உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான 10 உணவுகள்!!!

foodபெண்கள் எப்படி தங்களை அழகுப்படுத்த அழகு நிலையங்களுக்குச் சென்று நேரத்தை செலவழிப்பார்கள். அதேப் போல் ஆண்கள் தங்கள் உடல் கட்டமைப்பை பாதுகாக்க உடற்பயிற்சி செய்வதில் நேரத்தை செலவழிப்பார்கள். அதிலும் சில பேர் மணிக்கணக்கில் உடற்பயிற்சியில் ஈடுபடுவதுண்டு. பொதுவாக காலையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டவுடன், உடலில் உள்ள புரதச்சத்து, நீர்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவை வெளியேறும். மேலும் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களும் வெளியேறும்.

அதனால் அந்த நாள் முழுவதும் சோர்வுடன் இருக்க நேரிடும். ஆகவே உடற்பயிற்சி செய்த 30 நிமிடங்களில் உணவை உண்ண வேண்டும். ஏனென்றால் இந்த நேரத்தில் தான் உடற்பயிற்சியால் இழந்த ஊட்டச்சத்துக்கள் வேகமாக மறுபடியும் உடலில் ஏறும். உடற்பயிற்சி செய்த பின் சோர்வு ஏற்படுவதால், சில சமயங்களில் அதனை தினமும் செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழக்கூடும்.

இனிமேல் கவலையை விட்டொழியுங்கள். இழந்த ஊட்டச்சத்துக்களை மீண்டும் பெறுவதற்கு, உடற்பயிற்சி செய்த பின் சாப்பிட வேண்டிய உணவு வகைகளை என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை உடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிட்டு வாருங்கள்.

ஆம்லெட்

22-1374470310-1-omlette

உடற்பயிற்சி செய்த பின், உடலில் உள்ள தசை வளர்ச்சிக்கு அதிக புரதச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். இத்தகைய புரதச்சத்து, முட்டையில் உள்ள வெள்ளை கருவில் போதுமான அளவில் உள்ளது. மேலும் அதில் அத்தியாவசிய அமினோ அமிலங்களும், வைட்டமின்களும் அடங்கியுள்ளது. உடற்பயிற்சி செய்த பின், பாதிப்படைந்த திசுக்களின் மறு வளர்ச்சிக்கு அமினோ அமிலங்கள் உதவி புரியும். Continue reading “உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான 10 உணவுகள்!!!”

வயிற்றின் தன்மையறிந்து சாப்பிடுங்க..!

சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும் செரித்துவிடும். ஆனால் சிலருக்கோ அதைச் சாப்பிட்டுவிட்டு இதைச் சாப்பிட்டால் வயிறு பிரச்சினை, இதைச் சாப்பிட்டுவிட்டு அதைச் சாப்பிட்டால் ஜீரணக் கோளாறு என்று பிரச்சினை நீளும்.

எதைச் சாப்பிட்டாலும் செரிப்பது என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனாலும், வயிற்றின் தன்மை அறிந்து அதற்கேற்றாற் போல் சாப்பிட்டால், அது வயிற்றுக்கும் நன்மைதானே.

அப்படிப்பட்ட, வயிற்றுக்கு உகந்த சில பொருட்கள் எவை? ஒத்துவராதவைகள் எவை என்பதனைப் பார்ப்போம். Continue reading “வயிற்றின் தன்மையறிந்து சாப்பிடுங்க..!”

சாப்பிட்ட உடன் செய்யகூடாத 7 விஷயங்கள்

சப்பிட்ட உடன் செய்யகூடாத 7 விஷயங்கள்

சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதை விட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும். வல்லுநர்கள் 1 சிகரெட் பிடித்தால் 10 சிகரெட் பிடிப்பதற்கு சமம் என்று நிருபித்திருக்கிறார்கள்.

சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது, அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது.

எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். Continue reading “சாப்பிட்ட உடன் செய்யகூடாத 7 விஷயங்கள்”