முடி கொட்டுதலைக் கட்டுப்படுத்தும் சில டயட் டிப்ஸ்…

Hair-Loss-Techniquesஇன்றைய சுகாதாரமற்ற வாழ்க்கை சூழலில், மக்கள் பல உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அவைகளில் முக்கியமான ஒரு பிரச்சனையாக தலை முடி கொட்டுதல் பார்க்கப்படுகிறது. அதனால் பல பேர் இன்று அவதிப்பட்டு வருகின்றனர். ஏன் இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

முடி கொட்டுதல் என்பது பொடுகு, சூரிய வெளிச்சத்தில் அதிகம் தென்படுவது போன்ற வெளிப்புற காரணிகளால் மட்டுமல்ல. ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களாலும் கூட அது ஏற்படுகிறது. இயல்பான முடி வளர்ச்சிக்கு தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்காத போது, முடி கொட்டுதல் பிரச்சனைக்கு நீங்கள் ஆளாவீர்கள்.

அழகான மற்றும் நீளமான கூந்தல் வேண்டுமா? அப்ப ஆரஞ்சு பழத்தை யூஸ் பண்ணுங்க… பல காலமாக இதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், உங்கள் தலையில் சீக்கிரத்திலேயே வழுக்கை விழுந்து விடும். இந்த நிலையை தடுக்க, ஆரோக்கியமான உணவுகளையும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். உங்கள் முடி ஆரோக்கியமாக இருக்க கீழ்கூறிய அனைத்தும் முக்கியம்.

வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ்

தலைச் சருமம் மற்றும் மயிர்த்தண்டுகளுக்கு ஆக்ஸிஜன் அளிக்க ஹீமோகுளோபினுக்கு இது உதவிடும். அதிக ஆக்சிஜென் கிடைக்கும் போது, தலை முடி வளர்ச்சியும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ் குறைபாடு ஏற்பட்டால், உங்கள் தலை முடி வலுவிழந்து, பாதிப்படைந்து விடும். உங்களுக்கு இந்த வைட்டமின் குறைபாடு இருந்தால், கோழி, டூனா மீன், சால்மன் மீன் போன்ற இயற்கையான உணவுகள் அல்லது வைட்டமின் மாத்திரைகளை உட்கொள்ளலாம்.

ஜிங்க்

நம் தலைச்சருமத்தில் எண்ணெய் சுரப்பிகள் இருக்கும். அது சரியான அளவில் செயல்பட்டால் தான் போதுமான எண்ணெய் சுரக்கும். அதில் குறைபாடு இருந்தால், தலைச்சருமம் வறண்டு, பொடுகு உண்டாகி, முடியும் கொட்ட தொடங்கி விடும். நட்ஸ், முழு தானியங்கள், பயறு வகைகள், இறைச்சி மற்றும் கடல் உணவுகளை உட்கொண்டால், உங்கள் தலை முடிக்கு போதுமான ஜிங்க் கிடைக்கும்.

காப்பர்

உடலிலுள்ள பல உறுப்புகளுக்கும், தலை முடிக்கும் போதிய அளவில் ஆக்ஸிஜன் மற்றும் இரத்தம் கிடைக்க நம் உடலுக்கு ஹீமோகுளோபின் தேவைப்படுகிறது. ஹீமோகுளோபினை அதிகரிக்க காப்பர் பெரிதும் உதவுகிறது. அதில் குறைபாடு ஏற்பட்டால், தலை முடி வலுவிழந்து, எளிதில் உடையக்கூடியதாக மாறி, நாளடைவில் கொட்டவும் தொடங்கி விடும். எள்ளு, சோயா, முந்திரி பருப்பு, இறைச்சி மற்றும் கடல் உணவுகளில் வளமாக உள்ளது காப்பர்.

இரும்புச்சத்து

இரும்புச்சத்து என்பது ஆண்களுக்கு மிகவும் முக்கியம். பெண்களுக்கு அதை விட முக்கியம். அதற்கு காரணம், மாத விடாயின் போது அவர்களுக்கு அதிக அளவிலான இரத்த இழப்பும் இரும்புச் சத்து குறைபாடும் ஏற்படும். ஹீமோக்ளோபின் உற்பத்திக்கு அயர்ன் உதவுவதால், கர்ப்பிணி பெண்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் கூட அதிகளவிலான இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால், வேர்களில் இருந்தே தலைமுடி வலுவிழக்கும். இதனால் தலைமுடி சுலபத்தில் உடையக் கூடும். தினமும் 100 முடிகள் விழுந்தால், முடி கொட்டுதலுக்கான அறிகுறியே அது. இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்க, கீரைகள், சோயா பீன்ஸ், பருப்புகள், சிகப்பு கிட்னி பீன்ஸ், கோழி, இறைச்சி, முட்டை மற்றும் மீன்களை உண்ணுங்கள். விலங்குகளில் மூலம் கிடைக்கும் இரும்புச்சத்து நம் உடம்பால் வேகமாக உறிஞ்சிக் கொள்ளப்படும்.

வைட்டமின் சி

தலை முடி திசுக்களை ஒன்றாக பிடித்திட கொலாஜென் சுரத்தல் மிகவும் அவசியமாகும். அதற்கு வைட்டமின் சி தேவைப்படுகிறது. வைட்டமின் சி குறைபாடு ஏற்பட்டால், தலைமுடியின் நுனிகள் பிளவடைந்து, எளிதில் உடையக்கூடியதாக மாறி, முடி கழிதல் ஏற்படும். ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி, தர்பூசணி மற்றும் தக்காளியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், உங்களுக்கு அதிக அளவிலான வைட்டமின் சி தேவைப்படும். அதனால் அப்பழக்கத்தை குறைத்து அதிகளவிலான பழங்களை உண்ணுங்கள்.

புரதம்

நம் உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் கட்டடக்கண்டமாக விளங்கும் முக்கியமான ஊட்டச்சத்தாக விளங்குகிறது புரதம். அதில் தலை முடி மற்றும் தலைச்சருமமும் அடக்கம். இழந்த முடியை ஈடுகட்டும் வகையில் புது முடியை வளரச் செய்யும். புரதச்சத்து குறைபாடு ஏற்பட்டால், தலைமுடி வலுவிழந்து, வறண்டு, உடையக்கூடிய தன்மையை பெரும். நாளடைவில் முடி கழிதலும் ஏற்படும். பீன்ஸ், நட்ஸ், தானியங்கள், பால், சீஸ், மீன், முட்டை மற்றும் கோழி போன்ற உணவுகளை உட்கொண்டு புரதச்சத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு

ஆகவே மேற்கூறிய சத்துக்கள் நிறைந்த சரியான உணவுகளை உட்கொண்டால், முடி கொட்டுதல் அல்லது கழிதலை பெருமளவில் கட்டுப்படுத்தலாம். அதற்கு காரணம் உங்கள் உணவுகளே உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக மாற்றும். ஆகவே ஷாம்பு போன்ற பொருட்களை நம்புவதற்கு பதிலாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சரியான உணவுகளை நம்புங்கள்.

Source : ThantsTamil Medical Column.

Advertisements

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s