நோன்பாளிகள் கவனத்திற்கு..

“ஆரோக்கிய வழியில் நோன்பு வைக்க”

நோன்பு 

  • “மறுமைக்கு மட்டும்ல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்”
  • “வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு”
  • “உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும்”

நுரையீரல் அதிகபடியாக இயங்கும் நேரம் காலை 3-5. ஸஹர் நேரத்தில் நாம் நோன்பு வைப்பதற்காக அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த பத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது.இதன் மூலம் மற்ற உறுபுக்கள் புத்துணர்வு பெறுகின்றன.

காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டு பழகி போன நமது வயிரு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன.

பகல் நேரத்தில் டீ, காபி, சிகரெட், வெற்றிலை, பொடி போன்ற அனைத்து வகையான கெட்டபழக்கங்களிலிருந்தும் நீங்கி விடுவதால், நோன்பு அவரது உடல்நிலை நலிவடைவதிலிருந்து காப்பாற்றி, அவரது உடல் சீராக இயங்க உதவுகின்றது.

இந்த நேரத்தில் தான் உடலில் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகன்றன. Continue reading “நோன்பாளிகள் கவனத்திற்கு..”

ப்ரண்டன் வியந்த இஸ்லாம்

பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்

ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்தில் தங்கிய நாட்களில் இஸ்லாமியர்களின் தொழுகை முறையால் மிகவும் கவரப்பட்டார். கிறிஸ்துவராக இருந்தாலும் மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீக ஞானத்தைத் தேடிய அவருக்கு எல்லா இடங்களில் இருந்தும் கிடைத்த மேன்மையான விஷயங்களை அறியவும், மதிக்கவும் முடிந்தது. Continue reading “ப்ரண்டன் வியந்த இஸ்லாம்”

நாளைக்கு நீ உயிரோடு இருப்பியா..?

சகோதரர் முஹம்மத் ஆஷிக் தன்னுடைய தளத்தில் அழுதிய அற்புதமான பதிவு நம்முடய பார்வைக்காக..

முன் கதைச்சுருக்கம் : நான் அப்போது தூத்துக்குடியில்உள்ள ஒரு தனியார் உரத்தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டு இருந்தேன். அங்கே, அடுத்த மாத சம்பளத்தை இம்மாதமே சேர்த்து எடுத்துக்கொள்ளும், pay advance என்ற ஒரு வசதி இருந்தது. ஒரே நாளில் கையில் இரண்டு மாத சம்பளம்..! பின்னர், அடுத்த மாத சம்பளத்தில் இருந்து மாதாமாதம் ஒரு சிறுதொகை நம் வசதிப்படி பிடித்துக்கொள்வார்கள். அது முடிந்து விட்டால் மீண்டும் pay advance எடுப்போம். இதற்கு வட்டி கிடையாது.
மற்ற வாகனக்கடன், வீட்டுக்கடன் இவற்றுக்கெல்லாம் குறைந்த அளவில் வட்டி உண்டு. வட்டி என்பதால் நான் இவற்றை வாங்கியதில்லை. வட்டி இல்லாத கடன் என்பதால் pay advance-ஐ நான் இரண்டு முறை எடுத்திருக்கிறேன். Continue reading “நாளைக்கு நீ உயிரோடு இருப்பியா..?”

ஒரு மாற்றுமத சகோதரன் இஸ்லாத்தை பற்றி … !! ??. ஏன்? ஏன்?

*******

மதமாற்றமல்ல! இது மனமாற்றம். இங்கே இருக்குது சமத்துவம்…!

20, 21ஆம் நூற்றாண்டில்தான் பலவிதமான விஞ்ஞான கண்டுபிடிப்புகள் உலகுக்குக் கிடைத்தன. இதன் வாயிலாக மின்சாரம் முதல் கம்ப்யூட்டர் வரை கண்டுபிடிக்கப்பட்டு இன்று நமக்கு அது தவிர்க்க இயலாததாகிவிட்டது.

தொலைதொடர்பு, போக்குவரத்து போன்றவற்றின் மூலம் இன்று உலகம் விரல் நுனியில் சுருங்கிவிட்டது. எந்தத் தொலைவிலுள்ள மனிதனும் உலகின் மற்றொரு மூலையிலுள்ள மனிதனை தொடர்புகொண்டு மருத்துவம், வியாபாரம், கல்வி உட்பட அனைத்துத் துறைகளிலும் பயனடைய முடிகிறது.

அதேநேரத்தில், இன்றுவரை நமது இந்தியத் திருநாட்டில் பல கிராமங்களிலும் ஒரு சாரார் மட்டும் ஏனோ மற்றவர்களிடமிருந்து தனித்து விடப் பட்டுள்ளனர். அவர்கள்தான் சில மதத்தினரால் தாழ்ந்த ஜாதியினர் என்று அழைக்கப்படும் தலித்துகள். Continue reading “ஒரு மாற்றுமத சகோதரன் இஸ்லாத்தை பற்றி … !! ??. ஏன்? ஏன்?”

போய் வா ரமலானே, போய் வா!

போய் வா ரமலானே… போய் வா!

மனமின்றி வழியின்றி விடை தருகிறோம்
மனமுருகி இறையோனை வேண்டுகிறோம்
மீண்டும் நீ எங்களிடத்தில் வந்திடவே….
மறு ஆண்டும் உனை நாங்கள் நோற்றிடவே!

நோற்காமல் இருந்திட்ட எங்களில் சிலர் மீது
கோபமோ ரமலானே.. செல்கிறாயே நீ….?
இறையருளால் அந்த சிலரும் திருந்திடுவர்
இன்ஷா அல்லாஹ் மீண்டும் நீ வந்துவிடு! Continue reading “போய் வா ரமலானே, போய் வா!”