அவ்வப்போது ஏற்படும் வலிகளை அசட்டை செய்ய வேண்டாம்

09-1376038076-06-1375764459-6-heartdisease-600தலைவலி,நெஞ்சுவலி,பல்வலி போன்ற பல்வேறு பொதுவான வலிகள் நம் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. போகிற போக்கில் நாம் அவற்றை புறக்கணித்துவிட்டு செல்வதுண்டு. ஒருசில வலிகள் நோயின் அறிகுறிகளாக இருப்பதில்லை. அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும் என்பது வள்ளுவன் வாக்கு. எனவே எல்லா அறிகுறிகளையும் புறக்கணிப்பது அறிவற்ற செயலாகும்.

காக்கை தன்னைவிட வலிய கோட்டானைக் கூட பகலில் வென்றுவிடும், அதுபோல் சரியான நேரத்தில் நோயின் அறிகுறியைக் கண்டு பரிசோதனை செய்தால் நோயை முதலில் கண்டுபிடித்து எளிதாக தீர்க்க முடியும். எந்தெந்த அறிகுறிகள் புறக்கணிக்ககூடாதவை என்று கண்டறிய வேண்டியது என்பது இன்றியமையாதது. சில வலிகள் மிக மோசமான நோயின் அறிகுறிகளாக இருக்கக்கூடும்.

ஆகவே அவற்றைப் புறக்கணிக்க வேண்டாம். அப்படிப்பட்ட புறக்கணிக்கக் கூடாத வலிகள் மற்றும் அறிகுறிகளை நாங்கள் இங்கே பட்டியலிட்டுள்ளோம். அவற்றை படித்து நோயின் அறிகுறிகளை கண்டுபிடித்து பரிசோதனை செய்தால் நோய்களைத் தீர்க்க முடியும். Continue reading “அவ்வப்போது ஏற்படும் வலிகளை அசட்டை செய்ய வேண்டாம்”