ஜிம்மிற்கு செல்வதற்கு முன் இவற்றையெல்லாம் உறுதிசெய்துகொள்ளுங்கள்

சீரான உணவுமுறையும், உடற்பயிற்சியும் இல்லாமல் நீங்கள் எந்த முறையில் முயற்சித்தாலும் அது வீண்தான். சிலர் விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமென கடுமையான உடற்பயிற்சியும், மிகவும் கட்டுப்பாடான டயட்டும் மேற்கொள்வார்கள். இதனால் அவர்களின் ஆரோக்கியம் மேலும் பாதிப்படையைத்தான் செய்யும். எடை குறைப்பை தொடங்கும் முன் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றை இங்கு பார்க்கலாம்.

ஜிம்மில் குடியிருக்க வேண்டிய அவசியமில்லை

உடற்பயிற்சி செய்ய தொடங்கிய பின் பெரும்பாலும் அனைவரும் மணிக்கணக்கில் நேரத்தை ஜிம்மிலியே செலவிடுவார்கள். இது அவசியமற்றது. குறைந்தது 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை ஜிம்மில் உடற்பயிற்சிகள் செய்தால் போதும், நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை விரைவில் காணலாம். வேண்டுமென்றால் ஜிம் முடிந்த பின் மிதமான நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

அனைத்தும் உங்கள் மூளையில்தான் உள்ளது

எடை குறைப்பு என்பது உங்கள் மனநிலையை 100 சதவீதம் மாற்றக்கூடியது. உங்கள் உடலமைப்புக்கு ஏற்ற உணவுமுறையை உங்கள் பயிற்சியாளரிடம் இருந்து கேட்டுக்கொள்வதுடன் அதனை கண்டிப்பாக கடைபிடிக்கவும் செய்ய வேண்டும். ஆனால் உங்கள் மூளை உங்கள் எண்ணத்தை அடிக்கடி மாற்றிக்கொள்ள செய்யும். எனவே அதற்கு இடம் கொடுக்காமல் உறுதியாய் இருந்து உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.

எடை குறைப்பு மட்டுமே எல்லாம் அல்ல

எடை குறைப்பு என்பது உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள ஒரு மாற்றம்தான். அதற்காக நீங்கள் வருத்தப்படுவதோ அல்லது கடுமையாக உடற்பயிற்சி செய்கிறேன் என்று உங்களை வருத்திக்கொள்வதோ தவறான ஒன்று. இந்த உடலுடனும் மகிழ்ச்சியாய் இருக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களால் அதிகரித்த எடையை உங்களால் குறைக்க இயலாதா என்ன?

இது முடியப்போவதில்லை

நீங்கள் கஷ்டப்பட்டு எடை குறைப்பில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டுவிட்டால் உங்களின் அடுத்த இலட்சியம் என்னவென்பதை முடிவு செய்துகொள்ளுங்கள். ஏனெனில் எடை குறைந்த பின் வாழ்நாள் முழுவதும் மீண்டும் எடை அதிகரிக்காத உணவுகளையே சாப்பிட வேண்டும். இல்லையெனில் மீண்டும் உடல் எடை கூடும். எனவே மீண்டும் உடற்பயிற்சியை தொடங்கவேண்டும்.

கேள்விகள்

முன்னரே கூறியது போல எடை குறைப்பு இப்பொழுது மிகப்பெரிய வியாபாரமாக மாறிவருகிறது. எனவே பேராசை பிடித்த சில நிறுவனங்கள் இயற்கைக்கு புறம்பான முறையில் எடை குறைப்பில் ஈடுபடுகின்றனர். இதனால் மோசமான விளைவுகள் ஏற்படலாம். எனவே எடைகுறைப்பு பயிற்சியில் நீங்கள் இணையும் முன் சில கேள்விகளுக்கு பதில்களை உறுதிசெய்து கொள்வது அவசியம்.

பக்கவிளைவுகள்

உங்கள் டயட்டை தொடங்கும்முன் அதில் உணவுகள், மருந்துகள் மற்றும் அதன் விளைவுகளை பற்றி நன்கு தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். உங்களுக்கு கொடுக்கப்படும் உணவில் என்னென்ன கலந்துள்ளது என்பதையும் அவை பாதுகாப்பானதுதானா என்பதையும் உறுதிசெய்து கொள்ளவும். விரைவான எடை இழப்பிற்கு ஆசைப்பட்டு உங்கள் ஆரோக்கியத்தை ஆபத்தில் சிக்கவைத்து விடாதீர்கள்.

இயற்கையானதுதானா?

இப்போதுள்ள எடை குறைப்பு நிறுவனங்கள் பெரும்பாலும் மாத்திரைகளையும், இயந்திரங்களையும் நம்பித்தான் செயல்படுகிறது. இந்த இயற்கைக்கு புறம்பான முறைகள் நிரந்தர பலனை தராது சொல்லப்போனால் பக்கவிளைவுகளையே ஏற்படுத்தும். எனவே இதுபோன்ற முறைகளை பரிந்துரைக்கும் நிறுவனங்களை நாடாமல் இயற்கையான முறையிலேயே எடையை குறைக்க முயலுங்கள்.

டயட் மாற்றம்

நீங்கள் செல்லும் எடை குறைப்பு நிறுவனம் எந்த வித உணவுமுறையையும் பின்பற்றாமல் எடையை குறைக்கலாம் என்று வாக்குறுதி கொடுத்தால் அவர்களை நம்பாதீர்கள். எடை குறைப்பு என்பது உங்களின் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே சாத்தியம். இல்லையெனில் அவர்கள் கூறுவது அனைத்தும் ஏமாற்றுவேலையே.

வேகமான எடை இழப்பு

யாரேனும் விரைவாக எடையை குறைக்கலாம் என்று வாக்குறுதி கொடுத்தால் அதனை நம்பாதீர்கள். எப்படி உங்கள் எடை மெதுவாக அதிகரித்ததோ அதேபோல எடை இழப்பும் மெதுவாகத்தான் இருக்கும். எனவே விரைவான ஆபத்தை தேடி ஓடாமல் மெதுவான பாதுகாப்பான முடிவை நோக்கி நடந்து செல்லுங்கள்.

Source : tamil.boldsky

One Response to “ஜிம்மிற்கு செல்வதற்கு முன் இவற்றையெல்லாம் உறுதிசெய்துகொள்ளுங்கள்”

  1. megawins casino Says:

    If you have to avoid like the design and style and feel of the ‘H’ tags, use CSS to design it to
    choice. The other thing that matters a lot is substances.
    Try it, can not be unhappy. http://teegee.ru/bitrix/rk.php?goto=http://Redir.Yy.Duowan.com/warning.php%3Furl=http://918.credit/casino-games/mega888


தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: