மனமே Relax ப்ளீஸ்!

‘தொண்டையில் நிற்கிறது வரமோட்டேன் என்கிறது’; ‘இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன், எங்கேன்னு ஞாபகம் வரலை’ என்று மூளையைக் கசக்கிக் கொள்வோம் தெரியுமா? அப்படிச் சிரமப்படும்போதோ, ஒரு பிரச்சினையை, சிக்கலை, வேலையை, முடித்தே தீரவேண்டும் என்று பதறும்போதோ அது நடைபெறாமல் மேலும் சிக்கலாகி, எரிச்சல் அதிகமாகி, கோபம், ஆத்திரம், மகிழ்வு இழத்தல்.. இத்தியாதி…..!

சிக்கலான நேரங்களில் அந்தப் பிரச்சினையை ஒத்திவைத்து, அதன் போக்கிற்கு விட்டுவிட்டு நாம் ரிலாக்ஸ்டாக இருந்தால் போதும்; எங்கிருந்தோ திடீரென ஒரு பொறி பறந்து வந்து ஒரு விடை தரும்; நம் பிரச்சினைக்குத் தீர்வு தென்படும். குளியலறை, கழிவறை, படுக்கையறை போன்ற இடங்களில் நாம் இயல்பாய் நம் இறுக்கம் தளர்த்தியுள்ள தருணங்களில் அவை நடைபெறும் என்று உளவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கழிவறையில் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும்போது புது ஐடியாக்கள் சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது. அப்பொழுது மறவாமல் செல்ஃபோனையும் வெளியே விட்டுவிட்டுச் செல்ல வேண்டும். Read the rest of this entry »

Rs. 910603234300000 ரூபாய் மட்டும்…..இன்னுமாட இந்த ஊரு நம்மள நம்புது….!

Rs. 910603234300000

ரூபாய் மட்டும் இது 1948 முதல் 2010 வரையிலான முக்கிய ஊழல் பணத்தின் மதிப்பு

எங்கோ கேட்ட குரல் :இன்னுமாட இந்த ஊரு நம்மள நம்புது Read the rest of this entry »

அமைதியான உள்ளம்…

உலகத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

நபி (ஸல்) அவர்கள் மீதும் நபித்தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதனமும் உண்டாவதாக!

இஸ்லாமிய சமூகம் நடைமுறை வாழ்விலும் வணக்க வழிபாடுகளிலும் கொள்கைக் கோட்பாட்டிலும் தூய்மையானதாக தனித்து விளங்குகின்றது. நபி (ஸல்) அவர்கள் உள்ளத்தை அமைதியின்மையாக்கக் கூடிய்வற்றை விட்டும் பிரிவினையையும் கோபத்தையும் உருவாக்காக் கூடியவற்றை விட்டும் தடுத்திருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நீங்கள் ஒருவருக்கொருவர் கோபித்துக் கொள்ள வேண்டாம்; பொறாமை கொள்ள வேண்டாம்; உறவினரை துண்டித்து நடக்க வேண்டாம்; தீமையின்பால் அலோசனை செய்து கொள்ள வேண்டாம், அல்லாஹ்வை வழிப்படக்கூடிய சகோதரர்களாக இருந்து கொள்ளுங்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரனுடன் மூன்றி நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது ஹராமாகும்” (ஆதாரம்: முஸ்லிம்)

மக்களுக்கு மத்தியில் அன்பையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தக்கூடிய விடயங்களை ஏவியிருக்கின்றார்கள்.

“என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக நீங்கள் விசுவாசம் கொள்ளும் வரை சுவர்க்கம் நுழைமாட்டீர்கள்; மேலும் ஒருவருகொருவர் விரும்பிக் கொள்ளாதவரை விசுவாசம் கொள்ள மாட்டீர்கள்” (ஆதாரம்: முஸ்லிம்) Read the rest of this entry »

வறுமையின் வாசலில் வசந்தம்!!!

மதீனாவில் அது ஒரு பஞ்சக் காலம். எங்கும் பட்டினி. வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ஒரு பெண் தன் இரு பெண் குழந்தைகளுடன் ஒரு நாள் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்து தங்கள் பசிக்கு ஏதாவது தருமாறு கேட்டாள்.
விசுவாசிகளின் அன்னையான ஆயிஷா (ரலி) அவர்கள் தங்கள் வீடு முழுவதும் தேடினார் – வந்த விருந்தாளிகளுக்கு ஏதாவது கொடுக்க! ஒன்றும் கிடைக்கவில்லை. அன்னைக்கு அளப்பரிய சங்கடம். மீண்டும் தேடினார். இறுதியில் மூன்று பேரீச்சம் பழங்களைக் கண்டெடுத்தார்.

“இதனைத் தவிர வேறு ஒன்றும் கிடைக்கவில்லை” என்று கூறி அந்த மூன்று பேரீச்சம் பழங்களையும் அந்தப் பெண்ணிடம் கொடுத்தார் அன்னையரின் அன்னை. Read the rest of this entry »

அதிசிய மிகு ஜம்ஜம் தண்ணீர்

ஆராய்ச்சி: தாரிக் ஹுஸைன் ; மொழியாக்ம்: காஜா முயீனுத்தீன்

ஹஜ் காலம் வரும்போதெல்லாம் அதிசிய நீராகிய ஜம்ஜமின் அந்த நினைவுகள் எனது மனதிலே தோன்றும். ஆம் 1971 ஆம் ஆண்டில் எகிப்து நாட்டின் ஒரு டாக்டர் ஐரோப்பிய பிரசுரத்திற்கு ‘ஜம்ஜம் நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல” என்ற அடிப்படையில் ஒரு செய்தியைக் கொடுத்தார். உடனே நான் முஸ்லிம்களுக்கு ஏற்படும் அநீதிகளில் இது ஒன்று என்று நினைத்தேன்.

கஃபத்துல்தாஹ் தாழ்வு பகுதியான மக்காவின் நடு மையத்தில் உள்ளதால் மக்காவின் கழிவு நீர் ஒன்று சேர்ந்து கிணற்றில் விழுவதாக அவரது யூகம் இருந்தது.அதிஸ்டவசமாக இந்தச் செய்தி உடனே மன்னர் பைசல் அவர்களின் காதிற்கு எட்டியது. கோபம் அடைந்த மன்னர் அந்த எகிப்திய டாக்டரின் கூற்றை பொய் என நிருபிக்க முடிவெடுத்தார்.

Read the rest of this entry »

%d bloggers like this: