நீங்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதற்கான 6 காரணங்கள்!!!

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????நீங்கள் அதிகமாக சாப்பிடுபவரா? எப்பொழுதும் எதையாவது கொறித்துக் கொண்டிருப்பவரா? எனக்கு ஏன் இந்த பிரச்சனை வந்தது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் உங்களுக்குப் பிடித்த உணவுகளை பார்க்கும் போதெல்லாம் ஒரு கை பார்த்து விட வேண்டும் என்ற உணர்வு கொண்டவரா? டிவி பார்க்கும் பொழுதும் அல்லது உங்களுக்குப் பிடித்த உணவை டையட் ஆக சேர்த்துக் கொள்வதும் சாதாரணமான விஷயமாக உள்ளதா? பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க…

மேற்கண்ட கேள்விகளுக்கு எப்படித் தான் நீங்கள் பதிலளித்தாலும், அதிகமாக சாப்பிடுவது நல்ல பழக்கம் இல்லை என்பது தான் உண்மை. இவ்வாறு அதிகளவு சாப்பிடத் தூண்டும் விஷயங்களையும், அதிகமாக சாப்பிடுவதை படிப்படியாக குறைக்கும் வழிமுறைகளையும் தெரிந்து கொள்வது தான், உடலை ஆரோக்கியமாக பராமரிக்கும் வழிமுறையாகும். அதிகமாக சாப்பிடத் தூண்டும் விஷயங்கள் எவை என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்… இதுப்போன்று வேறு: கலோரிகளை எரித்து, உடல் எடையைக் குறைக்கும் 10 அருமையான உணவுகள்!!!

நட்புக்காக

நீங்கள் உடலுக்குத் தேவையான அளவில், ஆரோக்கியமான உணவுகளை உண்டு வந்தாலும், நண்பர்களுடன் ரெஸ்டாரண்ட்டுகளுக்குச் செல்லும் போது, அங்கிருக்கும் வறுத்த உணவுகளை பதம் பார்க்க நினைப்பீர்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் மற்றும் எடையை குறைக்கவும் எண்ணி தான் இப்போதைய உணவுத் திட்டத்தை கடைப்பிடித்து வருகிறீர்கள் என்பதை உங்களைத் தவிர, வேறெந்த நண்பரும் உங்களுக்கு நினைவுபடுத்தப் போவதில்லை. கவனம் வேண்டும் நண்பரே! எனவே, உங்களுடைய உணவு திட்டத்தில் உறுதியாகவும், சரியாகவும் இருந்திடுங்கள். விரைவிலேயே நண்பர்களும் அதனை ஏற்றுக் கொண்டு மதிப்பளிப்பார்கள்.

பாத்திரம்

நீங்கள் அதிகமாக சாப்பிடுவதை ஊக்குவிக்கும் முக்கியமான காரணியாக உணவு உண்ணும் பாத்திரம் உள்ளது. பெரிய, ஃபேன்ஸியான தட்டுகள் உணவகங்களில் வைத்து சாப்பிட ஏற்றவையாக இருக்குமேயொழிய, தினமும் வீட்டில் சாப்பிடுவதற்கு ஏற்றவையல்ல. வீடுகளில் சிறிய அல்லது இடைநிலை அளவுடைய தட்டுகளைப் பயன்படுத்துங்கள். இந்த மாற்றத்தை செயல்படுத்தி, நீங்கள் சாப்பிடும் உணவை அது எப்படி கட்டுப்படுத்துகிறது என்று கவனித்துப் பாருங்கள்.

பசியா!

களைப்பா! களைப்படைந்து போயிருக்கும் நாம், அதனை பசியால் ஏற்பட்ட களைப்பாகவே பலமுறை தவறாக கருதி விடுகிறோம். தினமும் இரவில் போதுமான அளவு தூங்குவதை உறுதிப்படுத்துங்கள். ஆறு முதல் எட்டு மணி நேரமாவது தூங்குங்கள். அதேப்போல, நீங்கள் மிகவும் களைப்பாக இருக்கும் நேரத்தையும் குறித்துக் கொள்ளுங்கள். இந்த முறையை நீங்கள் ஒருமுறை கண்டறிந்து விட்டால், ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டு களைப்பை நீக்கிக் கொள்ளுங்கள். மாறாக, தேவையற்ற ஜங்க் உணவுகளை சாப்பிட வேண்டாம்.

வேகமாக சாப்பிடுதல்

10 நிமிடத்திற்கும் குறைவான நேரத்திற்குள் நீங்கள் சாப்பிட்டு முடித்து விடுகிறீர்களா? 20 நிமிடத்திற்குள் நீங்கள் சாப்பிட்டு முடித்து விடுகிறீர்கள் என்றால், அதிகமாக சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும். மெதுவாக சாப்பிடுங்கள், மெதுவாக அரைத்து, மென்று உணவை முறையாக வயிற்றுக்குள் தள்ளுங்கள். ஓவ்வொரு முறை மெல்லும் போதும் ஃபோர்க் அல்லது ஸ்பூனை பயன்படுத்துங்கள்.

போரடிக்குதே!

எத்தனை முறைதான் நீங்களும் டிவி முன் அமர்ந்து கொண்டு, பொழுதைப் போக்குவது? நீங்கள் வேலை செய்யும் இடத்திலும் கூட, மகிழ்ச்சியாக இல்லாத நேரங்களில், எதையாவது கொறித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றும். அதையும் செய்வீர்கள். இலட்சக்கணக்கானவர்கள் தங்களுக்கு போரடிக்கிறது அல்லது ஆர்வமூட்டுவதாக எதுவும் இல்லை என்ற காரணத்திற்காகவே அதிகமாக சாப்பிடுகிறார்கள் என்கிறார்கள் வல்லுநர்கள். பணியிடமோ அல்லது வீடோ என எதுவாக இருந்தாலும், இந்த பிரச்சனையின் ஆழத்தை அறிந்து கொள்ள வேண்டிய நேரம் இது.

உடல் நீர் வறட்சி

உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாத போது, உங்களுக்கு அதிகமாக சாப்பிடத் தோன்றும். எனவே, நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பதை உறுதியாக பின்பற்றுங்கள். ஒவ்வொரு முறை சாப்பிடுவதற்கு முன்னரும், ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதே போல நீங்கள் தூங்கி எழுந்தவுடனும் மற்றும் உறங்கச் செல்லும் முன்னரும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

Source : tamil boldsky – health

Advertisements

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s