உங்களுக்கு பொருத்தமான பணி?

jobநல்ல சம்பளத்தில், நல்ல வேலை வேண்டும் என்று ஆசைப்படும் அதேநேரத்தில், நாம் எந்த வேலைக்குப் பொருத்தமானவர்கள் என்பதையும் ஆராய வேண்டும். நம்முடைய திறமைகள், தகுதிகள் மற்றும் பின்னணிகள் குறித்து சுய பகுப்பாய்வை மேற்கொண்டாலொழிய, பொருத்தமான பணியை நாம் பெறுவதென்பது இயலாத காரியமே. எனவே சுய பகுப்பாய்வு தொடர்பான சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

தொழில்ரீதியிலான பகுப்பாய்வு வேலை தேடுதலில் உள்ள மிகப் பிரதானமான அம்சம் என்னவெனில், உங்களுக்குள் இருக்கும் ஆர்வத்தையும், தொழில்முறை குறிக்கோள்களையும் பகுப்பாய்வு செய்வதாகும். ஏனெனில், நம்மில் பெரும்பாலானோர், உள்ளார்ந்த திறன்கள் மற்றும் விருப்பங்களைக் கண்டு கொள்வதில்லை. இதனால்தான், பல்வேறான சிக்கல்களை சந்திக்கிறோம்.

நேர்முகத்தேர்வின்போது, சம்பிரதாயமாக கேட்கப்படும் “உங்களைப் பற்றி சொல்லுங்களேன்” என்ற கேள்விக்கு சாதாரணமாகவும், தெளிவாகவும் பதில்சொல்ல பலரும் திணறுவர். எனவேதான், உங்களின் உள்ளக்கிடக்கையைப் பகுப்பாய்வு செய்வது முக்கியமான செயல்பாடு என்கிறோம். கீழ்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லிப் பாருங்கள்,

Read the rest of this entry »

இந்தியாவில் எளிதாக வேலை கிடைக்கும் 10 நகரங்கள்!

jobsஇன்று நாடு இருக்கும் சூழ்நிலையில் எளிதில் படித்து பட்டப் படிப்பு கூட வாங்கி விடலாம் ஆனால் வேலை கிடைப்பது தான் மிகவும் கடினம். அந்த அளவுக்கு நம் நாட்டில் படித்து முடித்துவிட்ட பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது ஆனால் அனைவருக்கும் வேலை தான் கிடைக்கவில்லை.

உதாரணத்துக்கு நம் தமிழ் நாட்டிலேயே எடுத்துக் கொள்ளலாமே 1000 பணியிடங்களுக்கு 7 இலட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள் நம் தமிழ்நாட்டில் மட்டும் நடக்கும் நிகழ்வு.

சரி அதவிடுங்க நம் இந்தியாவில் எளிதில் வேலை கிடைக்கும் நகரங்கள் மொத்தம் 10 சிறந்த நகரங்கள் இருக்கின்றன. இங்கு நிச்சயம் வேலைகள் இருக்கும் அந்த அளவுக்கு எப்பவுமே பிஸியான நகரங்கள் இவை இதோ அந்த நகரங்கள்…

Read the rest of this entry »

%d bloggers like this: