ரமளானில் 21 மணி நேரம் நோன்பு நோற்கும் முஸ்லிம் சகோதரர்

லெபனானைப் பூர்வீகமாக கொண்ட வஸ்ஸாம் அஜாகீர் (Wassam Azaqeer) தற்போது பனிமலைகள் சூழ்ந்த நாடாகிய ‘கிரீன் லேண்ட்’ (Greenland) எனும் இடத்தில் வசித்து வரும் ஒரே முஸ்லிம் ஆவார். இவர் இந்த ரமலானில் நாள்தோறும் 21 மணி நேரம், முழு ஈடுபாட்டுடன் நோன்பு* நோற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரீன்லேண்ட் என்பது உலகிலேயே மிகப் பெரியத் தீவு. இது வட அட்லாண்டிக் மற்றும் ஆர்டிக் பெருங்கடலுக்கு மத்தியில் அமைந்துள்ள ‘டென்மார்க்’ நாட்டின் ஒரு சுய ஆட்சி மாநிலமாகும்.

பிரபல அரபுத் தொலைக் காட்சி ஒன்றின் செய்தியின்படி, வஸ்ஸாம் அஜாகீர் என்பவர் பல ஆண்டுகளாக கிரீன்லேண்டில் வசித்து வரும் அரபு முஸ்லிம் ஆவார். “அரேபிய கொலம்பஸ்” என்று அழைக்கபடும் இவர் கடுமையான சூழ்நிலையில் இங்கு வசித்து வருவது மட்டுமின்றி ‘கிரீன்லேண்டில்’ உள்ள நுயூக் நகரத்தில் வெற்றிகரமாக தொழில் புரியும் ஒரே முஸ்லிம் தொழிலதிபராகவும் திகழ்கின்றார்.

Continue reading “ரமளானில் 21 மணி நேரம் நோன்பு நோற்கும் முஸ்லிம் சகோதரர்”