கனவுகள் இல்லாத அமைதியான தூக்கத்திற்கு…

யோகாசனங்கள் உடலுக்கும் மனதுக்கும் வலிவையும், ஆற்றலையும் தருகின்றன. ஆனால் அதே வேளையில் தியானம் என்பது மனதை தொடர்ந்து செம்மைப்படுத்த உதவுகிறது. தியானத்தின் மூலம் நமது புலன்களின் வலிமை அதிகப்படுத்தப்படுகிறது. உடல் பதட்டமில்லாத ஓய்வு நிலைக்கு செல்கிறது. அதாவது ஒரு ரேடியோ அல்லது தொலைக்காட்சி தெளிவற்ற நிலையில் அதை பைன் டியூன் செய்வது போல் நமது விலகி ஓடி எத்தனையே குழப்பத்தை சிந்தித்துக் கொண்டிருக்கும் மனதை பைன் டியூன் செய்வதே தியானம்.

மனதை வென்றவர்களிடம் இருந்தே மகத்தான் விஷயங்கள் இந்த உலகத்திற்காக வெளிப்பட்டிருக்கின்றன. அதாவது, இந்த உலகின் செயற்கரிய சாதனைகள் என்று சொல்லப்படுபவை அனைத்துமே மனதை ஒருங்கிணைத்தன் மூலமே சாதிக்கப்பட்டிருக்கின்றன. மனதை ஒரு புள்ளியில் ஒருங்கிணைப்பதுவே தியானம். அதாவது, அலைபாயும் மனதை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயலவே தியானம் செய்கிறோம். மற்றவர்களிடம் இல்லாத அக,புற வேறுபாடுகளை தியானம் செய்பவர்களிடம் காண முடிவது கண்கூடு.

தியானப்பயிற்சியில் ஈடுபடுபவர்களின் கண்களில் ஒரு வித பிரகாசமும், முகத்தில் ஒரு இயல்பான அமைதியும் எப்போதும் இருக்கும். Continue reading “கனவுகள் இல்லாத அமைதியான தூக்கத்திற்கு…”

யார், எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்

தூக்கம் எப்பொழுதுமே உடலுக்கு எனர்ஜியை அளிக்க வல்லது. அதாவது தூக்கம் உடலுக்கு சக்தி வழங்குவதில் மிகவும் உபயோகமாக இருக்கிறது. நன்றாகத் தூங்கி எழுந்தாலே உடம்பு ரொம்ப பிரெஷ்சாக ரீசார்ஜ் பண்ணியதுபோல் ஆகிவிடுகிறது என்று சிலர் சொல்வதுண்டு. மனிதனின் தூக்கத் தேவை இருக்கிறதே, அது வயதுக்கு வயது வித்தியாசப்படும். அதே மாதிரி ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். Continue reading “யார், எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?”