தானியங்கி கார்கள் செப்டம்பர் மாதம் முதல் கலிபோர்னியா மாகாணத்தில் ஓட ஆரம்பிக்கும்

dtvnstega5xyoysaxvfuமேலை நாட்டு மக்களிடம் “உதோப்பியா” எனும் பொது தேசம் பற்றி பேசுவார்கள். அதாவது அனைத்து வசதிகளும் சிறப்பாகவும், குற்றங்கள், ஊழல், சுகாதார பிரச்னை என எந்தக் குறைகளும் இல்லாத கனவு தேசம்.

ஓட்டுநர் இல்லாமல் தானே ஓடும் கார்கள் Google நிறுவனத்தால் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்தன. தங்களின் வரைபட சேவைக்காக நூற்றுக்கணக்கான தானியங்கி வண்டிகளை எட்டுபக்கமும் படமெடுக்கும் வகையில் தயார் செய்து ஓட்டி வந்தது கூகுள் நிறுவனம்.

இனி இந்தவகை கார்களை பொதுமக்களும் வாங்கி ஒட்டிக் கொள்ளலாம் எனும் அறிவிப்பை கலிபோர்னியா மாகாண உந்து வாகனத் துறை வெளியிட்டுள்ளது. ஆரம்பத்தில்., இந்த வாகனத்தை பயன்படுத்தும் போது, ஒரு சிறப்பு ஓட்டுநர் உரிமம் உள்ள நபரும் வாகனத்தில் இருக்க வேண்டும் எனும் விதியையும் சொல்லியுள்ளார்கள். அதாவது, ஒரு வேலை இந்த வாகனம் ஏதேனும் குளறுபடி செய்தாலும் அதை தன் வசப்படுத்தி வாகனத்தை ஓட்டும் வல்லமை பெறுவது தான் அந்த சிறப்பு ஓட்டுநர் உரிமத்தின் சிறப்பு. காலம் செல்லச் செல்ல, இந்த வகை வாகனங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டவுடன் இந்த விதி தளர்த்தப் படலாம். ​

இதே தொழில்நுட்பம் 20-30 ஆண்டுகளில் அமேரிக்கா முழுவதும் லாரி மற்றும் இதர வாகனங்கள் ஓட்டும் அனைத்து ஓட்டுநர்களையும் இல்லாமல் செய்துவிடும். அதற்கு அடுத்த 20 ஆண்டுகளில் இது உலகம் முழுவதும் பரவும். Continue reading

உலகின் மிகச் சிறந்த 20 இணையத்தளங்கள் (World’s Top 20 Websites):

உலகின் மிகச் சிறந்த 20 இணையத்தளங்கள்
உலகின் மிகச் சிறந்த 20 இணையத்தளங்கள்

உலகிலேயே அதிக எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது என்று கேட்டால் கண்களை மூடிக் கொண்டு கூகுள் (Google) என்று சொல்லி விடுவோம் , அதுதான் இல்லை. அண்மையில் எடுக்கப்பட்ட அறிக்கையின் படி முதல் 20 இடங்களை பெற்ற இணையதளங்களை இங்கே பார்க்கலாம்.

இந்த வகையில் அதிக யூஸர் அக்கவுண்ட்களை கொண்டுள்ள முதல் இருபது இணைய தளங்களை, அதன் சிறப்புகளையும் காணலாம். சரி இப்பொழுது 20 வது இடத்தில் இருந்து தொடங்குவோம்.

20 அமேசான்:

எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், உடைகள், விளையாட்டு சாதனங்கள், ஏன் உணவு கூட இங்கு விற்பனை செய்யப் படுகிறது. இதன் தனி நபர் வாடிக்கையாளர் எண்ணிக்கை 16 கோடியே 30 லட்சம்.

www.amazon.com

19 சினா:

மீடியா மற்றும் பயனாளர்கள் உருவாக்கும் தகவல்களைத் தாங்கித் தரும் சீனநாட்டு இணைய தளம்.சினா டாட் காம் தள சந்தாதாரர் எண்ணிக்கை 16 கோடியே 90 லட்சம்.

http://english.sina.com/index.html

18 வேர்டு பிரஸ்:

17 கோடியே 9 லட்சம் பேர் பயன்படுத்தும் வலைத்தளம்

www.wordpress.com Continue reading

Internet (இணையத்தை) பயன்படுத்தும் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் – Google Advices

அறிவது நல்லது – good to know

Internet (இண்டர்நெட்) பயன்படுத்தும் அனைவரும் இணையத்தில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படை பாதுகாப்பு விஷயங்கள் என்ற தலைப்பில் Google நிறுவனம் பிரிட்டனின் குடியுரிமை ஆலோசனை அமைப்புடன் சேர்ந்து Good to Know (அறிவது நல்லது) எனும் தலைப்பில் ஒரு பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தகவல்கள் இப்போது தமிழ் மொழியிலும் கிடைக்கும் படி செய்துள்ளது கூகிள்.

தொழில்நுட்பத் துறையில் வல்லுனர்களிடம் பேட்டி கண்டு அதன் அடிப்படையில் யூடியூப்பில் வீடியோ தகவல்களை வெளியிட்டுள்ளது.

அவற்றில் சில. Continue reading

Aakash Tablet ( ஆகாஷ் கைக் கணினி)

ஆகாஷ் (Aakash) Tablet

இந்திய அரசாங்கம் உலகத்திலேயே மிககுறைந்த விலையில் Aakash Tablet ( ஆகாஷ் கைக் கணினி) அறிவித்து வழங்கி வருகிறது. அனைவரும் இதைபற்றி கேள்விபட்டிருப்போம்,

  • Tablet ன என்ன?
  • இந்திய அரசாங்கம்அறிவித்துள்ள Aakash Tablet ஐ எப்படி வாங்கலாம்?
  • அதனுடைய பயன்பாடுகள் என்ன?

சரி, இதைபற்றி முழுசா தெரிந்துகொள்ளலாம்.
Continue reading

பில்கேட்ஸ் & ஸ்டீவ் ஜாப்ஸ்

கணினி உலகில் மிகப்பெரிய இரு ஜாம்பவான்கள் பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ். உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் இயங்கு தளமான விண்டோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பில்கேட்ஸ். ஒரு கணினியின் செயல் பாட்டினை முழுவதும் ஒரு கையடக்க மொபைல் போனில் புகுத்தி கணினி துறையில் மிகப்பெரிய புரட்சிகளை ஏற்ப்படுத்திய ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் CEO ஸ்டீவ் ஜாப்ஸ் (இவர் சமீபத்தில் புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்தார்). இவர்கள் இருவருமே கணினி துறை இவ்வளவு வேகமாக வளர்ச்சி அடைய முக்கிய காரணமானவர்கள். Continue reading