Sticky post

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!

1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.

2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.

3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.

4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.

5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். Continue reading “கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!”

GETTY IMAGES Sticky post

கொரோனா வைரஸ் | தடுப்பு மருந்தை கண்டறிந்துவிட்டதா இஸ்ரேல்?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறிவதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் இஸ்ரேல் கொரோனாவிற்கான ஆன்டிபாடி மருந்தை கண்டறிந்துவிட்டதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டில் தலைமை உயிரியல் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸுக்கான ஆன்டிபாடி மருந்தை வெற்றிகரமாக கண்டறிந்து விட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நஃப்தாலி பேனெட் கூறியுள்ளார்.

இந்த ஆன்டிபாடி மருந்து உடலில் இருக்கும் வைரஸைத் தாக்கி அதனை செயல்படவிடாமல் தடுக்கும் என கூறப்படுகிறது.

இந்த ஆன்டிபாடி மருந்து தற்போது காப்புரிமை பெறும் நடைமுறையில் உள்ளது. காப்புரிமை பெற்றவுடன் தயாரிப்பு பணியில் ஈடுபடவுள்ளோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார். Continue reading “கொரோனா வைரஸ் | தடுப்பு மருந்தை கண்டறிந்துவிட்டதா இஸ்ரேல்?”

Sticky post

10000 ஆண்டுகளுக்கு முன்பே அமேசான் காடுகளில் விவசாயம் பார்த்த மக்கள்

மிகவும் அடர்த்தியான அழகிய வனப்பகுதியாக நாம் அறியும் அமேசான் காடுகளில் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே பயிர் இடப்பட்டு விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

10,000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளடங்கிய பகுதியாக கருதப்பட்ட தற்போதைய வடக்கு போலியாவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஆராய்ச்சி குழு ஒன்று கண்டறிந்துள்ளது. இந்த பகுதியில் வசித்த மக்கள் மக்காச்சோளம், பூசனி, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட கிழங்கு வகைகளை பயிர் செய்துள்ளனர் என்றும் இந்த ஆராய்ச்சி குழுவினர் குறிப்பிடுகின்றனர்.

மழைக்காலத்தில் வெள்ளக்காடாகிவிடும் இந்த நிலப்பரப்பில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் எப்படி விவசாயம் செய்தார்கள் என்ற விதத்தையும் இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆங்காங்கே தீவுகளைப் போல மேடுகளை உருவாக்கி அந்த மேடுகளின் மீது அவர்கள் விவசாயம் செய்துவந்தனர் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பனி யுகத்திற்கு பிறகு, உலகின் வெப்பநிலை தொடர்ச்சியாக உயர்ந்தது. இதனால் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இவற்றில் மிக முக்கியமானது என்னவென்றால், ஆரம்பகால நாகரிகங்கள் வேட்டையாடி, வனப் பொருள் திரட்டி வாழும் வாழ்க்கையில் இருந்து முன்னேறி, உணவைப் பயிரிடத் தொடங்கினர்.

உலகில் இப்படி ஆதியில் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட இடங்கள் என நான்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன. Continue reading “10000 ஆண்டுகளுக்கு முன்பே அமேசான் காடுகளில் விவசாயம் பார்த்த மக்கள்”

Sticky post

கொரோனா வைரஸ் – ‘சுனாமி போல் தாக்கும்’ – மலேசியா

மலேசியாவில் கொரோனா வைரஸின் மூன்றாம் கட்ட அலை எந்த நேரத்திலும் எழும் எனவும், இம்முறை அது சுனாமி போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மூன்றாம் கட்ட சுனாமி போன்ற அலையை எதிர்கொள்ளும் நடவடிக்கையாகவே மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதாக அந்த அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் இஷான் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

“அடுத்து என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே யூகித்துதான் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இப்போது சுனாமி என்று குறிப்பிடக்கூடிய கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் கட்ட அலையானது தீவிரமாக இருக்கும் என்று 3 வாரங்களுக்கு முன்பே யூகித்தோம். மார்ச் மாத துவக்கம் வரை விடுமுறை காலத்தில் ஏராளமான மலேசியர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று திரும்பியுள்ளனர். எனவேதான் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை அடையாளம் காட்டும் என எதிர்பார்க்கிறோம்,” என்று இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார். Continue reading “கொரோனா வைரஸ் – ‘சுனாமி போல் தாக்கும்’ – மலேசியா”

கொரோனா வைரஸ் | மூட நம்பிக்கைகள் | கட்டுக்கதைகள்

வெள்ளி உலோகத்தை அருந்தினால் கொரோனா குணமாகுமா?
உடலை சூடாக வைத்துக் கொண்டால் கொரோனா குணமாகுமா?
பசு கோமியம் கொரோனாவுக்கு தீர்வளிக்குமா?
இந்த கேள்விகளுக்கான பதில்கள்..

Continue reading “கொரோனா வைரஸ் | மூட நம்பிக்கைகள் | கட்டுக்கதைகள்”

கொரோனா வைரஸ் | சுய ஊரடங்கு உத்தரவு | இந்தியா

கொரோனா வைரஸ் நாளை நடக்க இருக்கும் சுய ஊரடங்கு உத்தரவு அவசியமா ? அதன் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறார் மருத்துவர் அஷ்வின் விஜய், நண்பர்கள் மற்றும் அன்பர்களுக்குடன் பகிர்ந்து கொரோனா வைரஸ்யில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வோம்.

