இஸ்லாமிய பாடல்கள்

——————————————————————————————

எல்லா புகழும் இறைவனுக்கு

எல்லா புகழும் இறைவனுக்கு
எல்லா புகழும் இறைவனுக்கு
அல்லா ஒருவனே துணை நமக்கு
துணை நமக்கு…
ஆற்றல் எல்லாம் கொண்டவனாம் அன்பு
அருள் மழை எங்கும் பொழிபவனாம் (இசை)
மாற்றம் எல்லாம் செய்பவனாம் நல்ல
மான் புகழ் தந்து காப்பவனாம்
காற்றும் மழையும் கதிரவனும்
காற்றும் மழையும் கதிரவனும்
ஆற்றும் பணிகள் எல்லாம்
அவன் செயலாம்
அந்த வல்லோன் இறைவனை நாம்
வணங்கிடுவோம் அவன்
வான் மறை வழி உணர்ந்து வாழ்ந்திடுவோம்

எல்லா புகழும் இறைவனுக்கு…

பார்க்கும் பார்வை அவனாகும் அந்த
பார்வைக்கு ஒளியும் அவனாகும்
தீர்ப்பு நாளின் பதியாகும் அவன்
தீர்ப்பே நமக்கு கதியாகும்
கேட்க்கும் கடமை நம்மிடத்தில்
கேட்க்கும் கடமை நம்மிடத்தில்
கொடுக்கும் உரிமையோ அவனிடத்தில்
அந்த தூயோன் ரஹ்மானை
தொழுதிடுவோம் அவன்
திருக் குறுஆன் வழியில் நடந்திடுவோம்

எல்லா புகழும் இறைவனுக்கு
எல்லா புகழும் இறைவனுக்கு
அல்லா ஒருவனே துணை நமக்கு
துணை நமக்கு…

எல்லா புகழும் இறைவனுக்கு…

——————————————————————————————

சொன்னால் முடிந்திடுமோ..

சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ
சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ
அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை
அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை

வெண்ணிலவும் வியப்படையும் வேந்தர் முகம் கண்டு விட்டு…
வெண்ணிலவும் வியப்படையும் வேந்தர் முகம் கண்டு விட்டு
விண்ணகத்துத் தாரகையும் வெட்க்கப்படும் பார்த்து விட்டு
என்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் பேரழகை

அண்ணலிடம் அறிவு வந்து ஆயிரம் பாடம் பெறும்…
அண்ணலிடம் அறிவு வந்து ஆயிரம் பாடம் பெறும்
பண்பு வந்து நபியிடத்தில் பணிவைக் கேட்டுச் செல்லும்
என்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் சொல்லழகை

திரும்பும் திசை எல்லாம் திருநபி செயல் மணக்கும்…
திரும்பும் திசை எல்லாம் திருநபி செயல் மணக்கும்
அருள் மறை வேதத்திலே அவர் புகழ் நிறைந்திருக்கும்
என்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் பெருமைதனை

சொன்னால்…முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ
அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை
அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை

சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ…

——————————————————————————————

அல்லா அல்ஹம்து லில்லா

அல்லா அல்ஹம்து லில்லா எல்லா புகழும் அல்லா

உனக்கே சொந்தம் ஆகுமே அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே உனக்கே சொந்தம் ஆகுமே அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே…

யா…ரஹுமானே யா…ரஹீமே யா…ரஹுமானே யா…ரஹீமே அருளைப் பொழிய வேண்டும் உலகில் அமைதி நிலவ வேண்டும் அருளைப் பொழிய வேண்டும் உலகில் அமைதி நிலவ வேண்டும் அல்லா அல்ஹம்து லில்லா எல்லா புகழும் அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே…

வையகம் எங்கும் அமைதி இல்லை தீய வன்முறையால் மக்கள் படும் தொல்லை (இசை) வையகம் எங்கும் அமைதி இல்லை தீய வன்முறையால் மக்கள் படும் தொல்லை நியாம் தருமம் வர வேண்டும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் வல்லவனே மிக நல்லவனே வாழ்வின் நன்னெறி காப்பாய் இறையோனே வல்லவனே மிக நல்லவனே வாழ்வின் நன்னெறி காப்பாய் இறையோனே அல்லா அல்ஹம்து லில்லா எல்லா புகழும் அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே…

நெருப்பினை பூங்கா வனமாக்கி நபி இபுறாஹீம் உயிர் காத்தவனே (இசை) நெருப்பினை பூங்கா வனமாக்கி நபி இபுறாஹீம் உயிர் காத்தவனே சிறப்புடன் நைல் நதி பிளந்திடவே நபி மூசா நலம் பெறச் செய்தவனே ரஹ்மத்தாய் நபியை தந்தவனே புவி அமைதிக்கு அருள்வாய் மறையோனே ரஹ்மத்தாய் நபியை தந்தவனே புவி அமைதிக்கு அருள்வாய் மறையோனே அல்லா அல்ஹம்து லில்லா எல்லா புகழும் அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே…

தூதர் நபியை பகைவர்கள் பின் தொடர்ந்ததும் தௌர் என்னும் குகையினிலே (இசை) தூதர் நபியை பகைவர்கள் பின் தொடர்ந்ததும் தௌர் என்னும் குகையினிலே ஊதினால்ப் பறக்கும் சிலந்தி வலைக் காவல் உதவினாய் உனக்கே ஈடும் இல்லை காத்தமுன் நபியைக் காத்தவனே அவர் கௌமையும் காப்பாய் கனிவுடனே காத்தமுன் நபியைக் காத்தவனே அவர் கௌமையும் காப்பாய் கனிவுடனே அல்லா அல்ஹம்து லில்லா எல்லா புகழும் அல்லா அல்லா அல்ஹம்து லில்லா எல்லா புகழும் அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே உனக்கே சொந்தம் ஆகுமே அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே…

——————————————————————————————–

ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக

ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக
நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம்

ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக
நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம்

மெய்யுணர்வின் நல்லடியார் மேதினியில் வாழ்வர்க்கே
ஐய்யமற வழி காட்டும் ஆண்டவனின் திருமறையாம்

மக்கா நகர் அருகிருக்கும் மலைக் குகையாம் ஹீராவில்
தக்க நபி மனம் குளிர தழைத்துயர்ந்த திருமறையாம்
ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக
நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம்

வான் கமழும் ரமலானாம் வளம் கொழிக்கும் திங்களிலே
தீன் கமழ வந்துற்ற திகழொளியின் திருமறையாம்
ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக
நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம்

கதி அளிக்கும் லைலத்துல் கதிர் இரவில் இறை அளித்த
நிதி அனைத்தும் கொண்டிலங்கும் நிகரில்லா திருமறையாம்
ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக
நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம்...

——————————————————————————————–

ஞனத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா..

ஞனத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா..
கானத்தில் நான் அதை கொஞ்சம் இன்றி சொல்லவா
ஞனத்தின் திறவுகோல்..

பள்ளி சென்று படிக்கவில்லை பாடம் ஏதும் கேட்கவில்லை(2)
சொல்லிதரும் தகுதி இந்த துனியாவில் எவர்க்குமில்லை (2)
அல்லாஹ்வே ஆசியுடன் அனைத்துமே ஆச்சரியம்
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
ஞனத்தின் திறவுகோல்..

வானம் அதை பார்த்திருந்தார் வல்லல் நபி சிந்தித்தார்(2)
வான் மழை கடல் அலையை கண்டிரையை புகழ்ந்திட்டார்(2)
இறைவன் சொல்லி தந்தான் சாந்த நபி எழுதி கொண்டார்
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
ஞனத்தின் திறவுகோல்..

கலிமா தொழுகை நோன்பு ஜக்காத்து ஹஜ்ஜுடனே(2)
பலுது ஏதுமில்லாத பண்பான வாழ்க்கை முறை(2)
பகுப்புகள் நடந்தனறே வாஞ்சை நபி தொடர்ந்தனறே
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
ஞனத்தின் திறவுகோல்..

பொருளியல் அரசியலில் புதுமை விஞ்கானமதில்(2)
அருளியல் இல்லறத்தில் ஆன்மிக வழிமுறையில்(2)
எத்துரையும் கற்றிருந்தார் ஏகன் அருள் பெற்றூயர்ந்தார்
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
ஞனத்தின் திறவுகோல்..

பண்பான நபிபெருமான் பல்கலைகழகமன்றோ(2)
அன்பான மாணவராம் அவர்வழி உம்மத்தன்றோ(2)
தேர்வினிலே வென்றிடுவோம் தீன்வழியில் நின்றிடுவோம்
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
ஞனத்தின் திறவுகோல்..

ஞனத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா..
ரசூல் நாயகம் அல்லவா..
கானத்தில் நான் அதை கொஞ்சம் இன்றி சொல்லவா
ஞனத்தின் திறவுகோல்.

——————————————————————————————–

கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..

கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..

நம் கன்மனியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள்.

மாதவ தூதர் முஹமது நபியின் மகளாக வந்து பிறந்தார்

போதில்லாத முழுமதியெனவே குலகொடியாக வளர்ந்தார்

தந்தையின் சொல்லை சிந்தையில் யேந்தி சங்கை வள்ர்மங்க்கையானரே..

கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)

அன்னை கதிஜா நன்னைய பண்பை அகமதில் தாங்கி சிறந்தார்

கன்னில் கருனை கையில் தானம் கல்பில் இறைவேதம் சுமந்தார்

செல்வத்தை மறுத்து வறுமையை ஏற்று சீமாட்டியாகவெ வாழ்ந்தாரே..

கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)

வானவர் வாழ்த்த யாவரும் போற்ற வீரர் அலியை மணந்தார்

தீன் குல பெண்கள் துறைவை ஒழிக்க சிறப்புடன் இல்லறம் புகுந்தார்

கணவர் அலியை கன்னுக்குள் வைத்து கணிவாய் பணிவிடை செய்தாரெ..

கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)

சொர்க்கத்தின் நிழ்ழாய் கணவரை மதித்து சோபன வாழ்வில் மிதந்தார்

அருமை மைந்தர்கள் ஹசன் ஹுசைனின் அன்பு தாயகி மகிழ்ந்தார்

புவன தூதர் தந்தை முஹம்மதை பொக்கிசமாகவே மதித்தாரே...

கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)

அராபாத் வெளியில் இறைவன் தூதை அண்ணல் நபி முடித்தார்கள்

இறைவன் அழைப்பை ஏற்றே நபிகள் இம்மை வாழ்வை விடுத்தார்கள்

தந்தையை இழந்த செல்வி பாத்திமா தனலில் குழுவாய் துடித்தார்

கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)

எம்பெருமானார் இதயமாகவே இலங்கிய மாதர் திலகம்

தம்முடன் மெலிந்து கன்னொலி மங்கி சருஹென மாறிபோனார்

விந்தைகள் சூலும் இப்புவிமீது விரைந்தே கழிந்தன மாதங்கள்

கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)

இம்மையின் வாழ்வு முடிவதை அன்று இதயத்தினலே உணர்ந்தார்

தம்முடன் குளித்து கஃபன் உடை தரித்து கணவரின் மார்பில் சரிந்தார்

கன்னிர் முத்துகள் கன்னத்தில் உருள கணவரை கணிவுடன் பார்த்தாரே..

கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)

வல்லோன் நல்கிய அர்சின் உயிரை விடைகொடுத்து அனுப்புங்கள் என்றார்

பிள்ளை செலவங்கள் ஹசன் ஹுசயினை பிடித்தவர் கையில் கொடுத்தார்

அல்ஹம்ந்துலில்லாஹ் என்றே கூறி அகிலத்தின் வாழ்வை முடித்தாரே..அகிலத்தின் வாழ்வை முடித்தாரே

இன்னா நிலாஹி வைன இலைஹி ராஜிவூன்

இன்னா நிலாஹி வைன இலைஹி ராஜிவூன்

இன்னா நிலாஹி வைன இலைஹி ராஜிவூன்

——————————————————————————————–

அல்லாவை நாம் தொழுதால்…

 அல்லாவை நாம் தொழுதால்...சுகம் எல்லாமே ஓடி வரும்
 அந்த வல்லோனை நினைத்திருந்தால்...
 நல்ல வாழ்க்கையும் தேடி வரும்...

 அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்
 வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
 நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
 அல்லாவை நாம் தொழுதால்... 

 பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும்
 பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும்
 பள்ளி செல்ல மனம் இல்லையோ படைத்தவன் நினைவில்லையோ
 பள்ளி செல்ல மனம் இல்லையோ படைத்தவன் நினைவில்லையோ

 அல்லாவை நாம் தொழுவோம்... 

 வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும்
 வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும்
 விழி இருந்தும் பார்பதில்லையோ செவி இருந்தும் கேட்பதில்லையோ
 விழி இருந்தும் பார்பதில்லையோ செவி இருந்தும் கேட்பதில்லையோ

 அல்லாவை நாம் தொழுவோம்... 

 இறையோனின் ஆணைகளை இதயத்தில் ஏற்றிடுவோம்
 இறையோனின் ஆணைகளை இதயத்தில் ஏற்றிடுவோம்
 இறைத் தூதர் போதனையை இகம் எங்கும் பரப்பிடுவோம்
 இறைத் தூதர் போதனையை இகம் எங்கும் பரப்பிடுவோம்

 அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்
 வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
 நல்ல வாழ்க்கையும் தேடி வரும் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
 நல்ல வாழ்க்கையும் தேடி வரும் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்

——————————————————————————————–

ஐந்து கடமைகளில்…..

  ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்
  அத்தனையும் சொர்கத்தின்
  சங்கை மிகு முத்திரைகள் 

  ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்
  அத்தனையும் சொர்கத்தின்
  சங்கை மிகு முத்திரைகள்
  தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
  தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்

  வித்தகன் அல்லாவின் உத்தம தூதர் நபி
  இத்தரையோர்க் குரைத்த போதம்
  வித்தகன் அல்லாவின் உத்தம தூதர் நபி
  இத்தரையோர்க் குரைத்த போதம்
  சத்திய இஸ்லாத்தின் முத்தான கொள்கையின்
  சொத்தாக கிடைத்திட்ட வேதம்
  சத்திய இஸ்லாத்தின் முத்தான கொள்கையின்
  சொத்தாக கிடைத்திட்ட வேதம்

  தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
  தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்

  கலிமா தொழுகையுடன் கவின் மிகு நோன்பிருந்து
  கனிவுடன் ஜக்காத்தைக் கொடுத்து
  கலிமா தொழுகையுடன் கவின் மிகு நோன்பிருந்து
  கனிவுடன் ஜக்காத்தைக் கொடுத்து
  நலமுடன் உடலும் பொருளும் இருந்தால்
  ஹஜ்ஜை முடிக்கணும் அடுத்து
  நலமுடன் உடலும் பொருளும் இருந்தால்
  ஹஜ்ஜை முடிக்கணும் அடுத்து

  தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
  தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்

  இறைவன் ஒருவன் என்ற இனிய கொள்கையை
  மறையாய் கொண்டது இஸ்லாம்
  இறைவன் ஒருவன் என்ற இனிய கொள்கையை
  மறையாய் கொண்டது இஸ்லாம்
  முறையாய் மனிதர்களை ஓர் குலமாக்கிட
  நெறியாய் திகழ்வது இஸ்லாம்
  முறையாய் மனிதர்களை ஓர் குலமாக்கிட
  நெறியாய் திகழ்வது இஸ்லாம்

  தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
  தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்

  உள்ளத்தில் ஒளி ஊட்டி உணர்வில் அருள் கூட்டி
  கண்ணியம் காத்திடும் மார்கம்
  உள்ளத்தில் ஒளி ஊட்டி உணர்வில் அருள் கூட்டி
  கண்ணியம் காத்திடும் மார்கம்
  மன்னர் முஹம்மதை ஜன்னத்தில் காண்பதற்க்கு
  புண்ணிய வழி சொல்லும் மார்கம்
  மன்னர் முஹம்மதை ஜன்னத்தில் காண்பதற்க்கு
  புண்ணிய வழி சொல்லும் மார்கம்

  தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
  தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்

  ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்
  அத்தனையும் சொர்கத்தின்
  சங்கை மிகு முத்திரைகள்
  ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்
  அத்தனையும் சொர்கத்தின்
  சங்கை மிகு முத்திரைகள்
  தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
  தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்

——————————————————————————————–

உலகம் இறைவனின் சந்தை மடம்

உலகம் இறைவனின் சந்தை மடம்
  இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
  உலகம் இறைவனின் சந்தை மடம்
  இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
  இதுவல்ல நமக்கு சொந்த இடம்
  இதுவல்ல நமக்கு சொந்த இடம்
  அங்கே இருக்குது வேறு உரிய இடம்
  உரிய இடம்...

  கருவூரில் இருந்து புறப்படுவான் கொஞ்சம்
  களைப்பாற இங்கே தங்கிடுவான்
  உறவோடு உரிமையும் கொண்டாடுவான் அவன்
  ஒருவருக்கும் சொல்லாமல் ஓடிடுவான்

  இருப்பவன் இங்கேயே நிலைப்பதில்லை யாரும்
  இதை விட்டுப் போனவன் திரும்பவில்லை
  மறுப்பவன் இதனை யாரும் இல்லை
  மனதில் ஆசைகள் மட்டும் குறையவில்லை

  பிறந்ததும் பாங்குண்டு தொழுகை இல்லை அவன்
  இறந்ததும் தொழுகைக்கு பாங்கு இல்லை
  புரிந்தவன் ஆணவம் கொள்வதில்லை இதை
  புரியாதவன் அறிவு தெளிவதில்லை

  தொடரும் கதை ஒரு நாள் முடிந்து விடும் அந்த
  தூயோனின் தீர்ப்பு அதைக் காட்டி விடும்
  நடை போட்ட முன்னோர்கள் சென்ற இடம் நீ
  நினைத்தாலே சிந்தனைகள் மாறி விடும்  

  உலகம் இறைவனின் சந்தை மடம்
  இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
  உலகம் இறைவனின் சந்தை மடம்

——————————————————————————————–

ஃபாத்திமா வாழ்ந்த முறை உனக்கு தெரியுமா?

ஃபாத்திமா வாழ்ந்த முறை உனக்கு தெரியுமா?
அந்த பாதையிலே வந்த பெண்ணே நீ சொல்லம்மா.

உத்தம திருநபியின் மகளலல்லவா
நமது உண்மை சீலர் அலியாரின் மனைவியல்லவா
சத்தியம் காத்து நின்ற இதயம் அல்லவா
நல்ல செல்வங்கள் ஹஸன் ஹூஸைன் அன்னையல்லவா
அருமை அன்னையல்லவா.

கணவரின் சொல்வணங்கி நடந்தவரன்றோ
பெரும் கண்ணியத்தின் இருப்பிடமாய் திகழ்ந்தவரன்றோ
குணமுடன் எளிய வாழ்க்கை வாழ்ந்தவரன்றோ
நல்ல குடும்பந்தன்னில் குலவிளக்காய் இருந்தவரன்றோ
இருந்தவரன்றோ

இன்னும் தயக்கமென்ன எண்ணிப் பாரம்மா இந்த
இக வாழ்க்கை நிலையல்ல உணர்ந்து கொள்ளலமா உண்மை
தீன் வழியை மறந்ததேனம்மா நல்ல உத்தமியாம் பாத்திமா போல் வாழ்ந்து காட்டம்மா வாழ்ந்து காட்டம்மா

———————————————————————————————

தீனோரே நியாயமா

தீனோரே நியாயமா மாறலாமா
தூதர் நபி போதனையை மீறலாமா
உள்ளம் சோறலாமா 

காணல் நீராகும் புவி வாழ்வு இங்கே
அது கரை சேரும் ஒரு நாளில் அங்கே
தீனை உணராமலே திரும்பி பாராமலே
இந்த தரை மீது தடுமாறி தேயலாமா

வாசல் வழியோரம் கையேந்தி நின்று
கெஞ்சும் எளியோரின் துயர் கோலம் கண்டு
நெஞ்சம் இறங்காமலே கொஞ்சம் வழங்காமலே
நாவு கூசாமல் நிலை மாறி ஏசலாமா

வட்டி தொழிலாலே கிடைக்கின்ற லாபம்
ஏழை விழிநீரில் எரிகின்ற தீபம்
என்று அறியாமலே நன்கு புரியாமலே
ஏக இறையோனின் நெறியிழந்து வாழலாமா

திருமறையின் அருள்

திருமறையின் அருள்;;; மொழியில் விளைந்திருப்பது என்ன? அறிவு.
இறை தூதர் நபி பொன் மொழியில் பொதிந்திருப்பது என்ன? அன்பு.
அறிவில் உருவாகி அன்பில் நிறைவதென்ன? ஞானம்
அந்த ஞானத்தை வழங்கிடும் மூலப் பொருள் என்ன? மௌனம் மௌனம்.

