அன்பையும் சமாதானத்தையும் கற்க கல்வி அனைவருக்கும் கடமை : UAE-ன் இளவரசர் ஷேக் முகமது

malala-meets-sheik-mohamed-uaeபாகிஸ்தானின் பெண் கல்வி முன்னேற்றத்திர்க்காக பேசியதற்காக தாலிபானால் தலையில் சுடப்பட்ட மலளா யூசுப்சய் தனது பெற்றோரொடுடன் உம்ரா செல்லும் வழியில் மாண்பிமிகு ஐக்கிய அரபு எமிரேட்சின் இளவரசர் மற்றும் துணை ராணுவ தலைமை அதிகாரி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களை சந்தித்து பேசினார் 
தான் உயிருக்கு போராடும் போது  மருத்துவ சிகிச்சைக்காக தனி மருத்துவ குழுவை அனுப்பிவத்தமைக்கும், உதவி செய்தமைக்கும், தனது கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகமைக்கும் நன்றி கூறினார்.
ஷேக் முகமது மலளாவின் உறுதியையும்  சிரமங்களை கடந்து அவரது உன்னதமான செய்தி முன்னோக்கி செல்ல தொடர்ந்து முயற்சிப்பதையும் பாராட்டினார். மேலும் அன்பையும் சமாதானத்தையும் பெறவும் கற்கவும்  கல்வி அனைவருக்கும் கடமை என்றும், மலளாவின் நிலைபாடு இந்த உலகத்துன் கல்விக்கான குறிப்பிடத்தக்க மயமாக இருக்கும் என்று வாழ்த்தினார். மன்னிப்பு மற்றும் சகிப்புத்தன்மை மதிப்புகளை  ஊக்குவிக்க மலளா தொடர்ந்து பணியாற்ற கேட்டு கொண்டார். Continue reading “அன்பையும் சமாதானத்தையும் கற்க கல்வி அனைவருக்கும் கடமை : UAE-ன் இளவரசர் ஷேக் முகமது”

அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை!

"முயன்றால் முடியாதது ஏதும் இல்லை"
” முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள். பார்வையை விரிவுபடுத்துங்கள் “

முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.

மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர். ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.

ஓரு மகன் சொன்னான். “நான் இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்கு விற்றேன்”
வியாபாரி கேட்டான். “எப்படி?”

“புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன். இரண்டு புத்த பிக்குகளுக்கு அது சரியென்றுபட்டது. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள் வாங்கினார்கள்:”

இன்னொரு மகன் சொன்னான். “நான் பத்து சீப்புகள் விற்பனை செய்தேன்”

வியாபாரி ஆச்சரியத்துடன் கேட்டான். “எப்படி?”

“வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள அந்தப் புத்த மடாலயத்திற்குப் போபவர்கள் தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது. அப்படிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த மடாலயத்தில் சொன்னேன். ஒரு பெரிய கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால் அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்து கொண்டு புத்தரை தரிசிக்க செல்வது ந்ன்றாக இருக்கும் என்ற ஆலோசனையும் சொன்னேன். ஒத்துக் கொண்டு பத்து சீப்புகள் வாங்கினார்கள்”

வியாபாரி அந்த மகனைப் பாராட்டினான். Continue reading “அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை!”

முதல் பட்டதாரி முஸ்லிம் மாணவ, மாணவிளுக்கு பொறியியல் படிப்பு இலவசம்!

Seal_of_Tamil_Naduபெரும்பாலான மாணவ, மாணவியர் +2 முடித்தவுடன் பி.இ. எனப்படும் என்ஜினியரிங் படிப்பு படிக்கவே விரும்புகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியும்.

ஆனால் சென்ற ஆண்டு ஒரு லட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தனர். மீதமுள்ள 30 ஆயிரம் சீட்டுகள் கடைசி வரை காலியாகவே கிடந்தன.

இந்நிலையில் இந்த ஆண்டு மேலும் 94 பொறியியல் கல்லூரிகள் புதிதாக துவங்கப் பட உள்ளன. இதற்கு அனுமதி கோரி அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன, இவற்றில் பெரும்பாலான கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்து விடும் என்று தெரிகிறது.

இதன் மூலம் கூடுதலாக 12 ஆயிரம் மாணவ, மாணவியர் பொறியியல் படிப்பு படிக்கலாம். சுருங்கச் சொல்வதெனில் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் சீட் ரெடி. இது தெரியாமல் நிறைய முஸ்லிம் மாணவ, மாணவியர் நிர்வாகக் கோட்டவுக்கு பல லட்ச ரூபாய் கொடுத்து விட்டு கை பிசைந்து நிற்பதை பார்க்க முடிகிறது. Continue reading “முதல் பட்டதாரி முஸ்லிம் மாணவ, மாணவிளுக்கு பொறியியல் படிப்பு இலவசம்!”