 

Continue reading “கொரோனா வைரஸ் | சுய ஊரடங்கு உத்தரவு | இந்தியா”

Sticky post

யார் யார் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்? அமைச்சர் விளக்கம் | கொரோனா

கொரோனா தொற்று இருக்கிறதா என்பது குறித்து யார் யார் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்த பலரும் ரயில் பயணத்தை ரத்து செய்துள்ளனர் என சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை மத்திய ரயில் நிலையத்தில் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை சோதனை செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், பயணிகள் பலருக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், பயணத்தை ரத்து செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

”பயணத்தை தவிர்ப்பது நல்லது என நாங்கள் தொடர்ந்து கூறிவருகிறோம். தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் பேசியபோது, பலரும் ரயில் பயணத்தை ரத்து செய்துள்ளனர் என்ற விவரங்களைப் பகிர்ந்தனர். மக்களிடம் விழிப்புணர்வு சென்றுசேர்ந்துள்ளது என்பதை இது உணர்த்துகிறது எங்களுக்கு மகிழ்ச்சி. இருந்தபோதும், ரயில் நிலையத்தில் மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்ளனர். இங்குவரும் பயணிகளிடம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்,” என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். Continue reading “யார் யார் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்? அமைச்சர் விளக்கம் | கொரோனா”

Sticky post

கொரோனா வைரஸ் நோய் (COVID-19) பொதுமக்களுக்கான ஆலோசனை | WHO (உலக சுகாதார அமைப்பு)

புதிய கொரோனா வைரஸுக்கு எதிரான அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள்

  • உங்கள் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்
  • சமூக தூரத்தை பராமரிக்கவும்
  • கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும்
  • சுவாச சுகாதாரம் பயிற்சி
  • உங்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், ஆரம்பத்தில் மருத்துவ உதவியை நாடுங்கள்
  • உங்கள் சுகாதார வழங்குநர் (மருத்துவர்) வழங்கிய ஆலோசனையைப் பின்பற்றவும்

முகமூடியை எப்போது பயன்படுத்த வேண்டும்

Continue reading “கொரோனா வைரஸ் நோய் (COVID-19) பொதுமக்களுக்கான ஆலோசனை | WHO (உலக சுகாதார அமைப்பு)”

Sticky post

கொரொனாவைரஸ் புதிய தகவல்கள் | Coronavirus Updates | SARS CoV 2/Covid19

டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரொனாவைரஸ் பரவல் இன்று பல உலகநாடுகளுக்கு பரவி உள்ளது, இந்த கானொளியில் இன்று வரை அவ்வைரசை பற்றி நமக்கு தெரிந்தவை என்னவென்ன என பார்ப்போம். Continue reading “கொரொனாவைரஸ் புதிய தகவல்கள் | Coronavirus Updates | SARS CoV 2/Covid19”

Sticky post

சர்வதேச பெண்கள் தின வரலாறு

இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேசப் பெண்கள் தினம் எப்படித் தோன்றியது? நிச்சயமாக கொண்டாட்டத்தில் அல்ல போராட்டத்தில்தான் அது தொடங்கியது.

அமெரிக்கத் தொழிற்சங்க இயக்கத்துக்கும், ரஷ்யப் புரட்சி இயக்கத்துக்கும் இதில் பங்கு உண்டு.
1975-ம் ஆண்டுதான் இந்த நாளை சர்வதேசப் பெண்கள் தினமாக ஐ.நா. அங்கீகரித்தது. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த நாள் பெண்களுக்கு முக்கிய நாளாக உலகின் பல பகுதிகளில் இருந்து வருகிறது.

எப்படித் தொடங்கியது?

வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி ஒரு பேரணியை நடத்தினர். இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி. Continue reading “சர்வதேச பெண்கள் தின வரலாறு”

Sticky post

புற்றுநோய் மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்பு | ஆய்வு முடிவுகள் | உலக புற்றுநோய் தினம்

மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பின் ஓர் அங்கமாக இருக்கும் ஒரு புதிய கண்டுபிடிப்பு மூலம் எல்லா வகையான புற்றுநோய்களையும் குணப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மார்பகம், நுரையீரல், புரோஸ்டேட் சுரப்பி மற்றும் உடலின் பிற பாகங்களில் உண்டாகும் புற்றுநோயை குணப்படுத்தும் முறை ஒன்றை கார்டிஃப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த முறை இன்னும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் சோதிக்கப்படவில்லை என்றாலும், இது புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் மிக்கது என்று ‘நேச்சர் இம்யூனாலஜி’ எனும் மருத்துவ சஞ்சிகையில் வெளியாகியுள்ள இதன் முடிவுகள் கூறுகின்றன.

புதிய கன்டுபிடிப்பு என்ன?

உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு புற்றுநோயை உண்டாக்கும் அணுக்களைத் தாக்கும்.

மனித உடலுக்கு எதாவது தீங்கு ஏற்பட்டுள்ளதா என்று ஆராய்ந்து, அவ்வாறு ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால் அவற்றைத் தாக்கி அழிக்கும் உயிரணுக்கள் டி-உயிரணுக்கள் (T-Cells) எனப்படும். Continue reading “புற்றுநோய் மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்பு | ஆய்வு முடிவுகள் | உலக புற்றுநோய் தினம்”

இந்தியா மொத்தமாக பணமில்லா பரிவர்த்தனைகளை நோக்கி நகர்கிறதா?

UPI பணப்பரிவர்த்தனை முறை அறிமுகமான பிறகு, கார்டு மற்றும் நெட் பேங்கிங் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், “The Era of Rising Fintech” என்ற தலைப்பில் இந்தியா எவ்வாறு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை பின்பற்றுகிறது என்ற அறிக்கையை வெளியிட்டிருந்தது பிரபல பண பரிவர்த்தனை சேவையான ரேஸர்பே (Razorpay). அது இந்தியாவில் டிஜிட்டல் பண பணப் பரிவர்த்தனைகள் எப்படி வளர்ச்சி கண்டுவருகிறது என தெளிவாக எடுத்துகாட்டியது.

தற்போது மீண்டும் “How India makes and accepts payments” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது ரேஸர்பே. இந்த அறிக்கையில் பணமில்லா பரிவர்த்தனை முறைகளை மக்கள் எந்தளவுக்கு பயன்படுத்துகின்றனர் என்றும், எவ்வளவு வேகமாக இந்தியா அந்தப் பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பது புள்ளிவிவரங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. Continue reading “இந்தியா மொத்தமாக பணமில்லா பரிவர்த்தனைகளை நோக்கி நகர்கிறதா?”

Sticky post

மைதாமாவு உணவுகளை தவிர்ப்பது நல்லது

மைதா உணவு மிகவும் ருசிகரமான உணவாக இருந்தாலும் இதை உண்பதால் நமது உடலிற்கு பலவித தீமைகள் ஏற்படுகின்றன. இப்பொழுது நாம் ஏன் மைதா உணவுகளை தவிர்க்கவேண்டும் என்பதை பார்ப்போம்.
மைதா வகை உணவுகளில் அதிக அளவு கிளைசெமிக் இன்டெஸ் கொண்டது. இதனை நீங்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது உங்களின் இரத்த சர்க்கரையின் அளவு மிக வேகமாக அதிகரிக்கும்.

மேலும் இது உங்களுக்கு நீரிழிவு நோயினை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக அமையும். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், மைதா உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு 90 சதவீதம் சர்க்கரை நோய் வரவாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றது. Continue reading “மைதாமாவு உணவுகளை தவிர்ப்பது நல்லது”

Sticky post

இஞ்சிப் பால் – Ginger Milk

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க.
அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க.
சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்?
கவலையை விடுங்க.

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி? Continue reading “இஞ்சிப் பால் – Ginger Milk”

Sticky post

நண்பர்களுடன் அனைத்தையும் பகிர்வதால் வரும் பிரச்சினைகள்!

மனித வாழ்க்கை என்பது எப்பொழுதும் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதாகும். நீங்கள் சார்ந்திருப்பது யாரை வேண்டுமென்றாலும் இருக்கலாம், ஆனால் ஒருவரின் துணையின்றி வாழ்வது என்பது மிகவும் கடினமானது என்பதையும் தாண்டி மிகவும் கொடுமையானது. இன்றைய காலகட்டத்தில் உறவினர்களை விட நண்பர்களை அதிகம் நம்புபவர்களே அதிகம். அதுதான் நல்லதும் கூட, ஆனால் எல்லா தருணங்களிலும் அல்ல. வாழ்க்கையில் நமக்கு கேட்காமலே கிடைக்கும் வரங்கள் என்றால் அது நல்ல நண்பர்கள்தான்.

நாம் நல்லது செய்யும்போது தட்டி கொடுக்கவும், தவறு செய்யும்போது தடுத்து நிறுத்தவும் நிச்சயம் நமக்கு நண்பர்கள் அவசியம். நண்பர்களுடன் வெளிப்படையாக இருப்பது தவறில்லை, ஆனால் உங்கள் வாழ்க்கை தொடர்பான அனைத்து ரகசியங்களையும் பகிர்வது நிச்சயம் முறையாகாது. இவ்வாறு அனைத்தையும் பகிர்வது உங்கள் வாழ்க்கையில் சில பிரச்சினைகளையும், உங்கள் நட்பில் விரிசலையும் ஏற்படுத்தும். அளவான தூரத்துடன் நின்று கொள்வதுதான் ஆரோக்கியமான உறவிற்கு அடிப்படையாகும். இதைத்தான் நம் முன்னோர்களும் கூறியிருக்கிறார்கள். அதன்படி இந்த தகவல்களை உங்கள் நண்பர்களிடம் பகிராமல் இருப்பதே நல்லது.

உங்கள் துணையை பற்றிய செய்திகள்:
ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் தன்னுடைய துணையை பற்றிய தகவல்களை ஒருபோதும் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது. உங்கள் துணையை பற்றி பேசலாம், ஆனால் அவர்களின் தனிப்பட்ட தகவல்களை கூறவேண்டிய அவசியமில்லை. உங்கள் நண்பர்களும் அதை தெரிந்து கொண்டு எதுவும் செய்யப்போவதில்லை.

Continue reading “நண்பர்களுடன் அனைத்தையும் பகிர்வதால் வரும் பிரச்சினைகள்!”

Sticky post

வாழைப்பூவின் நன்மைகள்

வாழைப்பூவை உடலுக்கு சேர்ப்பதால், நம் உடலில் ஏராளமான நன்மைகள் நடக்கிறது. சிலர் வாழைப்பூ பொரியல் மொறுமொறுவென்று சமைத்து உண்பார்கள். சிலர் குழம்பில் சேர்த்து சமைப்பார்கள். ஆனால் வருடத்திற்கு இரண்டு, மூன்று முறைகளாவது நம் உடலுக்கு வாழைப்பூவை சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வாழைப்பூ நம் உணவுகளில் சேர்ப்பதை அதிசயமாக பார்க்கின்றனர். இனியாவது உங்கள் உணவில் வாழைப்பூவை சேர்த்துக் கொள்ளுங்கள் நண்பர்களே!

ஒரு வருடத்தில் மூன்று மற்றும் நான்கு முறையாவது வாழைப்பூவை நம் சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். சாதத்துடன் பிணைந்து உண்ணலாம். இதை நீங்கள் செய்தீர்கள் என்றால் உங்கள் உடலில் உள்ள ரத்தத்தில் கொழுப்பின் அளவு குறையும். ரத்த சோகை நோயை எது தடுக்க வல்லது.

ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாடாக வைக்க உதவுகின்றது.

துவர்ப்பு சுவை உள்ள வாழைப்பூவை நீங்கள் தொடர்ந்து உண்டுவரலாம். இதனால் உங்களுக்கு வாயுத்தொல்லை வராது.

