அம்பேத்கர்: சமூகநீதிக்கான போராளி

DrAmbedkarபள்ளிக்கூடத்தில் ஒரு கோணி போட்டுத் தனியாக உட்கார வைக்கப்பட்ட குழந்தைதான் டாக்டர் அம்பேத்கர். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்குச் சிற்பியாக அவர் மாறியது இந்திய ஜனநாயகத்தின் சிறப்பு. இந்திய ஒருமைப்பாட்டை அது வலுப்படுத்தியிருக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உயிரே சமூகநீதிதான் என்பது அம்பேத்கரின் மகத்தான பங்களிப்புகளுள் ஒன்று. சமூகநீதியைப் பற்றி இன்று நாம் புரிந்துவைத்திருப்பதற்கு டாக்டர் அம்பேத்கருக்குக் கடமைப்பட்டுள்ளோம்.

1840-ல் இந்தியாவில் இருந்த 15 விதமான அடிமை முறைமைகளை வில்லியம் எனும் எழுத்தாளர் பட்டியல் போட்டுள்ளார். 1843-ல் இந்தியாவில் அடிமை முறையைச் சட்ட அளவில் கிழக்கிந்திய கம்பெனி ஒழித்தது. 1931-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஒன்பது வரையறைகளை வைத்து ‘தீண்டப்படாத சாதி’களைப் பிரித்தது. பார்க்கக் கூடாதவை, அணுகக் கூடாதவை, தீண்டக் கூடாதவை எனப் பல சாதிகள் ஏற்ற இறக்கமான அடிமைத்தனத்தில் வைக்கப்பட்டிருந்தன.

1950-ல் இந்திய அரசியலமைப்பு, சட்ட அளவில் தீண்டாமையை ஒழித்தது. தீண்டாமை என்பது சாதிய சமூகத்தின் விளைபொருள். சாதிய சமூக முறையை ஒழிப்பது அம்பேத்கரின் லட்சியமாக இருந்தாலும் தீண்டாமை ஒழிப்பை மட்டும்தான் அரசியலமைப்பில் அவரால் சேர்க்க முடிந்தது.

பெண் உரிமை உள்ளிட்ட அனைத்து ஜனநாயக உரிமைகளையும் நமக்கு வழங்கவே அவர் உழைத்தார். தலித் மக்களுக்கான உரிமைகள் மீட்டெடுக்கப்படுவதில் அவர் தீவிரமாக இருந்தார். அரசியலமைப்பின் மிக முக்கிய அம்சமான சமூகநீதிதான் குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்றெல்லாம் பல வடிவங்களில் வெளிப்பட்டது. Continue reading “அம்பேத்கர்: சமூகநீதிக்கான போராளி”

ஒரு வெற்றியாளரின் மூன்று அனுபவ பாடங்கள் – ஸ்டீவ் ஜாப்ஸ்

Steve Jobs

அறிவுரை வழங்க அறிவு தேவையில்லை. யாரும் யாருக்கும் அறிவுரை வழங்கலாம். காது கொடுத்து கேட்க ஆட்களிருந்தால் காசின்றி அறிவுரை வழங்கவும் ஏராளமான ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்.

அறிவுரை வழங்க தங்களுக்கு முழுத் தகுதியும் இருப்பதாகத் தான் பெரும்பாலானோரும் நம்புகின்றனர். அவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கவே விவரமானவர்கள் ஆசைப்படுகிறார்கள்.

ஆனால் மிகப்பெரிய சாதனைகள் செய்து காட்டியவர், மிக வெற்றிகரமாக வாழ்ந்து காட்டியவர், மற்றவர்கள் எட்டாத உயரங்களுக்கு சென்று காட்டியவர் அறிவுரை வழங்குவாரேயானால்,

அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஓராயிரம் கோடி பெறும்; வெற்றிக்கு வழி காட்டும்; எத்தனையோ அனுபவங்களுக்கு ஈடாகும். அது போன்ற அறிவுரைகளைக் கேட்டு கடைப்பிடிக்க எந்த ஒரு புத்திசாலியும் தவறி விடக் கூடாது.

ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற மனிதர் அப்படிப்பட்ட வெற்றிகரமான மனிதர். இன்று நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர்களின் உருவாக்கத்திற்கு அவர் அளித்த பங்கு மிகப்பெரியது. ஆப்பிள் மற்றும் நெக்ஸ்ட் கம்ப்யூட்டர்களை உருவாக்கியவர் அவர்.

இன்று நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர்களின் செயல்முறைகளில் அவர் முத்திரைகள் எத்தனையோ உண்டு. அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்தவர். வெற்றிகரமாக பல நிறுவனங்களை நடத்தியவர்.

உச்சாணிக் கொம்பிலிருந்து ஒருசில முறை அடிமட்டத்திற்கு வந்த போதும் மீண்டும் தன் திறமையாலும், உழைப்பாலும் முன்னேறி முந்தைய உயரத்தை விட அதிக உயரத்தை எட்டியவர். அவர் 2005 ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய போது தன் வாழ்வில் கற்ற பாடங்களை மூன்று முக்கிய நிகழ்வுகள் மூலமாகச் சொன்னார்.

அவை மூன்றும் அவர் வாழ்க்கையை மாற்றி அமைத்த நிகழ்வுகள். கொஞ்சம் ஏமாந்திருந்தாலும் அடிமட்டத்திற்கு ஒருவரை நிரந்தரமாக அனுப்பி வைத்து புதைக்க வல்லவை அவை. ஆனால் வாழ்க்கையில் தெளிவாகவும், தைரியமாகவும் இருக்க முடிந்ததால் அவற்றை அவர் உபயோகப்படுத்தி சரித்திரம் படைத்தார். அவர் விவரித்த அந்த வாழ்க்கை நிகழ்வுகளையும் அதன் மூலமாகக் கிடைத்த பாடங்களைப் பார்க்கலாம் ? Continue reading “ஒரு வெற்றியாளரின் மூன்று அனுபவ பாடங்கள் – ஸ்டீவ் ஜாப்ஸ்”

“மனித வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே தனி மனிதர் “

The 100

மைக்கேல் ஹெச். ஹார்ட், வானியற்பியல் நிபுனர், அவருடைய முதல் புத்தகத்தில்(The 100: A Ranking of the Most Influential Persons in History) இப் பூமியில் வாழ்ந்த கோடானுகோடி மனிதர்களில் வரலாற்றின் போக்கில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும் அளவுக்கு மிகப்பெரும் செல்வாக்கு வல்லமை பெற்றிருந்தவர்கள் யார் யார் என்பதை மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்கள் பதிவு செய்திருக்கிறார். அதில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முதலாம் இடத்தை கொடுத்து அதற்கான காரணத்தையும் கொடுத்திருக்கிறார். இனி அவரது வரிகளை படிப்போம். Continue reading ““மனித வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே தனி மனிதர் “”

“முழு மனதோடு ஒரு காரியத்தில் ஈடுபடுங்கள்” – கல்பனா சௌலா

கல்பனா சாவ்லா

2003 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி கொலம்பியா வான்கலம் விண்ணில் சிதைந்தது. இந்திய சமூகமும் ஒட்டுமொத்த விண்வெளி சமூகமும் சோகத்தில் மூழ்கியது. 41 வயதில் வானத்தில் ஒரு நட்சத்திரமாகிப்போனார் இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கணையான கல்பனா சௌலா.

1961 ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதி இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள கர்னால் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார் கல்பனா சாவ்லா. நான்கு பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி. தந்தை ஓர் வர்த்தகர், தாய் இல்லத்தரசி. மற்ற பெண் குழந்தைகளைப்போல் பொம்மைகளை வைத்து விளையாடுவதற்கு பதில் கல்பனா விமானங்களை வரைந்தும் ஓவியம் தீட்டிக்கொண்டும் இருப்பார். சிறு வயதிலேயிருந்தே விண்வெளி பொறியாளராக வரவேண்டும் என்பதுதான் கல்பனாவின் விருப்பமாக இருந்தது. Continue reading ““முழு மனதோடு ஒரு காரியத்தில் ஈடுபடுங்கள்” – கல்பனா சௌலா”

உலகின் சாதனைப் பெண் “அன்னை தெரசா”

கருனையின் மறுபெயர் “அன்னை தெரஸா”

நீலநிறக் கரைபோட்ட வெள்ளைக் கைத்தறிச் சேலை. சுருக்கங்கள் நிறைந்த முகம். கருணை பொங்கும் விழிகள்.

இன, மத, பிரதேச வேறுபாடற்ற சேவை மனப்பாங்கு. இவற்றின் மொத்த உருவமாகத் திகழ்ந்த அன்னை தெரசா ‘உலகின் சாதனைப் பெண்‘களில் இன்று இடம்பெறுகின்றார். Continue reading “உலகின் சாதனைப் பெண் “அன்னை தெரசா””