ஏ. ஆர். ரகுமான்: வாசிக்கப்பட வேண்டிய வாழ்க்கை

ஏ. ஆர். ரகுமானுடன் எழுத்தாளர் நஸ்ரின் முன்னி.
ஏ. ஆர். ரகுமானுடன் எழுத்தாளர் நஸ்ரின் முன்னி.

வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சிகளுக்கு அளவுமில்லை. முடிவுமில்லை. சோர்வும் இருப்பதில்லை. வாழ்க்கை பற்றியதான விடயங்களை மனிதன் காணத்துடிக்கின்ற நிலையில், அல்லது வாழ்க்கை பற்றிய நிறைவான உண்மையை அறிந்து கொள்கின்ற நிலையில், அடுத்த கணம் அப்படியே மாறியும் விடுகிறது. ஆய்ந்தறியக்கூடியதல்ல வாழ்க்கை என்பதை அது பற்றிய ஆய்வுகள் சொல்லி நிற்கும்.

வாழ்க்கையில் என்னதான் நாம் கோலங்களை போட்டுக் கொண்டாலும், உணர்வுகளில் வீச்சில் அப்படியே அடங்கிவிடுவது இயல்பாக நடக்கும் எளிய விஞ்ஞானம் என்பேன். இது பற்றி உணர்வுகளிடம் நடிக்க முடியாது என்ற தலைப்பில் 2009 ஆம் ஆண்டில் பதிவிட்டிருந்தேன். அது ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்ட நாள். இசையில் நாயகன் ஏ. ஆர். ரகுமான், இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற நாள்.
ஒரு  பிள்ளை  எழுதும்  கிறுக்கல்  தான்  வாழ்க்கையா? அதில்  அர்த்தம்  தேடி  அலைவதே  வேட்கையா? அர்த்தம்  புரியும்  போது வாழ்வு மாறுதே! என்று ஏ. ஆர். ரகுமான் பாடுகின்ற பாடலும், வாழ்க்கை பற்றிய அழகைச் சொல்லிச் செல்லும். Continue reading “ஏ. ஆர். ரகுமான்: வாசிக்கப்பட வேண்டிய வாழ்க்கை”

எத்தனை அதிர்ஷ்டக்காரர் நீங்கள்? – சுயமுன்னேற்ற தகவல்

Positive-Thinkingல்லதே பார், நல்லதே நினை, எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்”என்று நம்பியது மட்டுமல்லாமல் அனைவருக்கும் அதை உபதேசிப்பவர் அந்த அறிஞர். இறைவன் தந்திருக்கும் நன்மைகளை சிந்திக்கவும், அவற்றிற்காக நன்றியுடன் இருக்கவும் தன் பிரசாரங்களில் கூறுவார் அவர். இருப்பவற்றிற்காக நன்றியுடன் இருந்தால் மட்டுமே மேலும் நன்மைகள் நம்மிடம் வந்து சேரும் என்று அவர் உறுதியாகச் சொல்வார்.
“ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நடுவே ஒரு கோடு வரையுங்கள். வலது புறம் பெரிதாய் + குறியிட்டு உங்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல விஷயங்களை எழுதுங்கள். இடது புறம் – குறியிட்டு உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளையும், தீமைகளையும் எழுதுங்கள். உண்மையாக ஆழமாக சிந்திப்பீர்களானால் கண்டிப்பாக வலது புறம் உள்ள பட்டியல் தான் நீண்டு இருக்கும். நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டக்காரர் என்பதை அப்போது தான் உங்களால் உணர முடியும்”என்று ஒரு சொற்பொழிவில் அவர் சொன்னதுடன் அனைவருக்கும் ஒரு வெள்ளைத் தாளைத் தந்து அப்போதே அப்படி எழுதிப் பார்க்கச் சொன்னார்.
அப்படி எழுதியவர்களில் பெரும்பாலானோருக்கு – குறியில் தான் எழுத நிறைய இருந்தது. ஒருசிலர் மட்டுமே + குறியில் நிறைய எழுதி இருந்தார்கள். அவர்களிடம் இப்போது இருக்கும் வாழ்க்கைக்கு இறைவனிடம் நன்றி சொல்லி விட்டுக் கிளம்பச் சொன்னார். Continue reading “எத்தனை அதிர்ஷ்டக்காரர் நீங்கள்? – சுயமுன்னேற்ற தகவல்”