Continue reading “வாழைப்பூவின் நன்மைகள்”

Sticky post

இதயத் துடிப்பு அதிகம் ஆகும் போது உடனே செய்ய வேண்டியவைகள்!

நமக்கு ஏதாவது திடீரென நடந்து விட்டாலோ, பேயைக் கண்டு பயந்தாலோ உடனே நமது இதயம் படபடக்க தொடங்கி விடும். சிலருக்கு இதய படபடப்புடன் வியர்த்து ஒழுகவும் செய்துவிடும். இப்படி இதயம் படபடக்க ஏராளமான காரணங்கள் உள்ளன என்கிறார்கள் மருத்துவர்கள். இருப்பினும் இதயத் துடிப்பு தாறுமாறாக எகிறும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

இப்படி இதயப் படபடப்பிற்கு உடனே மருத்துவ சிகிச்சை செய்வது நல்லது. ஆனால் அதற்கு முன்பாக சில எளிமையான முதலுதவிகளையும் மேற்கோள்ள வேண்டியிருக்கும். இந்த முதலுதவி டிப்ஸ்கள் உங்கள் இதயப் படபடப்பை குறைக்க உதவும். சரி வாங்க அது எந்த மாதிரியான டிப்ஸ்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதயத் துடிப்பு அதிகரிக்க பொதுவான காரணங்கள்:

* மாரடைப்பு

* ஏட்ரியல் (இதய மேலறை சுருக்கம்)

* தைராய்டு

* ஒழுங்கற்ற இதயத் துடிப்பு

இதயத் துடிப்பை கட்டுப்படுத்தும் சில வீட்டு வைத்தியங்கள்: Continue reading “இதயத் துடிப்பு அதிகம் ஆகும் போது உடனே செய்ய வேண்டியவைகள்!”

கிரேட் உதவித்தொகை 2020

இந்திய மாணவர்கள் உதவித்தொகையுடன் பிரிட்டனில் படிக்க சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் யு.கே.,வின் பிரபல கிரேட் ஸ்காலர்ஷிப் -2020 திட்டத்தை பிரிட்டிஷ் கவுன்சில் அறிவித்துள்ளது.

உதவித்தொகை திட்டம்:
இந்த உதவித்தொகையை பெறுவதன் மூலம் யு.கே.வில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்திய மாணவர்களால் உயர்கல்வியை பெற முடியும். கல்வி நிறுவனங்களுக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இந்த உயர்கல்வி வாய்ப்பை பெறலாம்.

பொதுவான தகுதிகள்:
* இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். உரிய கால அவகாசம் உள்ள இந்திய பாஸ்போர்ட் பெற்றிருப்பது அவசியம்.
* யு.கே.,வில் முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ள அதற்குரிய படிப்பு மற்றும் துறைக்கு ஏற்ப இளநிலை பட்டப்படிப்பை பெற்றிருக்க வேண்டும்.
* யு.கே., உயர்கல்வி நிறுவனங்கள் வரையறுத்துள்ள ஆங்கில புலமையை பெற்றிருப்பது அவசியம். அதாவது, உரிய ஆங்கில மொழி புலமை பரிசோதனை தேர்வில் குறிப்பிட்ட மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
* இந்த உதவித்தொகை திட்டத்தில் பங்குபெறும் கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் மாணவர் சேர்க்கையை பெற வேண்டும்.

குறிப்பு: Continue reading “கிரேட் உதவித்தொகை 2020”

கல்லூரியில் படிப்பதென்பது..

பள்ளிப் படிப்பு வரை எப்படியோ முடித்தாகிவிட்டது என்று, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பலரும் நிம்மதி பெருமூச்சு விடுவர். பள்ளிப் படிப்பு என்பது, குறிப்பாக பிளஸ் 2 படிப்பானது, ஒருவரின் உயர்கல்வி வாய்ப்பை நிர்ணயிக்கும் அம்சம் மட்டுமே.

ஆனாலும், தனித்திறமையும், சாதனை வேட்கையும் கொண்ட மாணவர்கள், பிளஸ் 2 படிப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றாலும்கூட, வாழ்க்கையில் முன்னேறி, புகழ்பெற்று விடுகிறார்கள்.

இங்கே, கல்லூரிப் படிப்பு என்று எடுத்துக்கொண்டால், அது கலை – அறிவியல் படிப்போ, மருத்துவப் படிப்போ, பொறியியல் படிப்போ, மேலாண்மை படிப்போ மற்றும் இன்னபிற படிப்புகளோ, அவை எதுவானாலும், அப்படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், தங்களின் பள்ளிப் படிப்பு மனோநிலையை கட்டாயம் தாண்டி வரவேண்டியுள்ளது. இல்லையெனில், அவர்கள் பல விஷயங்களிலும் பின்தங்கும் அவலநிலை ஏற்படுகிறது.

பள்ளிப் படிப்பை பொறுத்தவரை, இந்தியா போன்ற நாடுகளில், அதன் பண்பாடே, வேறுமாதிரியாக உள்ளது. பாடப்புத்தகம் மட்டுமே அங்கு பிரதானம். விளையாட்டு மற்றும் இதர திறமைகளை வளர்ப்பது குறித்த செயல்பாடுகள், பெயரளவிற்கே நடக்கும். அதுவும், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு வந்துவிட்டால் போதும், சொல்லவேத் தேவையில்லை. நிலைமையே தலைகீழ்.

Continue reading “கல்லூரியில் படிப்பதென்பது..”

தினமும் ஆரோக்கியம் என்று கருதி ஃப்ரெஷ் ஜூஸ் பருகுபவரா நீங்கள்?

Is Fresh Juice Good for You?

ஜிம்முக்கு அல்லது வாக்கிங் சென்று விட்டு வரும் போது தினமும் ஜூஸ் பருகுபவரா நீங்கள்?

ஹோட்டல்களுக்கு சென்றால் கட்டாயம் கடைசியாக ஃப்ரெஷ் ஜூஸ் பருகும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? உங்களுக்கானது தான் இந்தப் பதிவு

நம்மில் பலரும் தினமும் ஃப்ரெஷ் ஜூஸ் என்ற பெயரில் தினமும் தங்களுக்குப் பிடித்த பழத்தை சாறாக்கி பருகுவார்கள். குளிர்பானங்களை தவிர்த்து விட்டு தினமும் பழச்சாறு அருந்துவதை ஹாஸ்டலில் வசிக்கும் மாணவ மாணவிகள்

நம்மில் பலரும் தினமும் ஃப்ரெஷ் ஜூஸ் என்ற பெயரில் தினமும் தங்களுக்குப் பிடித்த பழத்தை சாறாக்கி பருகுவார்கள். குளிர்பானங்களை தவிர்த்து விட்டு தினமும் பழச்சாறு அருந்துவதை ஹாஸ்டலில் வசிக்கும் மாணவ மாணவிகள் செய்து வருவதை எனது கல்லூரி காலம் தொட்டுக் கண்டு வருகிறேன்.

நான் கல்லூரி காலங்களில் தினமும் பழச்சாறு அருந்தும் பழக்கத்தை ஆரோக்கியமானது என்று எண்ணி தினமும் கடைபிடித்து வந்தேன். பெற்றோர்கள் கூட குளிர்பானங்கள் எனும் sweetened sugar beverages குடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும்,பழச்சாறு பருகுவது ஆரோக்கியமானது என்று எண்ணியே அதை ஊக்குவிப்பதைக் காண முடிகிறது.

நீரிழிவு நோயாளிகள் முதல் மருத்துவமனைகளில் அட்மிட் செய்யப்படும் நோயாளிகளுக்கு கூட பழச்சாறு தரப்படுவதைக் கண்டு வருகிறோம்.

சரி உண்மையில் மருத்துவ ஆராய்ச்சிகளின்படி பழச்சாறு அருந்துவது நல்லதா? கெட்டதா? தொடர்ந்து பார்ப்போம் Continue reading “தினமும் ஆரோக்கியம் என்று கருதி ஃப்ரெஷ் ஜூஸ் பருகுபவரா நீங்கள்?”

தைப் பொங்கல் வைப்போம்

பொங்கல் வைப்போம் புத்தரிசிப் பொங்கல் வைப்போம் சர்க்கரைப் பொங்கல் வைப்போம் வீட்டு வாசலில் மாட்டுப் பொங்கல் வைப்போம் முன் வாசலில் கோல மிட்டு, பெண்டிர் கும்மி அடித்து செங்கரும்புப் பந்த லிட்டு சீராய்த் தோரணம் கட்டிப் பால் பொங்கல் வைப்போம் ! புத்தாடை அணிந்து பூரிப்போடு பொங்கல் வைப்போம். பொழுது புலர்ந்ததும் விடி வெள்ளி விழித்ததும் வெண் பொங்கல் வைப்போம். கூட்டாகத் தமிழர் கொண்டாடும் அறுவடைத் திருவிழா கோலகல மாகப் பொங்கலோ பொங்கல் என்று மங்கையர் பாடிக் கோலடித்து பொங்கல் வைப்போம். தைப் பொங்கல் வைப்போம். – சி. ஜெயபாரதன், கனடா Continue reading தைப் பொங்கல் வைப்போம்

Rate this:

Sticky post

தொழில்நுட்பங்கள் குழந்தைகளின் வளர்ச்சியை எப்படியெல்லாம் பாதிக்கிறது தெரியுமா?

இப்போதெல்லாம், தொழில்நுட்பம் குழந்தைகளின் வளர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம், உண்மையில், தொழில்நுட்பம் இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும் இது குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கிறது.
நிபுணர்களின் கூற்றுப்படி, கடந்த 20 ஆண்டுகளில் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் வழிகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இப்போதெல்லாம், பெரும்பாலான பெற்றோர்கள் இந்த ஐந்து தவறுகளை செய்கிறார்கள், இது குழந்தைகளை பாதிக்கிறது.
குழந்தை அழும்போது மொபைல் கொடுப்பது
இப்போதெல்லாம், ஸ்மார்ட்போன் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் உள்ளது மற்றும் ஒரு குழந்தையை அமைதிப்படுத்த, இது பெற்றோருக்கு சிறந்த கருவியாகும். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மொபைலில் வீடியோக்கள் அல்லது கேம்களை வழங்குகிறார்கள், இது குழந்தையின் கவனத்தை திசை திருப்பி அவர்களை அமைதிப்படுத்துகிறது. ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் படி, மொபைலின் நீல ஒளி குழந்தைகளுக்கு (ஆறு மாதங்களுக்கும் குறைவான வயது) ஆபத்தானது மற்றும் அவர்களின் கண்பார்வை சேதப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது தவிர, மூன்று வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு, 60 நிமிடங்களுக்கு மேல் (தினசரி) மொபைலைப் பயன்படுத்துவது அவர்களின் மூளையின் பல பகுதிகளை வளர்ச்சியடையாமல் விட்டுவிடுகிறது.

Continue reading “தொழில்நுட்பங்கள் குழந்தைகளின் வளர்ச்சியை எப்படியெல்லாம் பாதிக்கிறது தெரியுமா?”

மூளையின் தகவல்களை கணினியில் பதிவிறக்கலாம்

Elon Musk NeuraLink எனும் புதிய ஆராய்ச்சியை செய்து வருகிறார். இதன் மூலம் மனித மூளையின் உள்ளே நுண்ணிய வயர்களை செலுத்தி மூளையின் நரம்புகளில் என்ன தகவல்கள் பயணிக்கின்றன என்பதை ஆய்வு செய்வது , புதிய தகவல்களை பதிவு செய்வதல் போன்ற ஆய்வுகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. Source : techtamil.com Continue reading மூளையின் தகவல்களை கணினியில் பதிவிறக்கலாம்

Rate this:

தனி நபர் தகவலை விற்க மாட்டோம் – சுந்தர் பிச்சை / Google

Google நிறுவனம், அதன் பயனர் தகவலை (User’s Information), மூன்றாம் நபருக்கு(3rd Parties) எந்த காலத்திலும் விற்காது’ என, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், தகவல் திருட்டு அதிகரித்து வருவதால், மக்களுக்கு தங்களைப் பற்றிய தகவல்களின் பயன்பாடு, பகிர்தல் குறித்த கவலை அதிகரித்துள்ளது.

Google நிறுவனம், எந்தவிதத்திலும் சமரசம் செய்து கொள்ளாத இரு கொள்கைகளை கடைப்பிடிக்கிறது. அதன்படி, கூகுள் நிறுவனம், தனி நபர் தகவல்களை, எந்த காலத்திலும் மூன்றாம் நபருக்கு விற்காது.

இரண்டாவது, தங்களை பற்றிய தகவல்கள், எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமையை, கூகுள் நிறுவனம், தனி நபருக்கு வழங்குகிறது.தகவல் பாதுகாப்பு என்பது, கட்டண சேவைகளை பெறுவோருக்கு மட்டும் கிடைக்கக் கூடிய, ஆடம்பர பொருளாக இருக்கக் கூடாது. அது, பாரபட்சமின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே, கூகுளின் அடிப்படை கொள்கை.

கூகுள் தேடல் பொறி, ஹார்வர்டு பல்கலை பேராசிரியருக்கும், இந்தோனேஷியாவிலிருக்கும் கிராமப்புற மாணவனுக்கும், பேதமின்றி தகவல்களை வழங்குவதில் இருந்து, இதை புரிந்து கொள்ளலாம். Continue reading “தனி நபர் தகவலை விற்க மாட்டோம் – சுந்தர் பிச்சை / Google”

தெளிவான குறிக்கோளும் தன்னம்பிக்கை உங்களிடம் இருந்தால்…

தெளிவான குறிக்கோளும் தன்னம்பிக்கை உங்களிடம் இருந்தால் வெற்றி நிச்சயம் – Dr. Ashwin Vijay Source : Strength India Movement Continue reading தெளிவான குறிக்கோளும் தன்னம்பிக்கை உங்களிடம் இருந்தால்…

Rate this:

Sticky post

வாக்குச்சாவடி எங்கிருக்கிறது என்று தெரியவில்லையா? Call 1950 – Elections – 2019

வாக்களிக்க வேண்டும்: ஆனால் தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 30.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஏராளமான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருவதைக் காண முடிந்தது. முக்கியப் பிரபலங்களும், திரை நட்சத்திரங்களும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். அண்ணாநகர் உள்ளிட்ட சில வாக்குச்சாவடிகளில் திருமணமான புதிய தம்பதிகள் வாக்களிக்க வந்ததையும் காண முடிந்தது. இந்த நிலையில், வாக்களிக்க வேண்டும், ஆனால் எனது வாக்குச்சாவடி எங்கே இருக்கிறது, எனது பெயர் வாக்காளர் பட்டியலில் … Continue reading வாக்குச்சாவடி எங்கிருக்கிறது என்று தெரியவில்லையா? Call 1950 – Elections – 2019

Rate this:

Sticky post

ஜிம்மிற்கு செல்வதற்கு முன் இவற்றையெல்லாம் உறுதிசெய்துகொள்ளுங்கள்

சீரான உணவுமுறையும், உடற்பயிற்சியும் இல்லாமல் நீங்கள் எந்த முறையில் முயற்சித்தாலும் அது வீண்தான். சிலர் விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமென கடுமையான உடற்பயிற்சியும், மிகவும் கட்டுப்பாடான டயட்டும் மேற்கொள்வார்கள். இதனால் அவர்களின் ஆரோக்கியம் மேலும் பாதிப்படையைத்தான் செய்யும். எடை குறைப்பை தொடங்கும் முன் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றை இங்கு பார்க்கலாம்.

ஜிம்மில் குடியிருக்க வேண்டிய அவசியமில்லை

உடற்பயிற்சி செய்ய தொடங்கிய பின் பெரும்பாலும் அனைவரும் மணிக்கணக்கில் நேரத்தை ஜிம்மிலியே செலவிடுவார்கள். இது அவசியமற்றது. குறைந்தது 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை ஜிம்மில் உடற்பயிற்சிகள் செய்தால் போதும், நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை விரைவில் காணலாம். வேண்டுமென்றால் ஜிம் முடிந்த பின் மிதமான நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

அனைத்தும் உங்கள் மூளையில்தான் உள்ளது

எடை குறைப்பு என்பது உங்கள் மனநிலையை 100 சதவீதம் மாற்றக்கூடியது. உங்கள் உடலமைப்புக்கு ஏற்ற உணவுமுறையை உங்கள் பயிற்சியாளரிடம் இருந்து கேட்டுக்கொள்வதுடன் அதனை கண்டிப்பாக கடைபிடிக்கவும் செய்ய வேண்டும். ஆனால் உங்கள் மூளை உங்கள் எண்ணத்தை அடிக்கடி மாற்றிக்கொள்ள செய்யும். எனவே அதற்கு இடம் கொடுக்காமல் உறுதியாய் இருந்து உடற்பயிற்சியை செய்ய வேண்டும். Continue reading “ஜிம்மிற்கு செல்வதற்கு முன் இவற்றையெல்லாம் உறுதிசெய்துகொள்ளுங்கள்”

Sticky post

Google AdSense – கூகுள் ஆட்சென்ஸ் இனி தமிழில்

கூகுள் ஆட்சென்ஸ் (Google AdSense) தனது அங்கீகார மொழிப் பட்டியலில் தற்போது தமிழை இணைத்துள்ளது. சர்வதேச அளவில் லட்சக்கணக்கான வலைப்பூ உரிமையாளர்கள் மற்றும் தமிழ் இணைய தள நிர்வாகிகளை இச்செய்தி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் இணைய தளங்களில் கூகுள் விளம்பரங்கள் காட்டுவதற்கு இதுநாள் வரை கூகுள் தடை விதித்திருந்தது. தமிழ் வலைப்பதிவர்கள், இணையதள நிர்வாகிகளின் கடந்த பத்து வருடங்களுக்கு மேலான கடும் கோரிக்கைக்கு தற்போது செவி சாய்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது கூகுள்.

We’re excited to announce the addition of Tamil, a language spoken by millions of Indians, to the family of AdSense supported languages. – Google

கூகுள் விளம்பரங்கள் எவ்வாறு வேலை செய்கின்றன? Continue reading “Google AdSense – கூகுள் ஆட்சென்ஸ் இனி தமிழில்”

Sticky post

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்

10687874_10152491447873450_6071663527280104509_oபேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828

மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )

மனிதஉரிமைகள் ஆணையம் ————-––044-22410377

மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-09383337639

போலீஸ் SMS :- —————————————-9500099100 Continue reading “நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்”

Sticky post

வைட்டமின் மாத்திரைகள் அறிந்ததும் அறியாததும்!

n9QiAXGஎப்பவும் டயர்டா இருக்கு. சுறுசுறுப்பா எந்த வேலையும் செய்ய முடியலை, முடி கொட்டுது. சத்துக்குறைவா இருக்கும்னு தோணுது. ஏதாவது சத்து மாத்திரை எழுதித் தாங்க டாக்டர்’ இப்படிக் கேட்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொண்டதுபோய், காலையில் இரண்டு, மதியம் ஒன்று, இரவுக்கு மூன்று என மாத்திரைகள் மூலமே ஆரோக்கியமாக வாழ்ந்துவிடலாம் என நம்பத் தொடங்கிவிட்டோம். ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டு டாக்டரின் ஆலோசனைப்படி மாத்திரை எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், சுயமாக ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடுவதால் பாதிப்புகள்தான் அதிகம்.

யாரெல்லாம் வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம், எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளலாம், வைட்டமின் மாத்திரைகளிலும் பக்கவிளைவுகள் உண்டா ?

“கண் சற்று மங்கலாக இருந்தால் அதை உணவு மூலம் எப்படி சரி செய்யலாம் என யோசிப்பதை விட்டு விட்டு, ஏதாவது மாத்திரை தருமாறுதான் கேட்கின்றனர். பொதுவாக வைட்டமின்களை, நீரில் கரைபவை, கொழுப்பில் கரைபவை என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இதில், பெரும்பாலானவற்றை நம் உடல் தானாக உற்பத்தி செய்ய முடியாது. எனவே உணவு மற்றும் மாத்திரைகள் மூலமாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.

நீரில் கரையும் தன்மையுள்ள பி மற்றும் சி வைட்டமின்கள் உடலில் அதிகம் சேர்ந்தாலும் சிறுநீரில் கரைந்து எளிதில் வெளியேறிவிடும். எனவே, இந்த இரண்டு வைட்டமின் களை உணவின் மூலமாக எடுத்துக்கொள்ள முடியாத போது, மாத்திரைகளாக எடுத்துக் கொள்ளலாம். Continue reading “வைட்டமின் மாத்திரைகள் அறிந்ததும் அறியாததும்!”

Sticky post

“இதுவரை சூரியனை 83 முறை சுற்றி வந்துவிட்டேன்” – டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

15-apj-abdul-kalam-600நமது இளைஞர்கள் சக்தி வாய்ந்தவர்கள், பொறாமைக் குணம் இல்லாதவர்கள், வளர்ந்த இந்தியாவில் வாழ வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்கள் என்று இந்திய இளைஞர் சமுதாயம் குறித்து பெருமையுடன் பேசுகிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

மக்களின் ஜனாதிபதி என்ற பெருமை கொண்டவரும், இந்திய இளைஞர்கள், மாணவர் சமுதாயத்தின் ஊக்க சக்தியாக திகழ்பவருமான அப்துல் கலாம், இன்று தனது 83வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை அவர் தனது பாணியில் எப்படிச் சொல்கிறார் தெரியுமா… “சூரியனை 83 முறை சுற்றி வந்துவிட்டு இன்று 84வது சுற்றுக்குள் நான் நுழைகிறேன்”. அதாவது தான் பிறந்து 83 வருடத்தில் சூரியனை பூமி 83 சுற்றி வந்துவிட்டதை சொல்கிறார் நமது கலாம்.

அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கையில் எதுவுமே மாறவில்லை. எல்லாமே அப்படியேதான் இருக்கிறது. நள்ளிரவைத் தாண்டி 1 மணி வரை விழித்திருக்கிறார். படிக்கிறார், தனக்கு வரும் மெயில்களுக்குப் பதில் அனுப்புகிறார்.

டெல்லியின் ராஜாஜி மார்க்கில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் தன்னைப் பார்த்து பிறந்த நாள் வாழ்த்துக் கூற வந்த விசிட்டர்களுடன் பிசியாக இருந்த சமயத்திலும், “ஒன்இந்தியா” வாசகர்களுக்காக பிரத்யேகமான பேட்டி அளித்தார் கலாம்.

” ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தருணமும் எனக்கு முக்கியமானது. ஒவ்வொரு ஜனவரி 1ம் தேதியும், அந்த ஆண்டில் எனது பணி என்ன, எனது இலக்கு என்ன என்பதை நான் நிர்ணயிக்கிறேன். அதை நோக்கி நான் செயல்படத் தொடங்குகிறேன். எனது அனுபவத்தின் அடிப்படையில், நான் திட்டமிடுவதில், 60 முதல் 70 சதவீதம் வரை நான் நினைத்ததை செய்து விடுகிறேன். எனது இலக்கு என்றுமே நிற்பதில்லை என்று புன்னகையுடன் கூறுகிறார் கலாம். Continue reading ““இதுவரை சூரியனை 83 முறை சுற்றி வந்துவிட்டேன்” – டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.”

உடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை

10429285_794593500599442_7750318157903284480_nதிராட்சையில் 16 சதவிகிதத்துக்கும் குறைவான ஈரப்பதம் உள்ளதையே உலர் திராட்சை என்கிறார்கள். மிகவும் பழைய உலர் திராட்சையை வாங்குவதைவிட நடுத்தரமானதை தேர்ந்தெடுத்து வாங்குவது சிறந்தது.

உலர் திராட்சையில் அதிக அளவு ஆற்றல், ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் உள்ளன.மேலும், இதில் பல ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது.

சத்துக்கள் – பலன்கள்: இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது நீரில் கரையாத சுருங்கிய நிலையில் உள்ள நார்ச்சத்து, வயிற்றுக்குள் சென்றதும் நீரை உறிஞ்சிவிடும். இதனால் சிறுகுடலில் தங்கிய உணவுப் பொருட்களை இயற்கையான முறையில் வெளியேற்ற உதவும். நார்ச்சத்தானது வயிற்றில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சுவதால் வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு இயற்கையான முறையில் தீர்வு அளிக்கிறது. Continue reading “உடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை”

எந்தெந்த உணவுப்பொருளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்..?

எந்தெந்த உணவுப்பொருளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்..? பழங்கள் அசைவ உணவுகள் திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள். ஆப்பிள்கள் ஒரு மாதம். சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள். அன்னாசி (முழுசாக) 1 வாரம். (வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள். வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள். சமைத்த மீன் 3-4 நாட்கள். பிரஷ் மீன் 1-2 நாட்கள். ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள். பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள். உலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய் ஒரு வாரம். பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 … Continue reading எந்தெந்த உணவுப்பொருளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்..?

Rate this:

மருந்தை கவனமாக பயன்படுத்துங்கள்….

Allergy-Medications-Safe-for-Kids-article1. ஒரு நோய்க்குத் தரப்படும் மருந்தின் பக்க விளைவுகளே சிலவேளை இன்னொரு நோயாக வெளிப்படலாம். இருமலுக்குத் தரப்படும் சில மருந்துகள் தூக்கத்தை தூண்டும். சில மருந்துகள், சோர்வு, அசதி, மயக்கம், வயிற்றுப்புண், மூட்டுவலி உண்டாக்கும்.

2. எடுத்ததற்கெல்லாம் வலி நிவாரண மாத்திரைகளை விழுங்குவது குடல் புண்ணுக்கு விருந்து வைத்து அழைக்கும்.

3. நோயைப் பற்றியும் தரப்படும் மருந்துக்களின் தன்மைகளையும், பக்க விளைவுகளயும் பற்றி இணைய தளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

4. மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகள் வாங்கி சுய மருத்துவம் செய்யாதீர்கள். தவறாகப் பயன்படுத்தபடும் மருந்துகள் உயிரைக் குடித்துவிடும்.

5. சில நோயாளிகளுக்கு சில மருந்துகள் கொடுக்கக் கூடாது. சில மருந்தை சேர்த்துக் கொடுக்க வேண்டியிருக்கும்.

6. மருந்தின் அளவு நோயாளியின், வயது மற்றும் எடைக்குத் தக்கபடி மாறுபடும் .

7. ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை அரைகுறையாக சாப்பிட்டு நிறுத்தக் கூடாது. நோய் கிருமிகள் அதிக பலம் பெற்றுவிடும்.

8. எடுத்ததெற்கெல்லாம் ஆன்டிபயாடிக் மாத்திரைகள் குழந்தைகளுக்கு கொடுப்பது பிறகு தேவைப்படும் நேரம் அந்த மருந்து செயல் படாதவாறு நோய் கிருமிகள் அந்த மருந்தை எதிர்த்து நிற்கும் திறன் பெற்று விடுகின்றன.

9. மருந்துகள் ஊட்டச்சத்து அல்ல. தேவையின்றி உடலில் ஏற்றிக் கொள்ளக் கூடாது.

10. அலோபதி மருத்துவர் எழுதித்தரும் மருந்துகளுக்கு நிகரான ஆயுர்வேத மருந்துகளை நீங்களாக சாப்பிடாதீர்கள். Continue reading “மருந்தை கவனமாக பயன்படுத்துங்கள்….”

Sticky post

உண்மையான நண்பர்களைச் சேர்ப்பதுதான் உயிருக்கு பலம் தரும்…ரஜினி

best-friendsசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  திரையுலகில் மட்டுமில்லாமல் வெளியிலும் மற்றவர்களுடன் பழகுவதில் அற்புதமான மற்றும் எளிமையான மனிதர் என்று அவருடன் இருப்பவர்கள் எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ரஜினி எந்த மேடை விழாக்களில் கலந்து கொண்டாளும், சிறிய குட்டி கதைகளை சொல்லி வருவார்.

அவ்வாறு நட்பை பற்றி அவர் கூறிய ஒரு சிறுகதையை நம் உடையாநாடு வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளத்தான் இப்பதிவு..

ரஜினி சொன்ன கதை இது :

ஓரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான். ஒரு சமயம் பணக்கார நண்பனுக்கு கொஞ்சம் பணத்தட்டுபாடு வந்துடுச்சி. Continue reading “உண்மையான நண்பர்களைச் சேர்ப்பதுதான் உயிருக்கு பலம் தரும்…ரஜினி”