மனமே Relax ப்ளீஸ்!

‘தொண்டையில் நிற்கிறது வரமோட்டேன் என்கிறது’; ‘இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன், எங்கேன்னு ஞாபகம் வரலை’ என்று மூளையைக் கசக்கிக் கொள்வோம் தெரியுமா? அப்படிச் சிரமப்படும்போதோ, ஒரு பிரச்சினையை, சிக்கலை, வேலையை, முடித்தே தீரவேண்டும் என்று பதறும்போதோ அது நடைபெறாமல் மேலும் சிக்கலாகி, எரிச்சல் அதிகமாகி, கோபம், ஆத்திரம், மகிழ்வு இழத்தல்.. இத்தியாதி…..!

சிக்கலான நேரங்களில் அந்தப் பிரச்சினையை ஒத்திவைத்து, அதன் போக்கிற்கு விட்டுவிட்டு நாம் ரிலாக்ஸ்டாக இருந்தால் போதும்; எங்கிருந்தோ திடீரென ஒரு பொறி பறந்து வந்து ஒரு விடை தரும்; நம் பிரச்சினைக்குத் தீர்வு தென்படும். குளியலறை, கழிவறை, படுக்கையறை போன்ற இடங்களில் நாம் இயல்பாய் நம் இறுக்கம் தளர்த்தியுள்ள தருணங்களில் அவை நடைபெறும் என்று உளவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கழிவறையில் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும்போது புது ஐடியாக்கள் சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது. அப்பொழுது மறவாமல் செல்ஃபோனையும் வெளியே விட்டுவிட்டுச் செல்ல வேண்டும். Continue reading “மனமே Relax ப்ளீஸ்!”