உருவமற்ற இறைவன் வாழும் இடம் எதுவோ? உள்ளம்.
அந்த உள்ளத்தினில் சுடர் போல் விளங்குவது எதுவோ? உண்மை
உண்மையினை ஈன்ற அன்னையவள் யாரோ? பொறுமை
அந்த பொறுமை நபிகள் நாதர் போதித்தது என்ன? கடமை 5 கடமை

ஏக இறையோனை ஏற்றுக் கொள்வதென்ன? கலிமா
அந்த கலிமா பொருள் உணர்ந்து கடைப்பிடிப்பதென்ன? தொழுகை
தொழுகையினை மேலும் தூய்மை செய்வதென்ன? நோன்பு
நோன்பிருந்த பின்பு மாண்பளிப்பதென்ன? ஜகாத்து
அந்த ஈகை வழியில் செல்லும் இறுதிக் கடன் என்ன? ஹஜ்ஜூ புனித ஹஜ்ஜூ

———————————————————————————————–

ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப் பாலகன்

உபவாச நன்மை சொல்லுறேன்
கேட்பீரே மாந்தரே
உயர் நோன்பு மாத பெருமையே
இதுவாகும் மாந்தரே

ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப் பாலகன்
ஓயாது எண்ணினான் மனதில் நோன்பையே நிதம்
பெரும் ஆனந்தம் கொண்டான் ரமழான் மாதம் வந்ததும்
தன் தாயை கட்டி தழுவிக் கொண்டு கெஞ்சினான் சனம்
மறவாது சஹரு நேரமதில் எழுப்ப வேண்டுமாய்
மன்றாடினானே நோன்பு நோற்க வேண்டும் என்றவன்

மாதா மதிக்க வில்லை அருமை மைந்தன் சொன்னதை
மறு நாளின் காலை எழுந்து மனம் பதறி வருந்தினான்
ஆதாரமின்றி வருந்துவதை கண்ட தாயவள்
அன்போடனைத்து ஆறுதலாய் சாற்றினாள் இதை
போதாத வயதில் நோன்புனக்கு கடமையல்லவே
பொறு இன்னும் கொஞ்சம் காலம் வரை என்று கூறினாள்

வல்லோன் உரைத்த திருமறையாம் குர்ஆன் என்பதை
வையம் சிறக்க நமக்களித்த மாதம் அல்லவோ
சொல்வார்கள் நோன்பு நோற்பவர்க்கு சொர்க்கம் மீதிலே
சுகமுண்டு என்ற போதனையை நீ அறியாயோ
கல்லோ உன் நெஞ்சு கூறும் தாயே கருணையில்லையா
கண்ணாலே எந்தன் ஆண்டவனை காண வேண்டுமே

அந்நாள் இரவு முழுதும் அவன் தூங்க வில்லையே
ஆசை அவனின் கண்களிலே ஆட்சி செய்ததே
ஏண்ணம் போல் சஹரு நேரமது வந்த போதிலே
எழுந்தோடி நோன்பு வைத்து மனம் புரிப்பெய்தவே
ஆனாலும் அன்னை தந்தை கூடி அதட்டினார்களே
ஆகாது என்று சாதனையால் வம்பு பேசினான்

திருவான அஸரு என்னும் தொழுகை நேரம் நெருங்கவே
தண்ணீரின் தாகம் அதிகமாகி நாவரண்டதால்
பாரிதாபமான நிலையில் பையன் மூச்சு திணறியே
பாரிவோடு தாயின் மடியில் சாய்ந்து மூர்ச்சையாகினான்
பிரியம் மிகுந்த செல்வன் உயிர் பிரிந்து சென்றதால்
போனாயே என்று கூவி அழுது புலம்பி வாடினாள்

இனிமை நிறைந்த பாங்கின் ஓசை செவியில் கேட்கவே
இறையோனை தொழுது வேண்டினார்கள் ஒன்று கூடியே
தனிமையில் அன்னை ஆண்டவன் பால் கைகளேந்தியே
தகுமோ இறைவா என்று துஆ கேட்டு புலம்பினாள்
இனி யாது செய்வேன் என்று அன்னை மனது நோகவே
இதயம் உடைந்து வேதனையால் இன்பம் நீங்கினாள்

தந்தை அருகில் சோகமதாய் தவிக்கும் போதிலே
தலைவாசலிலோர் சாதுமகான் வந்துமே நின்றார்
எந்தைகளே நான் நோன்புடையோன் ஏழை ஆதலால்
ஏதேனும் உணவு தந்துதவ இயலுமோ என்றார்
சிந்தை இரங்கி வீட்டிலன்று சமைத்திருந்ததை
சந்தோஷமாக தந்த போது சாது வினவினார்.

கவலை மிகுந்த முகத்துடனே காணப்படுவதேன்
கடவுள் கருணை உங்கள் மீதுண்டாகுக வென்றார்
சவமாகினானே எங்கள் ஒரே செல்வ பாலகன்
சாகா வரமே தருக உம்மால் ஆகுமோ வென்றார்
தேவா சிறுவன் நோன்பிருந்து உயிரை நீத்ததால்
தெய்வீக சக்தி உண்டெனில் உயிர் வாழ செய்குவீர்

ஆயாசமாக வீனில் யாரும் வருந்திட வேண்டாம்
அடியேனுக்கந்த பையனை நீர் காட்டுவீரென்றார்
வாயாற வாழ்த்தி வாருமென்று உள்ளே அழைத்தார்
வந்தார் உடனே சாது  பையன் பக்தியைக்  கண்டார்
நீயே எழுவாய் என்று சாது கூறினாரதே
நிமிஷத்திலே எழுந்து சிறுவன் இறையை வணங்கினான்

ஆனந்த காட்சி இதனை கண்ட அன்னை தந்தையும்
அன்போடு சாதை தழுவிக் கொண்டு இறையை போற்றினார்
தீனோர்களே ரமழான் மாதம் மேன்மையானதே
துன்பங்கள் தீரும் இறைவனுக்கே நன்றி நவிலுவீர்
என்றும் பெறுவார் நோன்பிருந்தார் இறைவன் ஆசியை
எனக்கூறி மறைந்தாரே சாது உலக மாந்தரே

உலக மாந்தரே உலக மாந்தரே

———————————————————————————————–

மௌத்தையே நீ மறந்து…

வானகம் வையகம் யாவும் மறைந்து விடும்

ஆனதினால் மானிடனே ஆண்டனவனை நீ  தொழுவாய்

மௌத்தையே நீ மறந்து இங்கு வாழலாகுமா

மாறிடும் வாழ்வினில் மூழ்குதல் நியாயமா

மன்னாதி மன்னரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை.

மகத்தான நெறியி;ல் வாழ்ந்த மனிதரெல்லாம் நிலைத்ததில்லை

பொன்னான செல்வரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை

புகழோடு வாழ்ந்திருந்த பூமான்கள் நிலைத்ததில்லை.

பூதலத்தின் இந்த நிலை புரிந்திடாமல் பேசுகிறாய்.

ஆல்லாஹ்வின் அருட்சுடராம் அண்ணல் தாஹா நபி எங்கே

ஆஞ்சாத வீரம் கொண்ட ஆண்மை அலியார் எங்கே

ஏல்லோரும் போற்றுகின்ற அன்னை ஃபாதிமா எங்கே

இணையில்லா தியாகிகளாம் இமாம் ஹஸன் ஹூஸைன் எங்கே

இந்த நிலை அறிந்திடாமல் எத்தனை நாள் நீ இருப்பாய்;

நிச்சயம் மரணம் வரும் நீ ஒரு நாள் இறந்திடுவாய்

நேசரெல்லாம் அழுத பின்னே நீ சந்தூக்கில் ஏறிடுவாய்

அத்தான கப்ருஸ்தானில் நீ அடங்கி மண்ணாவாய்

அறுதியில் உனை எழுப்பும் இறுதி கியாமத் நாளும் வரும்

ஆந்நாளை உணர்ந்திடாமல் ஆனவத்தால் பிதற்றுகிறாய்

நன்மை தீமை செயல்கள் மீஜானில் நிறுக்கப்படும்

நன்மை தட்டு கனத்து விட்டால் நல்ல சுவர்க்கம் கிடைத்து விடும்

தின்மை எடை கூடி விட்டால் தீய நரகம் வீழ்ந்திடுவாய்

தீங்கான இந்த நிலை தோன்றிடாமல் தவிர்த்திடுவாய்

திருமறை நபி வழியில் தினமும் சென்று வாழ்ந்திடுவாய்.

——————————————————————————————–

ஒருநாள் மதீனா நகர் தனிலே

ஒருநாள் மதீனா நகர் தனிலே
ஓங்கும் மஸ்ஜிது நபவியிலே (2)

பெருமான் நபிகள் பகர்ந்தார்கள் (2)

பண்புடன் தோழர்கள் மத்தியிலே

உதய நிலவின் குளிராக

உலகில் தோன்றிய உம்மி நபி

நீதி மறையின் திரு உருவாய்

நிதமும் வாழ்ந்த தூதர் சொன்னார்

இறுதி நாள் நெருங்கி வருகிறது

இறைவன் அழைப்பும் தெரிகிறது

கருணை இறைவன் சொல் கேட்டு

கடமையை செய்ததில் குறையுள்ளதோ

யாருக்கும் தவறுகள் செய்தேனோ

எவருக்கும் துன்பம் தந்தேனோ (2)

கூறுங்கள் அன்பு தோழர்களே

குறைகள் இருந்தால் கூறுங்கள்

எப்போதேனும் சிறு பிழைகள்

என் வாழ்வில் ஏதும் செய்தேனோ

தப்பாது இங்கே சொல்லிடுவீர்

தயங்காமல் அதனை ஏற்றிடுவேன்

அது கேட்ட தோழர்கள் நெஞ்சங்கள்

அதிர்ந்தது அங்கமெல்லாம் நடுங்கியே

நீதி தவறாத நாயகமே

தாங்கள் நன்மையின்றி தீமை செய்ததில்லை

அப்போது ஒருவர் எழுந்து நின்றார்

அவர் தான் உகாஷா எனும் தோழர்

ஒப்பில்லாத இறை தூதே

ஓர் குறை உமக்கு உண்டு என்றார்

சொன்னதும் ஸஹாபா பெருமக்கள்

சினத்தால் துடித்து எழுந்தார்கள்

அண்ணல் பெருமான் அமைதியுடன்

ஆத்திரம் வேண்டாம் அமர்க என்றார்

என்ன குறைகள்; இருந்தாலும்;;

இயம்புக அதனை நீக்கிடலாம்

திண்ணமாய் அல்லாஹ் அறிந்திடுவான்

தீமைகளின்றி காத்திடுவான்.

உத்தம நபியே இரஸூலே

ஒட்டகை மேல் தாங்கள் இருக்கையிலே

சித்த மகிழ்வோடு நான் பிடித்து

சீராய் மணலில் நடக்கையிலே

சாட்டையை சுழற்றி ஒட்டகையை

சட்டென தாங்கள் அடித்தீர்கள்

ஒட்டி நடந்த என் உடம்பில்

ஓரடி விழுந்தது அப்போது

அதற்கு பதிலாய் தங்களை நான்

அடித்திட அனுமதி வேண்டுகிறேன்

எதிலும்; நீதி தவறாத

இரஸூல் நபியதை ஏற்றார்கள்

உண்;மை உரைத்தீர் என் தோழரே

உமது உள்ளம் சாந்தி பெற

என்னை அடியும் என்றார்கள்

இசைவாய் அங்கே நின்றார்கள்.

என்;னை அடித்த சாட்டை இங்கே

இல்லே தங்களின் வீட்டில் உண்டு

எண்ணம் நிறைவேற வேண்டுமதை

ஏந்தலே எடுத்து வர சொல்லுங்கள்

இனிய பிலாலே ஏகிடுவீர்

எடுத்து வாரும் சாட்டை தனை

கண்ணீரோடு பிலால் விரைந்தார்

கருணை நபியின் இல்லத்துக்கே

அங்கே அன்னை ஃபாதிமாவும்

ஆருயிர் மக்கள் ஹஸன் ஹூஸைனும்

பாங்காய் மூவரும் வீட்;டினிலே

பண்பின் உரைவிடமாய் திகழ்ந்தார்

பாச மிகுந்த அன்பர் பிலால்

பாரிவுடன் ஃபாதிமா எதிர் நின்று

நேசம் தவழ்ந்திடும் சபைதனிலே

நடந்ததை நயமுடன் எடுத்துரைத்தார்

செய்தியை செவியில் கேட்டவுடன்

சிந்தையில் வேதனை பொங்கியது

தூய என் தந்தை உடல் நலமில்லை

தண்டனை எப்படி தாங்கிடுவார்

ஏன்றே கூறி சாட்டை தனை

ஏடுத்து பிலாலிடம் தரும் போது

நன்றே சொல்லும் உகாஷாவிடம்

நானே அடியை ஏற்றிடுவேன்.

அருமை குழந்தைகள் ஹஸன் ஹூஸைனும்

அழுது கண்ணீர் வடித்தார்கள்

பெருமை நிறைந்த பாட்டனாருக்கு

பதிலாய் எங்களை அடிக்கட்டுமே

துயரம் மேலிட சாட்டைதனை

துhpதமுடன் பிலால் எடுத்து சென்றார்

பயமில்லாது உகாஷாவிடம்

பெருமான் நபிகள் கொடுத்தார்கள்

சாட்டையை கையில் வாங்கியதும்

சாந்த நபியிடம் அவர் சொன்னார்

சட்டையில்லாது நான் இருந்தேன்

செம்மலே தாங்கள் அடிக்கயிலே

கேட்டதும் ஹாத்தமுன் நபியவர்கள்

பாpவுடன் சட்டையை நீக்கியதும்

சாட்டையை தூக்கி எறிந்து வி;ட்டு

தாவியனைத்தார் ஆவலுடன்

நுபுவத்தொளிரும் நபி முதகில்

நினைத்தது போல முத்தமிட்டார்

உணர்ச்சி உள்ளம் குளிர்ந்திடவே

உவகையில் மீண்டும் முத்தமிட்டார்

சுற்றிலும் நின்ற ஸஹாபாக்கள்

சோபனம் கூறி வாழ்த்தினரே

மட்டில்லாத மகிழ்ச்சியிலே

மஸ்ஜிதுந்நபவி திளைத்திடுமே

ஸல்லல்லாஹூ அலா முஹம்மது

ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்

——————————————————————————————-

இறைவனிடம் கையேந்துங்கள்…

இறைவனிடம் கையேந்துங்கள்

அவன் இல்லையென்று சொல்வதில்லை

பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அவன்

பொக்கிஷத்தை மூடுவதில்லை.

இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்

ஈடு இணையில்லாது கருணை யுள்ளவன்

இன்னல் பட்டு எழும் குரலை கேட்கின்றவன்

எண்ணங்களை இதயங்களை பார்க்கின்றவன்

ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளி தருபவன்

அல்லல் துன்பம் துயரங்களை கிள்ளி எறிபவன்

பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்

பாவ ங்களை பார்வையினால் மாய்க்கின்றவன்

அல்லல் படும் மாந்தர்களே அயராதீர்கள்

அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்

அவனிடத்தில் குறை அனைத்தும் சொல்லி காட்டுங்கள்

அன்பு நோக்க தருகவென்று அழுது கேளுங்கள்

தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்

தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்

வாடும் இதயம் மலர்வதற்கு வழி வகுப்பவன்

வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்

அலை முழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன்

அலையின் மீதும் கடலின் மீதும் ஆட்சி செய்பவன்

தலைவணங்கி கேட்பவர்க்கு தந்து மகிழ்பவன்

தரணி எங்கும் நிலைத்து நிற்கும் மகா வல்லவன்

——————————————————————————————–

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

Advertisements

25 thoughts on “இஸ்லாமிய பாடல்கள்

 1. EruvadiN.Subramanian October 5, 2018 / 3:42 pm

  என்னுடைய 30 வயதுவரை தினமும் கேட்ட பாடல்கள் இப்போது கேட்பதில்லை

 2. Anonymous December 16, 2017 / 9:23 pm

  இறைப்பணி என்பது ஈடு இணை இல்லாதது…
  அதனை ஐயா ஹனீபா அவர்கள் உயிரோட்டமாக
  வழங்கியுள்ளார்….
  அவர் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது
  வரலாற்று பதிவு…
  அவரின் குரலோசை வெண்கலம் போன்று கணீரென ஒலிப்பது.
  அவர் குரலில் நான் பாட முயற்சிக்கின்றேன்….
  இறையருளை வேண்டுகிறேன்….
  ஆம்…அவன் இல்லை என்று சொல்லுவது இல்லை…

  செ.வ. மகேந்திரன்….6/82 காந்தி சாலை….கள்ளக்குறிச்சி 606 202
  அலைபேசி..9965652731

 3. Anonymous December 16, 2017 / 9:23 pm

  இறைப்பணி என்பது ஈடு இணை இல்லாதது…
  அதனை ஐயா ஹனீபா அவர்கள் உயிரோட்டமாக
  வழங்கியுள்ளார்….
  அவர் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது
  வரலாற்று பதிவு…
  அவரின் குரலோசை வெண்கலம் போன்று கணீரென ஒலிப்பது.
  அவர் குரலில் நான் பாட முயற்சிக்கின்றேன்….
  இறையருளை வேண்டுகிறேன்….
  ஆம்…அவன் இல்லை என்று சொல்லுவது இல்லை…

  செ.வ. மகேந்திரன்….6/82 காந்தி சாலை….கள்ளக்குறிச்சி 606 202
  அலைபேசி..9965652731

 4. Imaan N November 28, 2017 / 6:46 pm

  I am searching a tamil islamic song. Please help me. I hear the song in a marriage function at Trichy. But I forget the starting of song and I have no detail about the singer. I just know the song concept.

  The concept is : A person who did bad thing in his life. At the last stage of before hsi death his mother is not forgive his fault. So Nabi (sal) is asking people to make fire to burn him. The news is informed to mother. The then come forgive his faults. So that the person can able to get “sorgam”.

 5. Mohammed Afzal November 21, 2017 / 7:31 pm

  நீ கொடுத்ததற்க்கே நன்றி சொல்ல முடியவில்லை lyrics pls pls

 6. இ.மணிகண்டன் November 20, 2017 / 11:00 pm

  அனைத்துப் பாடல்களும் அருமை அருமை

 7. abc November 5, 2017 / 2:16 pm

  mihavum santhocam

 8. murugesan June 22, 2017 / 6:38 pm

  i am love it songs

 9. Imran June 7, 2017 / 10:49 am

  ரமலான் புனித ரமலான் lyrics pls

 10. Ahmatha January 17, 2017 / 10:35 pm

  அருமை இதனை தேடி கொண்டிருந்தேன் இஸ்லாமிய கவிதை மணம் இனி எங்கும் வீசும் ஜஜாக்கல்லாஹ்

 11. Anonymous January 6, 2017 / 12:39 pm

  இதில் எனக்கு பிடித்த பாடல் “ஒரு நாள் மதினா நகர்தனிலே ” இந்த பாடலை படித்தவுடன் என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது

 12. Mahin faizani November 16, 2016 / 10:08 am

  அருமையான பதிவு
  பெருமை சேர்த்தீர்கள்
  அல்லாஹ் நன்மை பயப்பானாக. ஆமீன்

 13. Anonymous June 18, 2016 / 9:21 pm

  super
  love
  you

  • abc November 5, 2017 / 2:14 pm

   good

 14. Mohammed irfan farid April 27, 2016 / 5:12 pm

  Masha Allah. Jazak Allah hair. May Allah bless all of you. And upload more islamic songs.

 15. இறைநேசன் April 3, 2016 / 4:19 pm

  தங்களின் இந்த அரிய முயற்சிக்கு
  பாராட்டுக்கள்.மேலும் நிறைய பாடல்களின் தொகுப்பு பணி சிறக்க வாழ்த்துக்கள்

 16. faisel January 23, 2016 / 12:36 am

  நல்ல பதிவு

 17. லியாகத் அலி.ஜெ December 23, 2015 / 2:10 pm

  அல்ஹம்துலில்லாஹ்

 18. ஹமீது October 24, 2015 / 1:50 pm

  அருமை..அருமையிலும் அருமை.. இன்னும் பல பழைய தொகுப்புக்கள் பதிவிறக்கம் செய்தால் நன்று. குறிப்பாக சரலா, ஜமுனா போன்ற ஈடற்ற பாடகிகள் பாடிய இஸ்லாமிய பாடல்கள்.

 19. husna March 15, 2013 / 11:00 pm

  thaink you

 20. Mohamed Rafiq Ali January 31, 2012 / 9:49 am

  பாட்டை பாட்டாக கேட்ட எனக்கு வரிகளை பார்த்து ஒரு முறை பாடிய போதுதான் என் கண்ணில் நீர் வந்தது. உண்மை அல்லாஹ் மட்டும் அறிவான். ரொம்ப நன்றி.

 21. Anonymous January 11, 2012 / 10:01 pm

  Al Hamdulillah , Allah may accept

 22. masdooka September 9, 2011 / 1:38 am

  நேசரெல்லாம் அழுத பின்னே நீசம் தூக்கி ஏறிடுவாய்

  அத்தான கப்ருஸ்தானில் நீ அடங்கி மண்ணாவாய்

  ‘மௌத்தையே நீ மறந்து’ என்னும் பாடலில் உள்ள இந்த இரு வரிகளும்

  நேசரெல்லாம் அழுத பின்னே நீ சந்தூக்கில் ஏறிடுவாய்

  அஞ்ஞான கப்ருஸ்தானில் நீ அடங்கி மண்ணாவாய்
  என்று இருக்க வேண்டும் தயவு செய்து திருத்திக் கொள்ளவும்
  மற்றபடி தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்

  • udayanadu September 10, 2011 / 1:33 am

   தங்களுடைய கருத்துகளுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி..

   • LIYAGAT ALI November 16, 2018 / 10:15 pm

    இன்னமும் நிறைய பாடல்களை எதிர் பார்க்கிறோம்! நல்ல பயனுள்ள தளம்! நன்றி!

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s