தனி நபர் தகவலை விற்க மாட்டோம் – சுந்தர் பிச்சை / Google

Google நிறுவனம், அதன் பயனர் தகவலை (User’s Information), மூன்றாம் நபருக்கு(3rd Parties) எந்த காலத்திலும் விற்காது’ என, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், தகவல் திருட்டு அதிகரித்து வருவதால், மக்களுக்கு தங்களைப் பற்றிய தகவல்களின் பயன்பாடு, பகிர்தல் குறித்த கவலை அதிகரித்துள்ளது.

Google நிறுவனம், எந்தவிதத்திலும் சமரசம் செய்து கொள்ளாத இரு கொள்கைகளை கடைப்பிடிக்கிறது. அதன்படி, கூகுள் நிறுவனம், தனி நபர் தகவல்களை, எந்த காலத்திலும் மூன்றாம் நபருக்கு விற்காது.

இரண்டாவது, தங்களை பற்றிய தகவல்கள், எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமையை, கூகுள் நிறுவனம், தனி நபருக்கு வழங்குகிறது.தகவல் பாதுகாப்பு என்பது, கட்டண சேவைகளை பெறுவோருக்கு மட்டும் கிடைக்கக் கூடிய, ஆடம்பர பொருளாக இருக்கக் கூடாது. அது, பாரபட்சமின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே, கூகுளின் அடிப்படை கொள்கை.

கூகுள் தேடல் பொறி, ஹார்வர்டு பல்கலை பேராசிரியருக்கும், இந்தோனேஷியாவிலிருக்கும் கிராமப்புற மாணவனுக்கும், பேதமின்றி தகவல்களை வழங்குவதில் இருந்து, இதை புரிந்து கொள்ளலாம். Read the rest of this entry »

%d bloggers like this: