Sticky post

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!

1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.

2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.

3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.

4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.

5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். Continue reading “கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!”

GETTY IMAGES Sticky post

கொரோனா வைரஸ் | தடுப்பு மருந்தை கண்டறிந்துவிட்டதா இஸ்ரேல்?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறிவதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் இஸ்ரேல் கொரோனாவிற்கான ஆன்டிபாடி மருந்தை கண்டறிந்துவிட்டதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டில் தலைமை உயிரியல் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸுக்கான ஆன்டிபாடி மருந்தை வெற்றிகரமாக கண்டறிந்து விட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நஃப்தாலி பேனெட் கூறியுள்ளார்.

இந்த ஆன்டிபாடி மருந்து உடலில் இருக்கும் வைரஸைத் தாக்கி அதனை செயல்படவிடாமல் தடுக்கும் என கூறப்படுகிறது.

இந்த ஆன்டிபாடி மருந்து தற்போது காப்புரிமை பெறும் நடைமுறையில் உள்ளது. காப்புரிமை பெற்றவுடன் தயாரிப்பு பணியில் ஈடுபடவுள்ளோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார். Continue reading “கொரோனா வைரஸ் | தடுப்பு மருந்தை கண்டறிந்துவிட்டதா இஸ்ரேல்?”

Sticky post

10000 ஆண்டுகளுக்கு முன்பே அமேசான் காடுகளில் விவசாயம் பார்த்த மக்கள்

மிகவும் அடர்த்தியான அழகிய வனப்பகுதியாக நாம் அறியும் அமேசான் காடுகளில் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே பயிர் இடப்பட்டு விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

10,000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளடங்கிய பகுதியாக கருதப்பட்ட தற்போதைய வடக்கு போலியாவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஆராய்ச்சி குழு ஒன்று கண்டறிந்துள்ளது. இந்த பகுதியில் வசித்த மக்கள் மக்காச்சோளம், பூசனி, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட கிழங்கு வகைகளை பயிர் செய்துள்ளனர் என்றும் இந்த ஆராய்ச்சி குழுவினர் குறிப்பிடுகின்றனர்.

மழைக்காலத்தில் வெள்ளக்காடாகிவிடும் இந்த நிலப்பரப்பில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் எப்படி விவசாயம் செய்தார்கள் என்ற விதத்தையும் இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆங்காங்கே தீவுகளைப் போல மேடுகளை உருவாக்கி அந்த மேடுகளின் மீது அவர்கள் விவசாயம் செய்துவந்தனர் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பனி யுகத்திற்கு பிறகு, உலகின் வெப்பநிலை தொடர்ச்சியாக உயர்ந்தது. இதனால் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இவற்றில் மிக முக்கியமானது என்னவென்றால், ஆரம்பகால நாகரிகங்கள் வேட்டையாடி, வனப் பொருள் திரட்டி வாழும் வாழ்க்கையில் இருந்து முன்னேறி, உணவைப் பயிரிடத் தொடங்கினர்.

உலகில் இப்படி ஆதியில் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட இடங்கள் என நான்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன. Continue reading “10000 ஆண்டுகளுக்கு முன்பே அமேசான் காடுகளில் விவசாயம் பார்த்த மக்கள்”

Sticky post

கொரோனா வைரஸ் – ‘சுனாமி போல் தாக்கும்’ – மலேசியா

மலேசியாவில் கொரோனா வைரஸின் மூன்றாம் கட்ட அலை எந்த நேரத்திலும் எழும் எனவும், இம்முறை அது சுனாமி போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மூன்றாம் கட்ட சுனாமி போன்ற அலையை எதிர்கொள்ளும் நடவடிக்கையாகவே மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதாக அந்த அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் இஷான் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

“அடுத்து என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே யூகித்துதான் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இப்போது சுனாமி என்று குறிப்பிடக்கூடிய கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் கட்ட அலையானது தீவிரமாக இருக்கும் என்று 3 வாரங்களுக்கு முன்பே யூகித்தோம். மார்ச் மாத துவக்கம் வரை விடுமுறை காலத்தில் ஏராளமான மலேசியர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று திரும்பியுள்ளனர். எனவேதான் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை அடையாளம் காட்டும் என எதிர்பார்க்கிறோம்,” என்று இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார். Continue reading “கொரோனா வைரஸ் – ‘சுனாமி போல் தாக்கும்’ – மலேசியா”

கொரோனா வைரஸ் | மூட நம்பிக்கைகள் | கட்டுக்கதைகள்

வெள்ளி உலோகத்தை அருந்தினால் கொரோனா குணமாகுமா?
உடலை சூடாக வைத்துக் கொண்டால் கொரோனா குணமாகுமா?
பசு கோமியம் கொரோனாவுக்கு தீர்வளிக்குமா?
இந்த கேள்விகளுக்கான பதில்கள்..

Continue reading “கொரோனா வைரஸ் | மூட நம்பிக்கைகள் | கட்டுக்கதைகள்”