கனவுகள் இல்லாத அமைதியான தூக்கத்திற்கு…

யோகாசனங்கள் உடலுக்கும் மனதுக்கும் வலிவையும், ஆற்றலையும் தருகின்றன. ஆனால் அதே வேளையில் தியானம் என்பது மனதை தொடர்ந்து செம்மைப்படுத்த உதவுகிறது. தியானத்தின் மூலம் நமது புலன்களின் வலிமை அதிகப்படுத்தப்படுகிறது. உடல் பதட்டமில்லாத ஓய்வு நிலைக்கு செல்கிறது. அதாவது ஒரு ரேடியோ அல்லது தொலைக்காட்சி தெளிவற்ற நிலையில் அதை பைன் டியூன் செய்வது போல் நமது விலகி ஓடி எத்தனையே குழப்பத்தை சிந்தித்துக் கொண்டிருக்கும் மனதை பைன் டியூன் செய்வதே தியானம்.

மனதை வென்றவர்களிடம் இருந்தே மகத்தான் விஷயங்கள் இந்த உலகத்திற்காக வெளிப்பட்டிருக்கின்றன. அதாவது, இந்த உலகின் செயற்கரிய சாதனைகள் என்று சொல்லப்படுபவை அனைத்துமே மனதை ஒருங்கிணைத்தன் மூலமே சாதிக்கப்பட்டிருக்கின்றன. மனதை ஒரு புள்ளியில் ஒருங்கிணைப்பதுவே தியானம். அதாவது, அலைபாயும் மனதை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயலவே தியானம் செய்கிறோம். மற்றவர்களிடம் இல்லாத அக,புற வேறுபாடுகளை தியானம் செய்பவர்களிடம் காண முடிவது கண்கூடு.

தியானப்பயிற்சியில் ஈடுபடுபவர்களின் கண்களில் ஒரு வித பிரகாசமும், முகத்தில் ஒரு இயல்பான அமைதியும் எப்போதும் இருக்கும். Read the rest of this entry »

நிம்மதியான தூக்கத்திற்கு நிராகரியுங்கள் Laptop மற்றும் Mobile Phones

எப்போது பார்த்தாலும் சிலர் செல்லும் கையுமாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு செல்போன் இல்லை என்றாலும் எதையோ இழந்தது போல மாறிவிடுவார்கள். உறங்கும் போது கூட செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டோ, தலையணைக்கு அடியில் செல்போனை(cellphone) வைத்துக்கொண்டோ இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நிம்மதியாக உறக்கம் வரும் என்ற நினைப்பு அவர்களுக்கு. அதே போல லேட்டாப்பையும் இவர்கள் விடுவதே இல்லை. படுக்கையில் அமர்ந்துகொண்டு லேப்டாப்பை பயன்படுத்திவிட்டு, அதை ஆப் செய்யாமல் கூட உறங்கி விடுபவர்களும் உண்டு. இது போன்ற செயல்கள் மிக தவறானது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. Read the rest of this entry »

%d bloggers like this: