தெளிவான குறிக்கோளும் தன்னம்பிக்கை உங்களிடம் இருந்தால்…

தெளிவான குறிக்கோளும் தன்னம்பிக்கை உங்களிடம் இருந்தால் வெற்றி நிச்சயம் – Dr. Ashwin Vijay

Source : Strength India Movement

வாக்குச்சாவடி எங்கிருக்கிறது என்று தெரியவில்லையா? Call 1950 – Elections – 2019

வாக்களிக்க வேண்டும்: ஆனால்

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காலை 11 மணி நிலவரப்படி 30.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஏராளமான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருவதைக் காண முடிந்தது.

முக்கியப் பிரபலங்களும், திரை நட்சத்திரங்களும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். அண்ணாநகர் உள்ளிட்ட சில வாக்குச்சாவடிகளில் திருமணமான புதிய தம்பதிகள் வாக்களிக்க வந்ததையும் காண முடிந்தது.

இந்த நிலையில், வாக்களிக்க வேண்டும், ஆனால் எனது வாக்குச்சாவடி எங்கே இருக்கிறது, எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்ற குழப்பத்தோடு இருப்பவர்களுக்காக தேர்தல் ஆணையம் உதவி எண் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களது வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண்ணைத் தெரிவித்து உங்களது வாக்குச்சாவடியைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

நீங்கள் இருக்கும் இடத்தின் எஸ்டிடி கோடை இணைத்து 1950 எண்ணை அழைத்து உங்களது சந்தேகங்களுக்கு தெளிவு பெறுங்கள்.

Source : dinamani

%d bloggers like this: