உண்மையான நண்பர்களைச் சேர்ப்பதுதான் உயிருக்கு பலம் தரும்…ரஜினி

best-friendsசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  திரையுலகில் மட்டுமில்லாமல் வெளியிலும் மற்றவர்களுடன் பழகுவதில் அற்புதமான மற்றும் எளிமையான மனிதர் என்று அவருடன் இருப்பவர்கள் எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ரஜினி எந்த மேடை விழாக்களில் கலந்து கொண்டாளும், சிறிய குட்டி கதைகளை சொல்லி வருவார்.

அவ்வாறு நட்பை பற்றி அவர் கூறிய ஒரு சிறுகதையை நம் உடையாநாடு வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளத்தான் இப்பதிவு..

ரஜினி சொன்ன கதை இது :

ஓரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான். ஒரு சமயம் பணக்கார நண்பனுக்கு கொஞ்சம் பணத்தட்டுபாடு வந்துடுச்சி. Continue reading

நட்பு முறிவதற்க்கான சில அறிகுறிகள்!!!

friendship breaks
Why friendship breaks?

உறவுகளிலேயே மிகவும் புனிதமானது நட்பு தான். அத்தகைய நட்பு இல்லாமல் எவராலும், இந்த உலகில் நிம்மதியாக வாழ முடியாது. நட்பு இல்லாவிட்டால், உலகமே வெறிச்சோடி காணப்படும். ஏனெனில் ஒருவரது தனது உணர்ச்சியை, கஷ்டத்தை யாரிடம் பகிராமல் இருந்தாலும், நிச்சயம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது. “தோள் கொடுப்பான் நண்பன்” என்று சும்மாவா சொன்னாங்க…

ஏனெனில் எந்த ஒரு கஷ்டமான நிலையிலும், யார் விட்டு சென்றாலும், நண்பர்கள் மட்டும் பிரிந்து செல்லமாட்டார்கள். அந்த கஷ்ட காலத்தில், அதனை போக்குவதற்கு முயல்வதோடு, சந்தோஷமாகவும் வைத்துக் கொள்வார்கள். இந்த உலகில் அனைவருக்கும் மிகவும் நெருங்கிய நண்பர் என்ற ஒருவர் இருப்பார்கள். அத்தகையவர்களின் மீது நிச்சயம் ‘தனக்கு மட்டுமே சொந்தம்’ என்ற எண்ணம் இருக்கும். அத்தகைய எண்ணத்தால், யாரிடமும் அவர்களை விட்டுத் தர மாட்டோம். Continue reading

“நல்ல நண்பர்கள்” – இறைவன் கொடுத்த வரம்

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

உன் நண்பன் பற்றிசொல் உன்னை பற்றி சொல்கிறேன். நம்முடைய குணநலன்கள், நடத்தை போன்ற அம்சங்களை நிர்ணயிக்க முக்கிய காரணம் .நல்ல மனைவியை போல நல்ல நண்பன் கிடைப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான். தாய், தந்தையை விட நன் வாழ்வில் அதிக நேரம் நம்முடன் இருப்பவர்கள் நண்பர்களே!.

இந்த நவீன யுகத்தில் எல்லாமே விரைவாக நடக்கின்றன ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்க்கையை ஐம்பத்து ஆண்டுகள் கழித்து பார்த்தால் இதுவரை என்ன பெற்றிருக்கிறோம் என ஆராய்ந்தால் நண்பர்கள் தான் நினைவுக்கு வருவர் .

உலகில் பெற்றோர், காதலி, உறவினர் ஏன் கல்வி அறிவு கூட இல்லாமல் வாழமுடியும் அனால் நண்பர்கள் இல்லாதவர் யாருமே இருக்கமுடியாது.

தினமும் நாளிதழ்களில் பார்க்கும் பொது பிரபலங்கள் இந்த நிலைக்கு வர காரணமாக நண்பர்களை குறிப்பிடுபவர்கள் .

அதேபோல திருட்டு , கொலை போன்ற பாதக செயல்களில் தனது நண்பர்களுடன் ஈடுபடுவதை பார்க்கின்றோம்.

ஆகவே நட்பு தான் நம்மை நிர்ணயிக்கின்றது பெரும்பாலான நேரங்களில். நண்பனை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே போகலாம் .

நண்பர்களை பற்றி :கண்ணதாசன் Continue reading

நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள்

ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்,

அவனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான், மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமை பட்டான். Continue reading