உடையநாடு பெண்கள் அரபிக் கல்லூரி

2014-08-25 10.31.29தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம் , உடையநாடு என்ற ஊரில் பெண்கள் அரபிக் கல்லூரி. ‘மதரஸா அஸீஸிய்யா’ கட்டுமானப் பணி தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

மௌலானா சையது முகமது புகாரி பாஜிலே மன்பஈ(மலேசியா) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆலிம் அகமதுஷா, ஏர்வாடி இப்ராஹிம் ஜமாலி, காளிக்காவிளை இமாம் போன்றோர் சிறப்புரையாற்றினர்.

மேலும் சென்னை அஸ்ஸாதிக், சாகுல் ஹமீது, தலைமையாசிரியர் குலாம் கனி, உள்ளூர் மற்றும் சுற்றுப்புறத்திலுள்ள ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

மதரஸாவிற்கு இடம் வழங்கியதுடன் கட்டிடத்தையும் தானே கட்டித்தருவதாக மலேசிய தொழிலதிபர் டத்தோ அப்துல் அஜீஸ் அவர்கள் மற்றும் அவர்களின் மகன்களான ரஜாலுத்தீன், ஷிஹாபுத்தீன் வாக்களித்து கட்டிடப் பணியினைத் துவக்கி வைத்தனர்.

நன்றி  – முழு தமிழாக்கம் : adirainews வலை பதிவிலிருந்து.

Advertisements

உலகை அச்சுறுத்தும் தூக்கமின்மை – ஓர் அறிவியல் மற்றும் ஆன்மீகப் பார்வை

பகலில் ஓடியாடி திரியும் மனிதன் இரவிலே தூக்கத்தினால் சுருங்கி விடுகின்றான். இயங்கிக் கொண்டிருக்கும் உடம்பிட்கு ஓய்வு என்பது தேவையான ஒன்றாகும். பகலில் கடன் சுமையால் அல்லல் படுபவன் கூட, இரவில் தன்னை மறந்து நிம்மதியாக தூங்குகின்றான். சுருக்கமாகச் சொன்னால் தூக்கம் என்பது இறைவன் நமக்களித்த அருளாகும்.

அவனே இரவை உங்களுக்கு ஆடையாகவும், உறக்கத்தை ஓய்வாகவும், பகலை இயங்குவதற்காகவும் அமைத்தான். (அல்குர்ஆன் – 25: 47)

அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன், இரவை அமைதிக் களமாகவும், சூரியனையும், சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். (அல்குர்ஆன் – 6 :96)

ஓய்வை தரக்கூடிய தூக்கம் எவ்வாறு உருவாகின்றது?

மனித மூலையில் மெலடொனின் (Melatonin) என்ற ஹோர்மோன் ஒன்று சுரக்கின்றது. இந்த ஓமோன் உறக்கத்தைத் தூண்டும் ஒரு சுரப்பியாகும். இது வெளிச்சத்தில் குறைவாகவும், இருளில் கூடுதலாகவும் சுரக்கின்றது. அதனால் தான் இரவு என்றாலே உலகமே தூக்கத்தில் அயர்ந்து விடுவதுடன் பகலில் கூட மனிதன் இருட்டு மூலையைத் தேடி சென்று தூங்குவதற்கு எத்தனிக்கின்றான். Continue reading

மறுமலர்ச்சி தரும் ரமளான்

ரமதான் கரீம்
ரமதான் கரீம்

புண்ணியம் பூத்துக் குலுங்கும், நன்மையும் நற்செயலும் செழிக்கும், இறையச்சமும் தியாகமும் வளர்க்கும் புனித ரமளான் வந்துவிட்டது. ஈடு இணையற்ற நன்மைகளை வாரிச் சொரியும் ரமளான் கிடைத்து விட்டது. மனிதருள் ரமளான் தரும் வாழ்க்கை மாற்றங்கள் எண்ணிலடங்காதவை. அல்லாஹ் தந்த அருட்கொடைகளில் ரமளான் மாதம் மறக்க முடியாததாகும்.

ரமளானின் மேன்மையையும், சிறப்பையும் அறிந்தவர்களெல்லாம் காலம் முழுதும் ரமளானாக இருக்கக் கூடாதா? என ஏங்கித் தவித்தார்கள். ஸஹாபாக்களும், இறை நேசர்களும், ஞானிகளும் ரமளானில் நோன்பு வைப்பத்திலும் திருக்குர்ஆன் ஓதுவதிலும் இரவெல்லாம் நின்று வணங்குவதிலும் அவர்களுக்கிருந்த பேரானந்தமும், பேராசையும் சொல்லில் வடிக்க முடியாதவையாக இருந்தன.

ரமளான் மனிதனுடைய செயல்பாடுகளையும், அவனுடைய நித்திய வழக்க முறைகளையும் அல்லாஹ்வின் அன்பிற்காக மாற்றி அமைக்கிறது. தினமும் நேரம் தவறாமல் மிகச்சரியாக உண்டு பருகியவன், சாப்பிட்டு மகிழ்ந்தவன்; மற்ற காலங்களில் மறந்தும் சாப்பிடாத, பருகாத ஒரு நேரத்தில் உண்ணுகிறான் பருகுகிறான் என்றால் யாருக்காக – அல்லாஹ்வின் கட்டளைக்காகத் தானே …!

ஸஹர் நேரம் என்ற அந்த அதிகாலை வைகறைப் பொழுது என்பது மனிதரெல்லாம் ஆழ்ந்து உறங்குகின்ற அதி அற்புத நேரம். இரவெல்லாம் உறங்காதவர் கூட தன்னை மறந்து மறந்தே உறங்கிப் போகின்ற நேரம். உலகின் எந்த மூலையில் வாழுகின்ற மனிதனும் சாப்பிடாத – சாப்பிடப் பிடிக்காத – மனம் ஒப்பாத ஒரு நேரத்தில் அல்லாஹுவுக்காக – அல்லாஹ்வின் ரஸுலுக்காக – அவர்களின் கட்டளைக்காக தங்களை முழுமையாக அர்பணித்தவனாக சாப்பிடுகிறான்.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
“அல்லாஹுதஆலாவும், அவன் மலக்குகளும், ஸஹர் சாப்பிடுவோரின் மீது அருள் புரிகின்றனர்”.
அறிவிப்பாளர் ஹள்ரத் இப்னு உமர் (ரளி) அவர்கள்
நூல் : அத்தர்ஙீப்

Continue reading

ரமலான் அதன் வரலாறும், முக்கியத்துவமும் – சிறப்பு கட்டுரை

Significance of Ramadan

பெரும்வாரியான இஸ்லாமிய மக்கள் இந்த புனித ரமலான் மாதத்தை அனுசரித்து நோன்பை கடைபிடித்து வருகிறார்கள். இந்த கட்டுரையில் ரமாலானின் வரலாற்றையும் அதன் முக்கியதுவத்தையும் பார்போம்.

இஸ்லாமிய காலண்டரில் ரமலான் மாதம் புனித மாதமாக கடைபிடிக்கபட்டு வருகிறது. இந்த மாதத்தில்தான் அல்லாஹ் வானவ தூதர் ஜிப்ரியில் (அலை) மூலமாக இறைதூதர் முஹமது (ஸல்) அவர்களிடம் புனித குரான் வசனங்களை அறிவிக்க செய்தான்.

பருவம் (மனதலவிலும், உடலலவிலும்) அடைந்த ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக ரமலான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டும்.

நோன்பு காலை தொழுகையை (சுபுஹு) அடிப்படையாக வைத்து தொடங்கபடுகிறது. சூரியன் உதயமாகும் வேலையில் (மக்ரிபு) நோன்பு விடபடுகிறது. இதன் போலவே ரமலான் மாதம் முழுவதும் அனுசரிக்கபடுகிறது.

சில மக்களுக்கு ரமலானில் விலக்கு அளிக்கபடுகிறது. அதாவது மனதளவில் பாதிப்புக்கு உள்ளானவர்கள், பருவம் அடையாத குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்பட்டவர்கள், கர்ப்பினிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு அவர்களால் முடியாத பட்சத்தில் விலக்கு அளிக்கபடுகிறது.

அதற்கு பகரமாக, அவர்கள் ஒரு நோன்பிற்கு ஒரு ஏழைக்காவது உணவு தந்திருக்க வேண்டும் (அவர் தவரவிட்ட நோன்புக்காக). Continue reading

நோன்பாளிகள் கவனத்திற்கு..

“ஆரோக்கிய வழியில் நோன்பு வைக்க”

நோன்பு 

  • “மறுமைக்கு மட்டும்ல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்”
  • “வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு”
  • “உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும்”

நுரையீரல் அதிகபடியாக இயங்கும் நேரம் காலை 3-5. ஸஹர் நேரத்தில் நாம் நோன்பு வைப்பதற்காக அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த பத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது.இதன் மூலம் மற்ற உறுபுக்கள் புத்துணர்வு பெறுகின்றன.

காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டு பழகி போன நமது வயிரு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன.

பகல் நேரத்தில் டீ, காபி, சிகரெட், வெற்றிலை, பொடி போன்ற அனைத்து வகையான கெட்டபழக்கங்களிலிருந்தும் நீங்கி விடுவதால், நோன்பு அவரது உடல்நிலை நலிவடைவதிலிருந்து காப்பாற்றி, அவரது உடல் சீராக இயங்க உதவுகின்றது.

இந்த நேரத்தில் தான் உடலில் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகன்றன. Continue reading