எந்தெந்த உணவுப்பொருளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்..?

எந்தெந்த உணவுப்பொருளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்..? பழங்கள் அசைவ உணவுகள் திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள். ஆப்பிள்கள் ஒரு மாதம். சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள். அன்னாசி (முழுசாக) 1 வாரம். (வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள். வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள். சமைத்த மீன் 3-4 நாட்கள். பிரஷ் மீன் 1-2 நாட்கள். ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள். பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள். உலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய் ஒரு வாரம். பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 … Continue reading எந்தெந்த உணவுப்பொருளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்..?

Rate this:

உடையநாடு பெண்கள் அரபிக் கல்லூரி

தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம் , உடையநாடு என்ற ஊரில் பெண்கள் அரபிக் கல்லூரி. ‘மதரஸா அஸீஸிய்யா’ கட்டுமானப் பணி தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. மௌலானா சையது முகமது புகாரி பாஜிலே மன்பஈ(மலேசியா) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆலிம் அகமதுஷா, ஏர்வாடி இப்ராஹிம் ஜமாலி, காளிக்காவிளை இமாம் போன்றோர் சிறப்புரையாற்றினர். மேலும் சென்னை அஸ்ஸாதிக், சாகுல் ஹமீது, தலைமையாசிரியர் குலாம் கனி, உள்ளூர் மற்றும் சுற்றுப்புறத்திலுள்ள ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர். மதரஸாவிற்கு இடம் வழங்கியதுடன் கட்டிடத்தையும் தானே கட்டித்தருவதாக மலேசிய தொழிலதிபர் டத்தோ அப்துல் அஜீஸ் அவர்கள் மற்றும் அவர்களின் மகன்களான … Continue reading உடையநாடு பெண்கள் அரபிக் கல்லூரி

Rate this:

மருந்தை கவனமாக பயன்படுத்துங்கள்….

Allergy-Medications-Safe-for-Kids-article1. ஒரு நோய்க்குத் தரப்படும் மருந்தின் பக்க விளைவுகளே சிலவேளை இன்னொரு நோயாக வெளிப்படலாம். இருமலுக்குத் தரப்படும் சில மருந்துகள் தூக்கத்தை தூண்டும். சில மருந்துகள், சோர்வு, அசதி, மயக்கம், வயிற்றுப்புண், மூட்டுவலி உண்டாக்கும்.

2. எடுத்ததற்கெல்லாம் வலி நிவாரண மாத்திரைகளை விழுங்குவது குடல் புண்ணுக்கு விருந்து வைத்து அழைக்கும்.

3. நோயைப் பற்றியும் தரப்படும் மருந்துக்களின் தன்மைகளையும், பக்க விளைவுகளயும் பற்றி இணைய தளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

4. மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகள் வாங்கி சுய மருத்துவம் செய்யாதீர்கள். தவறாகப் பயன்படுத்தபடும் மருந்துகள் உயிரைக் குடித்துவிடும்.

5. சில நோயாளிகளுக்கு சில மருந்துகள் கொடுக்கக் கூடாது. சில மருந்தை சேர்த்துக் கொடுக்க வேண்டியிருக்கும்.

6. மருந்தின் அளவு நோயாளியின், வயது மற்றும் எடைக்குத் தக்கபடி மாறுபடும் .

7. ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை அரைகுறையாக சாப்பிட்டு நிறுத்தக் கூடாது. நோய் கிருமிகள் அதிக பலம் பெற்றுவிடும்.

8. எடுத்ததெற்கெல்லாம் ஆன்டிபயாடிக் மாத்திரைகள் குழந்தைகளுக்கு கொடுப்பது பிறகு தேவைப்படும் நேரம் அந்த மருந்து செயல் படாதவாறு நோய் கிருமிகள் அந்த மருந்தை எதிர்த்து நிற்கும் திறன் பெற்று விடுகின்றன.

9. மருந்துகள் ஊட்டச்சத்து அல்ல. தேவையின்றி உடலில் ஏற்றிக் கொள்ளக் கூடாது.

10. அலோபதி மருத்துவர் எழுதித்தரும் மருந்துகளுக்கு நிகரான ஆயுர்வேத மருந்துகளை நீங்களாக சாப்பிடாதீர்கள். Continue reading “மருந்தை கவனமாக பயன்படுத்துங்கள்….”