நல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை

எப்போதும் நல்ல எண்ணங்களையே எண்ணுங்கள். நல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. அவை உங்களுக்கு நல்லதையே கொண்டு வந்து சேர்க்கும். விவேகானந்தர் சொல்கிறார், நீங்கள் உங்களை வலிமையானவராக நினைத்தால் வலிமையானவர்களாக மாறுவீர்கள். பலவீனராக நினைத்தால் பலவீனராகி விடுவீர்கள்.

உங்கள் எண்ணங்களுக்கு அவ்வளவு வலிமை உண்டு. எனவே எப்பொழுதும் எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து ஆரோக்கியமான நல்ல எண்ணங்களுக்கு மட்டுமே மனதில் இடம் கொடுங்கள்.

கற்பக மரத்தைப் பற்றிய கதை உங்களுக்குத் தெரியும் அல்லவா? காலம் காலமாக அந்தக் கதை சொல்லப்பட்டு வருகிறது. இருந்தாலும் அதில் பொதிந்து இருக்கின்ற உண்மையின் ஒளி நமது இருட்டான வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஆற்றல் வாய்ந்தது.

காட்டு வழியே செல்கிறான் ஒரு மனிதன். கோடைக்காலத்து உச்சி வெயில் மண்டையைப் பிளக்கிறது. தாகம் தொண்டையை வறட்டுகிறது. பசி வயிற்றை இழுத்துப் பிடித்து மேலே நடக்க விடாமல் தடுக்கிறது. கால்கள் தள்ளாடுகின்றன, கண்கள் பஞ்சடைகின்றன. அந்த மனிதன் ஒரு மரத்தின் நிழலில் வந்து படுக்கிறான். குளுகுளு வென காற்று வீசுகிறது. வெயிலில் அல்லல்பட்டு வந்த எனக்கு குளிர்ச்சியான நிழல் கிடைத்தது, Continue reading “நல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை”

தன்னம்பிக்கை vs கர்வம்

தன்னம்பிக்கை vs கர்வம்

தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இருக்கிறது.

“என்னால் முடியும்” என்று நினைப்பது தன்னம்பிக்கை. “என்னால் மட்டுமே முடியும்” என்று நினைப்பது கர்வம். தன்னம்பிக்கை எல்லா சாதனைகளுக்கும் மூல காரணமாக உள்ளது. கர்வம் எல்லா அழிவுக்கும் காரணமான விஷமாக உள்ளது. இதை விளக்க உதாரணங்களுக்குப் பஞ்சமில்லை என்றாலும் இந்த இரண்டுமே ஒரே நபரிடத்தில் எப்படி விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைக் காண வேண்டுமென்றால் ஹிட்லரின் வாழ்க்கையைப் பார்த்தால் போதும். Continue reading “தன்னம்பிக்கை vs கர்வம்”