உடையநாடு பெண்கள் அரபிக் கல்லூரி

2014-08-25 10.31.29தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம் , உடையநாடு என்ற ஊரில் பெண்கள் அரபிக் கல்லூரி. ‘மதரஸா அஸீஸிய்யா’ கட்டுமானப் பணி தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

மௌலானா சையது முகமது புகாரி பாஜிலே மன்பஈ(மலேசியா) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆலிம் அகமதுஷா, ஏர்வாடி இப்ராஹிம் ஜமாலி, காளிக்காவிளை இமாம் போன்றோர் சிறப்புரையாற்றினர்.

மேலும் சென்னை அஸ்ஸாதிக், சாகுல் ஹமீது, தலைமையாசிரியர் குலாம் கனி, உள்ளூர் மற்றும் சுற்றுப்புறத்திலுள்ள ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

மதரஸாவிற்கு இடம் வழங்கியதுடன் கட்டிடத்தையும் தானே கட்டித்தருவதாக மலேசிய தொழிலதிபர் டத்தோ அப்துல் அஜீஸ் அவர்கள் மற்றும் அவர்களின் மகன்களான ரஜாலுத்தீன், ஷிஹாபுத்தீன் வாக்களித்து கட்டிடப் பணியினைத் துவக்கி வைத்தனர்.

நன்றி  – முழு தமிழாக்கம் : adirainews வலை பதிவிலிருந்து.

ரிஸானாவின் இறுதி நிமிடங்கள்…

ரிஸானா

கீழே இருக்கும் மடல், ரிஸானாவின் வழக்கில் முதலிலிருந்து கவனம் எடுத்த, இறுதி நிமிடங்களில் மௌன சாட்சியாய் இருந்த மௌலவி மக்தூம் அவர்களின் மடல், ரிஸானாவின் பெற்றோருக்கு. கண்டிப்பாக முழுதும் படியுங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் :

றிஸானாவின் பெற்றோரின் கவனத்திற்கு,

நீங்கள் ஷரீஆ சட்டப் படி உங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்று கொண்டுள்ளீர்கள் என்ற செய்தியை வாசித்தவுடன் மிகவும் சந்தோசம் அடைந்தேன். இதன் மூலம் பொறுமையை கடைப் பிடித்து இறைவனின் நற்செய்திக்கு உரித்தானவர்களாகவும், பிறருக்கு முன்மாதிரியாகவும் ஆகிவிட்டீர்கள். இது போன்றவர்கள் பற்றியே இறைவன் பின்வருமாறு கூறுகிறான்: Read the rest of this entry »

படிப்பால் பண்பாடு பலம்பெற வேண்டும்

– அ. முஹம்மது கான் பாகவி

[ தமிழகத்தைப் பொருத்தவரையில் முஸ்லிம் மாணவிகள் மாநில அளவில் பள்ளிப் படிப்பில் முதலிடம் பெறும் அளவுக்குக் கல்வியில் முன்னேறியுள்ளனர் என்பது ஆறுதல் தரும் தகவலாகும்.

முஸ்லிம் மாணவ – மாணவிகள் முன்புபோல் இல்லாமல் உயர்கல்வி பெறுவதிலும் தகுதி வாய்ந்த வேலைவாய்ப்புகளை அடைவதிலும் முனைப்புக் காட்டிவருகின்றனர். முஸ்லிம் பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும் மனமாற்றமுமே இதற்குக் காரணம்.

தமிழக முஸ்லிம் கட்சிகள், நல அமைப்புகள், அறக்கட்டளைகள், அறிஞர்கள், சமூக மற்றும் கல்வி ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து அரும்பாடு பட்டுவருகிறார்கள்.

ஆனால், படிப்பு வளர்ந்த அளவுக்குப் பண்பாடுகள், ஒழுக்க மாண்புகள் வளரவில்லையே என்பதுதான் பெரிய கவலையாக இருக்கிறது. ஒரு பக்கம் சமுதாயத்தின் கல்வித் தகுதி உயர்ந்துகொண்டிருக்க, மறு பக்கம் சமூக ஒழுக்கமும் தனிமனித ஒழுக்கமும் சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன.

இந்த ஆபத்து எல்லாச் சமுதாயப் பெரியவர்களையும் பயமுறுத்திக்கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மையாகும். இது சர்வதேச அளவில் பல நாடுகளையும் மிரட்டுகின்ற பேராபத்தாகக் கணிக்கப்படுகிறது.] Read the rest of this entry »

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்

உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,

ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.

பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,

மீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.

தந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.

இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..! குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.

இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்? Read the rest of this entry »

%d bloggers like this: