” நான் தன்னம்பிக்கை பேசுகிறேன் “

கடுமையான உழைப்பாளி வெற்றி பெற்ற வரலாறே இங்கு அதிகம். கடுமையான உழைப்பு வீண் போனதாக சரித்திரம் கிடையாது. தன்னம்பிக்கையே நீங்கள் கடுமையாக உழைப்பதற்கு உங்களுக்கு தூண்டுகோலாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கை என்ற ஆணிவேர் இல்லாவிட்டால் நீங்கள் என்ன உழைத்தும் பயனில்லாமல் போகும். தன்னம்பிக்கை உங்களுக்கு இருக்குமானால் உங்களுக்கு எப்போதும் மனதில் மலர்ச்சி இருக்கும். தன்னம்பிக்கை உங்களுக்கு இல்லாவிட்டால் உங்களுக்கு விரைவில் தளர்ச்சி வந்து விடும். தளர்ச்சி வந்து விட்டால் பிறகு உழைப்பதில் நாட்டம் குறைந்து விடும். எனவே உங்களின் செயல்களின் மேல், உங்களின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அந்தத் … Continue reading ” நான் தன்னம்பிக்கை பேசுகிறேன் “

Rate this:

முடி கொட்டுதலைக் கட்டுப்படுத்தும் சில டயட் டிப்ஸ்…

Hair-Loss-Techniquesஇன்றைய சுகாதாரமற்ற வாழ்க்கை சூழலில், மக்கள் பல உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அவைகளில் முக்கியமான ஒரு பிரச்சனையாக தலை முடி கொட்டுதல் பார்க்கப்படுகிறது. அதனால் பல பேர் இன்று அவதிப்பட்டு வருகின்றனர். ஏன் இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

முடி கொட்டுதல் என்பது பொடுகு, சூரிய வெளிச்சத்தில் அதிகம் தென்படுவது போன்ற வெளிப்புற காரணிகளால் மட்டுமல்ல. ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களாலும் கூட அது ஏற்படுகிறது. இயல்பான முடி வளர்ச்சிக்கு தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்காத போது, முடி கொட்டுதல் பிரச்சனைக்கு நீங்கள் ஆளாவீர்கள்.

அழகான மற்றும் நீளமான கூந்தல் வேண்டுமா? அப்ப ஆரஞ்சு பழத்தை யூஸ் பண்ணுங்க… பல காலமாக இதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், உங்கள் தலையில் சீக்கிரத்திலேயே வழுக்கை விழுந்து விடும். இந்த நிலையை தடுக்க, ஆரோக்கியமான உணவுகளையும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். உங்கள் முடி ஆரோக்கியமாக இருக்க கீழ்கூறிய அனைத்தும் முக்கியம். Continue reading “முடி கொட்டுதலைக் கட்டுப்படுத்தும் சில டயட் டிப்ஸ்…”

” இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் “

இஞ்சி டீyயின் நன்மைகள்
இஞ்சி டீயின் நன்மைகள்

உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பையயும் இஞ்சி கலந்த டீ-யின் மூலம் பெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

குளிர் மிகுந்த நேரத்தில் ஒரு கப் சூடான இஞ்சி டீயை விட சிறந்த பானம் எதுவாகவும் இருக்க முடியாது. அதிக அளவு வைட்டமின் சி, மெக்னீசியம், மற்றும் இதர கனிமங்களை கொண்ட இஞ்சி வேரை சாப்பிடுவது உடம்பிற்கு நன்மை விளைவிக்கும்.

இஞ்சி டீ, உங்களுக்கு மிகவும் பிடித்த பானமாக மட்டுமல்லாமல் அது குளிர் காலத்தில் வரும் உடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு பெரும் தீர்வாகவும் உள்ளது. ஆகையால் இதை ஒரு மருந்துப் பொருளாகவும் இஞ்சியைக் கருதுகின்றனர்.

அதிலும் இஞ்சி டீ யை செய்ததும், அதனுடன் பெப்பர் மின்ட் (மிளகு கீரை), தேன் ஆகியவற்றை கலந்து டீயை அருந்தலாம். இதனால் இஞ்சியின் சுவை சற்றே மறைந்து காணப்படும். அதுமட்டுமில்லாமல் டீயின் சுவையும் மிகைப்படும்.

இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! Continue reading “” இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் “”