Sticky post

கொரோனா வைரஸ் – ‘சுனாமி போல் தாக்கும்’ – மலேசியா

மலேசியாவில் கொரோனா வைரஸின் மூன்றாம் கட்ட அலை எந்த நேரத்திலும் எழும் எனவும், இம்முறை அது சுனாமி போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மூன்றாம் கட்ட சுனாமி போன்ற அலையை எதிர்கொள்ளும் நடவடிக்கையாகவே மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதாக அந்த அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் இஷான் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

“அடுத்து என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே யூகித்துதான் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இப்போது சுனாமி என்று குறிப்பிடக்கூடிய கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் கட்ட அலையானது தீவிரமாக இருக்கும் என்று 3 வாரங்களுக்கு முன்பே யூகித்தோம். மார்ச் மாத துவக்கம் வரை விடுமுறை காலத்தில் ஏராளமான மலேசியர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று திரும்பியுள்ளனர். எனவேதான் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை அடையாளம் காட்டும் என எதிர்பார்க்கிறோம்,” என்று இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார். Continue reading “கொரோனா வைரஸ் – ‘சுனாமி போல் தாக்கும்’ – மலேசியா”

கொரோனா வைரஸ் | மூட நம்பிக்கைகள் | கட்டுக்கதைகள்

வெள்ளி உலோகத்தை அருந்தினால் கொரோனா குணமாகுமா?
உடலை சூடாக வைத்துக் கொண்டால் கொரோனா குணமாகுமா?
பசு கோமியம் கொரோனாவுக்கு தீர்வளிக்குமா?
இந்த கேள்விகளுக்கான பதில்கள்..

Continue reading “கொரோனா வைரஸ் | மூட நம்பிக்கைகள் | கட்டுக்கதைகள்”

கொரோனா வைரஸ் | சுய ஊரடங்கு உத்தரவு | இந்தியா

கொரோனா வைரஸ் நாளை நடக்க இருக்கும் சுய ஊரடங்கு உத்தரவு அவசியமா ? அதன் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறார் மருத்துவர் அஷ்வின் விஜய், நண்பர்கள் மற்றும் அன்பர்களுக்குடன் பகிர்ந்து கொரோனா வைரஸ்யில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வோம்.

 

Continue reading “கொரோனா வைரஸ் | சுய ஊரடங்கு உத்தரவு | இந்தியா”

Sticky post

யார் யார் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்? அமைச்சர் விளக்கம் | கொரோனா

கொரோனா தொற்று இருக்கிறதா என்பது குறித்து யார் யார் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்த பலரும் ரயில் பயணத்தை ரத்து செய்துள்ளனர் என சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை மத்திய ரயில் நிலையத்தில் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை சோதனை செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், பயணிகள் பலருக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், பயணத்தை ரத்து செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

”பயணத்தை தவிர்ப்பது நல்லது என நாங்கள் தொடர்ந்து கூறிவருகிறோம். தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் பேசியபோது, பலரும் ரயில் பயணத்தை ரத்து செய்துள்ளனர் என்ற விவரங்களைப் பகிர்ந்தனர். மக்களிடம் விழிப்புணர்வு சென்றுசேர்ந்துள்ளது என்பதை இது உணர்த்துகிறது எங்களுக்கு மகிழ்ச்சி. இருந்தபோதும், ரயில் நிலையத்தில் மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்ளனர். இங்குவரும் பயணிகளிடம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்,” என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். Continue reading “யார் யார் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்? அமைச்சர் விளக்கம் | கொரோனா”

Sticky post

கொரோனா வைரஸ் நோய் (COVID-19) பொதுமக்களுக்கான ஆலோசனை | WHO (உலக சுகாதார அமைப்பு)

புதிய கொரோனா வைரஸுக்கு எதிரான அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள்

  • உங்கள் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்
  • சமூக தூரத்தை பராமரிக்கவும்
  • கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும்
  • சுவாச சுகாதாரம் பயிற்சி
  • உங்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், ஆரம்பத்தில் மருத்துவ உதவியை நாடுங்கள்
  • உங்கள் சுகாதார வழங்குநர் (மருத்துவர்) வழங்கிய ஆலோசனையைப் பின்பற்றவும்

முகமூடியை எப்போது பயன்படுத்த வேண்டும்

Continue reading “கொரோனா வைரஸ் நோய் (COVID-19) பொதுமக்களுக்கான ஆலோசனை | WHO (உலக சுகாதார அமைப்பு)”