உலகம் இறைவனின் சந்தை மடம்…

உலகம் இறைவனின் சந்தை மடம்
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
உலகம் இறைவனின் சந்தை மடம்
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
இதுவல்ல நமக்கு சொந்த இடம்
இதுவல்ல நமக்கு சொந்த இடம்
அங்கே இருக்குது வேறு உரிய இடம்
உரிய இடம்…

கருவூரில் இருந்து புறப்படுவான் கொஞ்சம்
களைப்பாற இங்கே தங்கிடுவான்
உறவோடு உரிமையும் கொண்டாடுவான் அவன்
ஒருவருக்கும் சொல்லாமல் ஓடிடுவான்

இருப்பவன் இங்கேயே நிலைப்பதில்லை யாரும்
இதை விட்டுப் போனவன் திரும்பவில்லை
மறுப்பவன் இதனை யாரும் இல்லை
மனதில் ஆசைகள் மட்டும் குறையவில்லை

பிறந்ததும் பாங்குண்டு தொழுகை இல்லை அவன்
இறந்ததும் தொழுகைக்கு பாங்கு இல்லை
புரிந்தவன் ஆணவம் கொள்வதில்லை இதை
புரியாதவன் அறிவு தெளிவதில்லை

தொடரும் கதை ஒரு நாள் முடிந்து விடும் அந்த
தூயோனின் தீர்ப்பு அதைக் காட்டி விடும்
நடை போட்ட முன்னோர்கள் சென்ற இடம் நீ
நினைத்தாலே சிந்தனைகள் மாறி விடும்

உலகம் இறைவனின் சந்தை மடம்
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
உலகம் இறைவனின் சந்தை மடம்

 

நன்றி : அய்யா நாகூர் ஹனிபா

3 thoughts on “உலகம் இறைவனின் சந்தை மடம்…

  1. நடை போட்ட முன்னோர்கள் சென்ற இடம் நீ
    நினைத்தாலே சிந்தனைகள் மாறி விடும்

  2. இந்த பாடலை எழுதியவர்
    கிருஷ்ணாஜிப்பட்டினம்
    கவிஞர்: நூர்மதிதாசன்

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..