காய் / பழங்களின் மருத்துவக் குணங்கள்

இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் காய், பழ வகைகளும் ஆகும்.

தவறாமல் தினமும் சாப்பிடுகிறோம் தானே! நாம் சாப்பிடும் உணவில் என்னென்ன இருக்கிறது என்பதை அறிந்து அப்போதைய நம் உடல்நிலைக்கு பருவநிலைக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுத்து சாப்பிட உதவவே இந்த இணைப்பு.

எதையுமே தெரிந்து அனுபவிக்கும்போது கிடைக்கிற சந்தோஷம் அலாதிதான். தாஜ்மஹால் என்பதை எந்தப் பின்னணியும் அறியாமல் பார்க்கும்போது அது பிரமிக்க வைக்கிற கட்டடக்கலை மட்டுமே. அதன் பின்னணியில் உள்ள காதலறிந்து பார்க்கும்போது உங்களுக்குள்ளும் கவிதை அனுபவம் கிட்டும்.

அப்படித்தான் தினமும் சாப்பிடும் காய், பழங்களின் ருசியோடு அதிலுள்ள பயன்களையும் அறிந்து சாப்பிடுவதும். இவற்றில் என்னென்ன சத்துக்கள் உள்ளன? எது யாருக்கு ஏற்றது? யார் எதை விலக்கி வைக்க வேண்டும் என்பதை தெரிந்து உண்டு பயனும், பலமும் பெறவே இந்த இணைப்பு. Continue reading “காய் / பழங்களின் மருத்துவக் குணங்கள்”

பழங்களை எப்படி? எப்பொழுது? – சாப்பிடணும்

” பழங்களில் எத்தனை நன்மைகள் “

உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது மருத்துவரை நாட வேண்டி இருக்காது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றலாமே.

பழங்களில் உள்ள உயர்தர ஊட்டச்சத்துக்கள், உயர்ந்த நார்ச்சத்து நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தினசரி ஏதாவது ஒரு வகையில் பழங்களை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். உலக அளவில் நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளின் மூலம் பழங்கள் சாப்பிடுவதன் நன்மைகள் தெரியவந்துள்ளது. பழம், காய்கறி சாப்பிடுவதன் மூலம் இதயநோய் பாதிப்பு ஏற்படுவதில்லை, டைப் 2 நீரிழிவு ஏற்படுவதில்லை, சில புற்றுநோய்கள் குணமடைகின்றன. உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதில்லை என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். உடல்பருமன் ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர். Continue reading “பழங்களை எப்படி? எப்பொழுது? – சாப்பிடணும்”