ரமலான் அதன் வரலாறும், முக்கியத்துவமும் – சிறப்பு கட்டுரை

Significance of Ramadan

பெரும்வாரியான இஸ்லாமிய மக்கள் இந்த புனித ரமலான் மாதத்தை அனுசரித்து நோன்பை கடைபிடித்து வருகிறார்கள். இந்த கட்டுரையில் ரமாலானின் வரலாற்றையும் அதன் முக்கியதுவத்தையும் பார்போம்.

இஸ்லாமிய காலண்டரில் ரமலான் மாதம் புனித மாதமாக கடைபிடிக்கபட்டு வருகிறது. இந்த மாதத்தில்தான் அல்லாஹ் வானவ தூதர் ஜிப்ரியில் (அலை) மூலமாக இறைதூதர் முஹமது (ஸல்) அவர்களிடம் புனித குரான் வசனங்களை அறிவிக்க செய்தான்.

பருவம் (மனதலவிலும், உடலலவிலும்) அடைந்த ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக ரமலான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டும்.

நோன்பு காலை தொழுகையை (சுபுஹு) அடிப்படையாக வைத்து தொடங்கபடுகிறது. சூரியன் உதயமாகும் வேலையில் (மக்ரிபு) நோன்பு விடபடுகிறது. இதன் போலவே ரமலான் மாதம் முழுவதும் அனுசரிக்கபடுகிறது.

சில மக்களுக்கு ரமலானில் விலக்கு அளிக்கபடுகிறது. அதாவது மனதளவில் பாதிப்புக்கு உள்ளானவர்கள், பருவம் அடையாத குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்பட்டவர்கள், கர்ப்பினிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு அவர்களால் முடியாத பட்சத்தில் விலக்கு அளிக்கபடுகிறது.

அதற்கு பகரமாக, அவர்கள் ஒரு நோன்பிற்கு ஒரு ஏழைக்காவது உணவு தந்திருக்க வேண்டும் (அவர் தவரவிட்ட நோன்புக்காக). Read the rest of this entry »

நோன்பாளிகள் கவனத்திற்கு..

“ஆரோக்கிய வழியில் நோன்பு வைக்க”

நோன்பு 

  • “மறுமைக்கு மட்டும்ல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்”
  • “வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு”
  • “உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும்”

நுரையீரல் அதிகபடியாக இயங்கும் நேரம் காலை 3-5. ஸஹர் நேரத்தில் நாம் நோன்பு வைப்பதற்காக அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த பத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது.இதன் மூலம் மற்ற உறுபுக்கள் புத்துணர்வு பெறுகின்றன.

காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டு பழகி போன நமது வயிரு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன.

பகல் நேரத்தில் டீ, காபி, சிகரெட், வெற்றிலை, பொடி போன்ற அனைத்து வகையான கெட்டபழக்கங்களிலிருந்தும் நீங்கி விடுவதால், நோன்பு அவரது உடல்நிலை நலிவடைவதிலிருந்து காப்பாற்றி, அவரது உடல் சீராக இயங்க உதவுகின்றது.

இந்த நேரத்தில் தான் உடலில் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகன்றன. Read the rest of this entry »

உண்ணாநோன்பு இருத்தலின் மகத்துமும் சில ஆலோசனைகளும்!

யோகாசனம், பிராணயாமம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்பவர்கள் மிக முக்கியமாக செய்ய வேண்டிய ஒன்று உபவாசம். அதாவது உண்ணநோன்பு. எடுத்துக் கொள்ளும் உணவால் உடலில் சேரும் கழிவுகளை உடலை விட்டு முழுவதுமாக நீக்க ஒரு மிகச்சிறந்த உத்தி உண்ணாநோன்பு. அது பற்றி இங்கு பார்க்கலாம்.

உலகில் உள்ள அனைத்து மதங்களிலும் காணப்படும் ஒரே விடயம் உபவாசம் (நோன்பு). இது மதம், இனம் இவற்றையெல்லாம் கடந்த ஒரு உன்னத செயல் என்பது இதன் மூலம் புலப்படுகிறது. Read the rest of this entry »

%d bloggers like this: