [ தமிழகத்தைப் பொருத்தவரையில் முஸ்லிம் மாணவிகள் மாநில அளவில் பள்ளிப் படிப்பில் முதலிடம் பெறும் அளவுக்குக் கல்வியில் முன்னேறியுள்ளனர் என்பது ஆறுதல் தரும் தகவலாகும். முஸ்லிம் மாணவ – மாணவிகள் முன்புபோல் இல்லாமல் உயர்கல்வி பெறுவதிலும் தகுதி வாய்ந்த வேலைவாய்ப்புகளை அடைவதிலும் முனைப்புக் காட்டிவருகின்றனர். முஸ்லிம் பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும் மனமாற்றமுமே இதற்குக் காரணம். தமிழக முஸ்லிம் கட்சிகள், நல அமைப்புகள், அறக்கட்டளைகள், அறிஞர்கள், சமூக மற்றும் கல்வி… Read More படிப்பால் பண்பாடு பலம்பெற வேண்டும்

Rate this:

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்

உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்.., ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார். பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல.., மீண்டும் தந்தை… Read More நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்

Rate this: