வைட்டமின் மாத்திரைகள் அறிந்ததும் அறியாததும்!

n9QiAXGஎப்பவும் டயர்டா இருக்கு. சுறுசுறுப்பா எந்த வேலையும் செய்ய முடியலை, முடி கொட்டுது. சத்துக்குறைவா இருக்கும்னு தோணுது. ஏதாவது சத்து மாத்திரை எழுதித் தாங்க டாக்டர்’ இப்படிக் கேட்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொண்டதுபோய், காலையில் இரண்டு, மதியம் ஒன்று, இரவுக்கு மூன்று என மாத்திரைகள் மூலமே ஆரோக்கியமாக வாழ்ந்துவிடலாம் என நம்பத் தொடங்கிவிட்டோம். ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டு டாக்டரின் ஆலோசனைப்படி மாத்திரை எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், சுயமாக ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடுவதால் பாதிப்புகள்தான் அதிகம்.

யாரெல்லாம் வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம், எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளலாம், வைட்டமின் மாத்திரைகளிலும் பக்கவிளைவுகள் உண்டா ?

“கண் சற்று மங்கலாக இருந்தால் அதை உணவு மூலம் எப்படி சரி செய்யலாம் என யோசிப்பதை விட்டு விட்டு, ஏதாவது மாத்திரை தருமாறுதான் கேட்கின்றனர். பொதுவாக வைட்டமின்களை, நீரில் கரைபவை, கொழுப்பில் கரைபவை என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இதில், பெரும்பாலானவற்றை நம் உடல் தானாக உற்பத்தி செய்ய முடியாது. எனவே உணவு மற்றும் மாத்திரைகள் மூலமாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.

நீரில் கரையும் தன்மையுள்ள பி மற்றும் சி வைட்டமின்கள் உடலில் அதிகம் சேர்ந்தாலும் சிறுநீரில் கரைந்து எளிதில் வெளியேறிவிடும். எனவே, இந்த இரண்டு வைட்டமின் களை உணவின் மூலமாக எடுத்துக்கொள்ள முடியாத போது, மாத்திரைகளாக எடுத்துக் கொள்ளலாம். Continue reading

Advertisements

எந்தெந்த உணவுப்பொருளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்..?

உணவுப்பொருளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்..?
உணவுப்பொருளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்..?

எந்தெந்த உணவுப்பொருளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்..?

பழங்கள் அசைவ உணவுகள் திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்.

ஆப்பிள்கள் ஒரு மாதம்.

சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்.

அன்னாசி (முழுசாக) 1 வாரம். (வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்.

வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள்.

சமைத்த மீன் 3-4 நாட்கள்.

பிரஷ் மீன் 1-2 நாட்கள்.

ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள்.

பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள். உலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய் ஒரு வாரம்.

பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள்.

சமைத்த கோழி இறைச்சி 2-3 நாட்கள்.

காய்கறிகள் புரோக்கோலி, காய்ந்தபட்டாணி 3-5 நாட்கள். முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள்.

வெள்ளரிக்காய் ஒரு வாரம்.

தக்காளி 1-2 நாட்கள்.

காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம்.

காளான் 1-2 நாட்கள்.

பால் பொருட்கள் பால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு வாரம். பதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம், சுவையூட்டப்பட்ட பால், அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தேதியில் இருந்து, 10-14 நாட்கள்.

மோர் 2 வாரங்கள்.

தயிர் 7-10 நாட்கள்.

தகவல் பகிர்வு – Jahabar Amanullah – Udayanadu / KSA

மருந்தை கவனமாக பயன்படுத்துங்கள்….

Allergy-Medications-Safe-for-Kids-article1. ஒரு நோய்க்குத் தரப்படும் மருந்தின் பக்க விளைவுகளே சிலவேளை இன்னொரு நோயாக வெளிப்படலாம். இருமலுக்குத் தரப்படும் சில மருந்துகள் தூக்கத்தை தூண்டும். சில மருந்துகள், சோர்வு, அசதி, மயக்கம், வயிற்றுப்புண், மூட்டுவலி உண்டாக்கும்.

2. எடுத்ததற்கெல்லாம் வலி நிவாரண மாத்திரைகளை விழுங்குவது குடல் புண்ணுக்கு விருந்து வைத்து அழைக்கும்.

3. நோயைப் பற்றியும் தரப்படும் மருந்துக்களின் தன்மைகளையும், பக்க விளைவுகளயும் பற்றி இணைய தளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

4. மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகள் வாங்கி சுய மருத்துவம் செய்யாதீர்கள். தவறாகப் பயன்படுத்தபடும் மருந்துகள் உயிரைக் குடித்துவிடும்.

5. சில நோயாளிகளுக்கு சில மருந்துகள் கொடுக்கக் கூடாது. சில மருந்தை சேர்த்துக் கொடுக்க வேண்டியிருக்கும்.

6. மருந்தின் அளவு நோயாளியின், வயது மற்றும் எடைக்குத் தக்கபடி மாறுபடும் .

7. ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை அரைகுறையாக சாப்பிட்டு நிறுத்தக் கூடாது. நோய் கிருமிகள் அதிக பலம் பெற்றுவிடும்.

8. எடுத்ததெற்கெல்லாம் ஆன்டிபயாடிக் மாத்திரைகள் குழந்தைகளுக்கு கொடுப்பது பிறகு தேவைப்படும் நேரம் அந்த மருந்து செயல் படாதவாறு நோய் கிருமிகள் அந்த மருந்தை எதிர்த்து நிற்கும் திறன் பெற்று விடுகின்றன.

9. மருந்துகள் ஊட்டச்சத்து அல்ல. தேவையின்றி உடலில் ஏற்றிக் கொள்ளக் கூடாது.

10. அலோபதி மருத்துவர் எழுதித்தரும் மருந்துகளுக்கு நிகரான ஆயுர்வேத மருந்துகளை நீங்களாக சாப்பிடாதீர்கள். Continue reading

முடி கொட்டுதலைக் கட்டுப்படுத்தும் சில டயட் டிப்ஸ்…

Hair-Loss-Techniquesஇன்றைய சுகாதாரமற்ற வாழ்க்கை சூழலில், மக்கள் பல உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அவைகளில் முக்கியமான ஒரு பிரச்சனையாக தலை முடி கொட்டுதல் பார்க்கப்படுகிறது. அதனால் பல பேர் இன்று அவதிப்பட்டு வருகின்றனர். ஏன் இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

முடி கொட்டுதல் என்பது பொடுகு, சூரிய வெளிச்சத்தில் அதிகம் தென்படுவது போன்ற வெளிப்புற காரணிகளால் மட்டுமல்ல. ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களாலும் கூட அது ஏற்படுகிறது. இயல்பான முடி வளர்ச்சிக்கு தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்காத போது, முடி கொட்டுதல் பிரச்சனைக்கு நீங்கள் ஆளாவீர்கள்.

அழகான மற்றும் நீளமான கூந்தல் வேண்டுமா? அப்ப ஆரஞ்சு பழத்தை யூஸ் பண்ணுங்க… பல காலமாக இதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், உங்கள் தலையில் சீக்கிரத்திலேயே வழுக்கை விழுந்து விடும். இந்த நிலையை தடுக்க, ஆரோக்கியமான உணவுகளையும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். உங்கள் முடி ஆரோக்கியமாக இருக்க கீழ்கூறிய அனைத்தும் முக்கியம். Continue reading

” இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் “

இஞ்சி டீyயின் நன்மைகள்
இஞ்சி டீயின் நன்மைகள்

உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பையயும் இஞ்சி கலந்த டீ-யின் மூலம் பெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

குளிர் மிகுந்த நேரத்தில் ஒரு கப் சூடான இஞ்சி டீயை விட சிறந்த பானம் எதுவாகவும் இருக்க முடியாது. அதிக அளவு வைட்டமின் சி, மெக்னீசியம், மற்றும் இதர கனிமங்களை கொண்ட இஞ்சி வேரை சாப்பிடுவது உடம்பிற்கு நன்மை விளைவிக்கும்.

இஞ்சி டீ, உங்களுக்கு மிகவும் பிடித்த பானமாக மட்டுமல்லாமல் அது குளிர் காலத்தில் வரும் உடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு பெரும் தீர்வாகவும் உள்ளது. ஆகையால் இதை ஒரு மருந்துப் பொருளாகவும் இஞ்சியைக் கருதுகின்றனர்.

அதிலும் இஞ்சி டீ யை செய்ததும், அதனுடன் பெப்பர் மின்ட் (மிளகு கீரை), தேன் ஆகியவற்றை கலந்து டீயை அருந்தலாம். இதனால் இஞ்சியின் சுவை சற்றே மறைந்து காணப்படும். அதுமட்டுமில்லாமல் டீயின் சுவையும் மிகைப்படும்.

இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! Continue reading