ஜிம்மிற்கு செல்வதற்கு முன் இவற்றையெல்லாம் உறுதிசெய்துகொள்ளுங்கள்

சீரான உணவுமுறையும், உடற்பயிற்சியும் இல்லாமல் நீங்கள் எந்த முறையில் முயற்சித்தாலும் அது வீண்தான். சிலர் விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமென கடுமையான உடற்பயிற்சியும், மிகவும் கட்டுப்பாடான டயட்டும் மேற்கொள்வார்கள். இதனால் அவர்களின் ஆரோக்கியம் மேலும் பாதிப்படையைத்தான் செய்யும். எடை குறைப்பை தொடங்கும் முன் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றை இங்கு பார்க்கலாம்.

ஜிம்மில் குடியிருக்க வேண்டிய அவசியமில்லை

உடற்பயிற்சி செய்ய தொடங்கிய பின் பெரும்பாலும் அனைவரும் மணிக்கணக்கில் நேரத்தை ஜிம்மிலியே செலவிடுவார்கள். இது அவசியமற்றது. குறைந்தது 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை ஜிம்மில் உடற்பயிற்சிகள் செய்தால் போதும், நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை விரைவில் காணலாம். வேண்டுமென்றால் ஜிம் முடிந்த பின் மிதமான நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

அனைத்தும் உங்கள் மூளையில்தான் உள்ளது

எடை குறைப்பு என்பது உங்கள் மனநிலையை 100 சதவீதம் மாற்றக்கூடியது. உங்கள் உடலமைப்புக்கு ஏற்ற உணவுமுறையை உங்கள் பயிற்சியாளரிடம் இருந்து கேட்டுக்கொள்வதுடன் அதனை கண்டிப்பாக கடைபிடிக்கவும் செய்ய வேண்டும். ஆனால் உங்கள் மூளை உங்கள் எண்ணத்தை அடிக்கடி மாற்றிக்கொள்ள செய்யும். எனவே அதற்கு இடம் கொடுக்காமல் உறுதியாய் இருந்து உடற்பயிற்சியை செய்ய வேண்டும். Read the rest of this entry »

Google AdSense – கூகுள் ஆட்சென்ஸ் இனி தமிழில்

கூகுள் ஆட்சென்ஸ் (Google AdSense) தனது அங்கீகார மொழிப் பட்டியலில் தற்போது தமிழை இணைத்துள்ளது. சர்வதேச அளவில் லட்சக்கணக்கான வலைப்பூ உரிமையாளர்கள் மற்றும் தமிழ் இணைய தள நிர்வாகிகளை இச்செய்தி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் இணைய தளங்களில் கூகுள் விளம்பரங்கள் காட்டுவதற்கு இதுநாள் வரை கூகுள் தடை விதித்திருந்தது. தமிழ் வலைப்பதிவர்கள், இணையதள நிர்வாகிகளின் கடந்த பத்து வருடங்களுக்கு மேலான கடும் கோரிக்கைக்கு தற்போது செவி சாய்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது கூகுள்.

We’re excited to announce the addition of Tamil, a language spoken by millions of Indians, to the family of AdSense supported languages. – Google

கூகுள் விளம்பரங்கள் எவ்வாறு வேலை செய்கின்றன? Read the rest of this entry »

%d bloggers like this: