பெரும்வாரியான இஸ்லாமிய மக்கள் இந்த புனித ரமலான் மாதத்தை அனுசரித்து நோன்பை கடைபிடித்து வருகிறார்கள். இந்த கட்டுரையில் ரமாலானின் வரலாற்றையும் அதன் முக்கியதுவத்தையும் பார்போம்.
இஸ்லாமிய காலண்டரில் ரமலான் மாதம் புனித மாதமாக கடைபிடிக்கபட்டு வருகிறது. இந்த மாதத்தில்தான் அல்லாஹ் வானவ தூதர் ஜிப்ரியில் (அலை) மூலமாக இறைதூதர் முஹமது (ஸல்) அவர்களிடம் புனித குரான் வசனங்களை அறிவிக்க செய்தான்.
பருவம் (மனதலவிலும், உடலலவிலும்) அடைந்த ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக ரமலான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டும்.
நோன்பு காலை தொழுகையை (சுபுஹு) அடிப்படையாக வைத்து தொடங்கபடுகிறது. சூரியன் உதயமாகும் வேலையில் (மக்ரிபு) நோன்பு விடபடுகிறது. இதன் போலவே ரமலான் மாதம் முழுவதும் அனுசரிக்கபடுகிறது.
சில மக்களுக்கு ரமலானில் விலக்கு அளிக்கபடுகிறது. அதாவது மனதளவில் பாதிப்புக்கு உள்ளானவர்கள், பருவம் அடையாத குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்பட்டவர்கள், கர்ப்பினிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு அவர்களால் முடியாத பட்சத்தில் விலக்கு அளிக்கபடுகிறது.
அதற்கு பகரமாக, அவர்கள் ஒரு நோன்பிற்கு ஒரு ஏழைக்காவது உணவு தந்திருக்க வேண்டும் (அவர் தவரவிட்ட நோன்புக்காக). Read the rest of this entry »