உண்மையான நண்பர்களைச் சேர்ப்பதுதான் உயிருக்கு பலம் தரும்…ரஜினி

best-friendsசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  திரையுலகில் மட்டுமில்லாமல் வெளியிலும் மற்றவர்களுடன் பழகுவதில் அற்புதமான மற்றும் எளிமையான மனிதர் என்று அவருடன் இருப்பவர்கள் எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ரஜினி எந்த மேடை விழாக்களில் கலந்து கொண்டாளும், சிறிய குட்டி கதைகளை சொல்லி வருவார்.

அவ்வாறு நட்பை பற்றி அவர் கூறிய ஒரு சிறுகதையை நம் உடையாநாடு வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளத்தான் இப்பதிவு..

ரஜினி சொன்ன கதை இது :

ஓரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான். ஒரு சமயம் பணக்கார நண்பனுக்கு கொஞ்சம் பணத்தட்டுபாடு வந்துடுச்சி. Continue reading

Advertisements

தேவை நல்ல நட்பு..!

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் :

“நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். கஸ்தூரி வியாபரி உனக்கு அதனை (இனாமாகத்) தரலாம். அல்லது நீ அதனை அவனிடமிருந்து விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒருவேளை அவனிடமிருந்து நீ நறுமணத்தையாவது நுகரலாம். கெட்ட நண்பன் துருத்தியில் ஊதுகின்ற கொல்லனைப் போலாவான். அவன் உனது ஆடையை எரித்து விடலாம். அல்லது நீ அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகருவாய்.” அறிவிப்பவர் : அபூ மூஸா அல் அஷ்அரீ رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.

தனிமனித சீர்திருதத்திற்கும் சீரழிவுக்கும் உள்ளமும் சூழலும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. மேற்குறிப்பிட்ட ஹதீஸ் தனிமனித வாழ்வில் சூழல் ஏற்படுத்தும் பாதிப்புப் பற்றி விளக்குகிறது. நபி صلى الله عليه وسلم அவர்கள் அதனை அழகிய உதாரணத்தினூடாக விளக்குகிறார்கள். Continue reading