சவூதியில் வேலை மாறுகிறீர்களா? நான்கு நிபந்தனைகள்!

4 conditions for job transfer in KSA

அரபு நியூஸ் (Arabnews.com) இனையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் படி,

சவூதி அரேபியாவில் மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் விதமாக, நிதாக்கத் என்னும் திட்டத்தை சவூதி அரசு முன்னெடுத்துள்ளது.

இதன்படி, குறிப்பிட்ட அளவு சவூதிக்காரர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே கிரீன் எனப்படும் பச்சைத் தரம் கிடைக்கும்.

அப்படி ‘பச்சை‘ சமிக்ஞை கிடைக்கப்பெற்ற நிறுவனங்கள் மட்டுமே விசா பெறுவது போன்ற அரசு உதவிகளைப் பெற முடியும். Continue reading

Advertisements

அபுதாபியின் புதிய அபராத கொள்கைகள்

Anu Dhabi New Fines

“Keep Abu Dhabi City Clean” என்ற கொள்கையையொட்டி பல விதிமுறைகளை அபுதாபி அரசாங்கம் கடுமையாக்கியுள்ளாது,

சிகரெட் துன்டை கீழே வீசினால்(குப்பை தொட்டி அல்லாத) 200 திரஹம்ஸ் அபராதம்

தெருவில் எச்சில் துப்பினால் 100 திரஹம்ஸ் அபராதம்

தெருவில் பெப்ஸி, கோக் போன்ற பாட்டில்களை வீசினால் 500 திரஹம்ஸ் அபராதம்

தெருவில் பபில் கம், ஸிவிங்கம் போன்றவற்றை வீசினால் 500 திரஹம்ஸ் அபராதம்

மற்றும் புதிய பல அபராத விதிமுறைகளை அபுதாபி அரசாங்கம் அறிவித்திள்ளது Continue reading

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை ஒப்பந்தம் காலாவதியான ஒருவருக்கு புதிய வேலை அனுமதி கிடைக்க 6 மாத விலக்கு (Ban) நிபந்தனை இனி இல்லை

ஐக்கிய அரபு அமீரகத்தில் 2011 புதிய விதிகளின் படி வேலை ஒப்பந்தம் காலாவதியான ஒருவருக்கு புதிய வேலை அனுமதி கிடைக்க ஆறுமாத விலக்கு (Ban) நிபந்தனை இனி இல்லை .இச்சட்டம் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலில் உள்ளது.

மேலும் புதிய சட்டத்தில் தொழில் மாற்றம்(Transfer), ஸ்பான்சர்ஷிஃப் மாற்றம் ஆகியவற்றிலும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இம்முடிவு யு.ஏ.இ கேபினட் கூட்ட தீர்மானத்தின்படி எடுக்கப்பட்டுள்ளது.

வேலை ஒப்பந்தம் முடிந்தபிறகு வேறொரு வேலையில் சேருவதற்கு முன்னாள் உரிமையாளரிடம் (Employer) அனுமதி பெறவேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்பட்டுள்ளது. ஆனால், முன்னாள் ஸ்பான்ஷருடனான வேலை ஒப்பந்தம் முடிந்தபிறகு புதிய விசா கோரி மனு சமர்ப்பிக்கவேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. Continue reading

பதிமூன்று வருட (பாலை) வன வாசத்துக்குப் பின்….

அரபுநாட்டு வேலை என்னும் மாயைக்குப் பதிமூன்று வருடங்களைப் பலி கொடுத்த அப்பாவியின் (உண்மைக்) கதை.

தமிழர் தான் அவர். சுப்ரமணியம் என்று பெயர். 38 வயதில் வாயைக் கட்டி வயித்தைக் கட்டி விசாவுக்குப் பணமும் கட்டினார். அது ஃப்ரீ விசா எனப்படும் திறந்த வேலைவாய்ப்பை வழங்கும் விசா. அரபுநாட்டில் இறங்கியதும், அரசாங்க சம்பிரதாயங்களை மட்டும் விசா கொடுத்தவர் முடித்துக் கொடுப்பார். எங்கும், எவ்வித வேலையும் தேடிக்கொள்ளலாம் என்பது இதன் வசதி. ஆனால், மாதந்தோறும் ஒரு தொகை கப்பம் கட்டியாக வேண்டும் – விசா கொடுத்த அரபியருக்கு. Continue reading