டயட்-ல இருக்கும் போது, சிவப்பு உணவுகளையும் சேத்துக்கோங்க…

காய்கறி மற்றும் பழங்களில் இருக்கும் நன்மைகள் அனைத்தும் அனைவருக்கும் நன்கு தெரியும். ஆனால் சிவப்பு நிற காய்கள் மற்றும் பழங்களில் நன்மைகளைப் பற்றி யாருக்கும் அவ்வளவு தெரியாது.

பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டும் சாப்பிட்டால், உடலில் இருக்கும் நோய்கள் சரியாகும் என்று நினைக்க வேண்டாம். சிவப்பு நிறக் காய்கறி மற்றும் பழங்களிலும் நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிலும் தற்போது நிறைய பேர், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்காக உணவில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்கள். மேலும் எந்த நேரத்தில் எந்த காய் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும் என்று ஒரு பட்டியலையே பின்பற்றி வருகின்றனர்.

அத்தகையவர்கள் ஒருசில சிறந்த உணவுகளான சிவப்பு நிற காய்கறி மற்றும் பழங்களின் முக்கியத்துவத்தை மற்றும் அதன் நன்மைகளைப் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். சிவப்பு நிறத்தில் இருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக அளவு கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உதாரணமாக தக்காளி ஒரு சிவப்பு நிற ஆரோக்கிய உணவுப் பொருள்களுள் ஒன்று. இந்த தக்காளியை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் இது போன்ற மற்ற சிவப்பு நிற உணவுகளை உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஏற்படும் பல நோய்கள் கட்டுப்படுவதுடன், உடல் நன்கு பலத்துடன் இருக்கும். இப்போது அந்த சிவப்பு நிற உணவுப் பொருட்களில், எந்த காய் மற்றும் பழங்களைச் சாப்பிட்டால், எந்த நோய் சரியாகும் என்பதைப் பற்றி பார்க்கலாம்… Read the rest of this entry »

காய் / பழங்களின் மருத்துவக் குணங்கள்

இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் காய், பழ வகைகளும் ஆகும்.

தவறாமல் தினமும் சாப்பிடுகிறோம் தானே! நாம் சாப்பிடும் உணவில் என்னென்ன இருக்கிறது என்பதை அறிந்து அப்போதைய நம் உடல்நிலைக்கு பருவநிலைக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுத்து சாப்பிட உதவவே இந்த இணைப்பு.

எதையுமே தெரிந்து அனுபவிக்கும்போது கிடைக்கிற சந்தோஷம் அலாதிதான். தாஜ்மஹால் என்பதை எந்தப் பின்னணியும் அறியாமல் பார்க்கும்போது அது பிரமிக்க வைக்கிற கட்டடக்கலை மட்டுமே. அதன் பின்னணியில் உள்ள காதலறிந்து பார்க்கும்போது உங்களுக்குள்ளும் கவிதை அனுபவம் கிட்டும்.

அப்படித்தான் தினமும் சாப்பிடும் காய், பழங்களின் ருசியோடு அதிலுள்ள பயன்களையும் அறிந்து சாப்பிடுவதும். இவற்றில் என்னென்ன சத்துக்கள் உள்ளன? எது யாருக்கு ஏற்றது? யார் எதை விலக்கி வைக்க வேண்டும் என்பதை தெரிந்து உண்டு பயனும், பலமும் பெறவே இந்த இணைப்பு. Read the rest of this entry »

பழங்களை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு..

அதிகமாக பழத்தை விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள்? அதிலும் பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு, தோலை தூக்கி போடுபவர்களா? அவர்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் உள்ளது.

அப்படி தோலை தூக்கி போடாமல் அதையும் சாப்பிடும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

ஏனெனில் பழத்தை விட பழத்தில் தோல்களிலேயே அதிகமான அளவு ஊட்டச்சத்தானது இருக்கிறது. அந்த தோலானது சுவையான இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதை கண்டிப்பாக சாப்பிடுங்கள்.

ஏனென்றால் அதனை உண்பதால் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதிலும் முக்கியமாக பழத்தை சாப்பிடும் முன்பு நன்கு கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். அத்தகைய பழங்களில் எவற்றின் தோல்களை முக்கியமாக சாப்பிட வேண்டும். வாங்க பார்க்கலாம்.. Read the rest of this entry »

பழங்களை எப்படி? எப்பொழுது? – சாப்பிடணும்

” பழங்களில் எத்தனை நன்மைகள் “

உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது மருத்துவரை நாட வேண்டி இருக்காது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றலாமே.

பழங்களில் உள்ள உயர்தர ஊட்டச்சத்துக்கள், உயர்ந்த நார்ச்சத்து நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தினசரி ஏதாவது ஒரு வகையில் பழங்களை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். உலக அளவில் நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளின் மூலம் பழங்கள் சாப்பிடுவதன் நன்மைகள் தெரியவந்துள்ளது. பழம், காய்கறி சாப்பிடுவதன் மூலம் இதயநோய் பாதிப்பு ஏற்படுவதில்லை, டைப் 2 நீரிழிவு ஏற்படுவதில்லை, சில புற்றுநோய்கள் குணமடைகின்றன. உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதில்லை என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். உடல்பருமன் ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர். Read the rest of this entry »

%d bloggers like this: