“நல்ல நண்பர்கள்” – இறைவன் கொடுத்த வரம்

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

உன் நண்பன் பற்றிசொல் உன்னை பற்றி சொல்கிறேன். நம்முடைய குணநலன்கள், நடத்தை போன்ற அம்சங்களை நிர்ணயிக்க முக்கிய காரணம் .நல்ல மனைவியை போல நல்ல நண்பன் கிடைப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான். தாய், தந்தையை விட நன் வாழ்வில் அதிக நேரம் நம்முடன் இருப்பவர்கள் நண்பர்களே!.

இந்த நவீன யுகத்தில் எல்லாமே விரைவாக நடக்கின்றன ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்க்கையை ஐம்பத்து ஆண்டுகள் கழித்து பார்த்தால் இதுவரை என்ன பெற்றிருக்கிறோம் என ஆராய்ந்தால் நண்பர்கள் தான் நினைவுக்கு வருவர் .

உலகில் பெற்றோர், காதலி, உறவினர் ஏன் கல்வி அறிவு கூட இல்லாமல் வாழமுடியும் அனால் நண்பர்கள் இல்லாதவர் யாருமே இருக்கமுடியாது.

தினமும் நாளிதழ்களில் பார்க்கும் பொது பிரபலங்கள் இந்த நிலைக்கு வர காரணமாக நண்பர்களை குறிப்பிடுபவர்கள் .

அதேபோல திருட்டு , கொலை போன்ற பாதக செயல்களில் தனது நண்பர்களுடன் ஈடுபடுவதை பார்க்கின்றோம்.

ஆகவே நட்பு தான் நம்மை நிர்ணயிக்கின்றது பெரும்பாலான நேரங்களில். நண்பனை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே போகலாம் .

நண்பர்களை பற்றி :கண்ணதாசன் Read the rest of this entry »

நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள்

ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்,

அவனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான், மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமை பட்டான். Read the rest of this entry »

%d bloggers like this: