வெற்றியின் குறுக்கே கோபம் – அனைவரும் படிக்க வேண்டிய தகவல்!!!

Angry Businessman Yelling into Phone“கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்
ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !”

‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ.

ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர் துருவங்களில் வேர்விட்டு அமர்ந்திருப்பதை அவருடைய வார்த்தைகள் சுட்டிக் காட்டுகின்றன.

‘எனக்குக் கோபமே வராதுங்க’ என்று யாராவது சொன்னால் அவர் பொய் சொல்பவராக இருக்க வேண்டும். அல்லது அதிசயப்பிறவியாய் இருக்க வேண்டும்.

கோபம் தும்மலைப் போன்றது. சாதி மத நிற பேதமில்லாமல் எல்லோருக்குமே வரும். சிலரிடம் ‘நீங்க அடிக்கடி கோபப்படுவீங்களாமே?’ என்று கேட்டால் கூட ‘எவண்டா அப்படிச் சொன்னது?’ என கோபப்பட ஆரம்பித்து விடுவார்கள்.

இதில் சமர்த்துக் கோபம் ஒன்று உண்டு. ‘வரையறுக்கப்பட்ட, கட்டுக்குள் இருக்கக் கூடிய, நிலை தடுமாற வைக்காத’ கோபத்தை அப்படி அழைக்கிறார்கள். உதாரணமாக உங்கள் குழந்தை கீழ்ப்படிதல் இல்லாமல் வளர்கிறது எனில் உங்களுக்குக் கோபம் எழும். அந்த கோபம் கத்தலாகவோ, சண்டையாகவோ இல்லாமல் வரையறுக்கப்பட்ட நிலையில் வெளிப்படும்போது வழிகாட்டும் அறிவுரையாய் மாறி விடுகிறது.

‘மேனேஜர் கோபப்படுறதுலயும் ஒரு நியாயம் இருக்குப்பா. இன்னிக்கு வேலையை முடிக்கலேன்னா சிக்கல் பெரிசாயிடும்’ என பேசிக்கொள்ளும் ஊழியர்கள் மேலதிகாரியின் நியாயமான கோபத்தைப் பேசுகிறார்கள்.

ஆனால் கண்கள் விரிய, கைகளை நீட்டி, குரலை உயர்த்தி ஆவேசமாய்ப் பேசும் கோபம் எந்த இடத்திலும், எந்தச் சூழலிலும் கொண்டாடப்படுவதில்லை என்பதே உண்மை. Read the rest of this entry »

உலகை அச்சுறுத்தும் தூக்கமின்மை – ஓர் அறிவியல் மற்றும் ஆன்மீகப் பார்வை

பகலில் ஓடியாடி திரியும் மனிதன் இரவிலே தூக்கத்தினால் சுருங்கி விடுகின்றான். இயங்கிக் கொண்டிருக்கும் உடம்பிட்கு ஓய்வு என்பது தேவையான ஒன்றாகும். பகலில் கடன் சுமையால் அல்லல் படுபவன் கூட, இரவில் தன்னை மறந்து நிம்மதியாக தூங்குகின்றான். சுருக்கமாகச் சொன்னால் தூக்கம் என்பது இறைவன் நமக்களித்த அருளாகும்.

அவனே இரவை உங்களுக்கு ஆடையாகவும், உறக்கத்தை ஓய்வாகவும், பகலை இயங்குவதற்காகவும் அமைத்தான். (அல்குர்ஆன் – 25: 47)

அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன், இரவை அமைதிக் களமாகவும், சூரியனையும், சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். (அல்குர்ஆன் – 6 :96)

ஓய்வை தரக்கூடிய தூக்கம் எவ்வாறு உருவாகின்றது?

மனித மூலையில் மெலடொனின் (Melatonin) என்ற ஹோர்மோன் ஒன்று சுரக்கின்றது. இந்த ஓமோன் உறக்கத்தைத் தூண்டும் ஒரு சுரப்பியாகும். இது வெளிச்சத்தில் குறைவாகவும், இருளில் கூடுதலாகவும் சுரக்கின்றது. அதனால் தான் இரவு என்றாலே உலகமே தூக்கத்தில் அயர்ந்து விடுவதுடன் பகலில் கூட மனிதன் இருட்டு மூலையைத் தேடி சென்று தூங்குவதற்கு எத்தனிக்கின்றான். Read the rest of this entry »

உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான 10 உணவுகள்!!!

foodபெண்கள் எப்படி தங்களை அழகுப்படுத்த அழகு நிலையங்களுக்குச் சென்று நேரத்தை செலவழிப்பார்கள். அதேப் போல் ஆண்கள் தங்கள் உடல் கட்டமைப்பை பாதுகாக்க உடற்பயிற்சி செய்வதில் நேரத்தை செலவழிப்பார்கள். அதிலும் சில பேர் மணிக்கணக்கில் உடற்பயிற்சியில் ஈடுபடுவதுண்டு. பொதுவாக காலையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டவுடன், உடலில் உள்ள புரதச்சத்து, நீர்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவை வெளியேறும். மேலும் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களும் வெளியேறும்.

அதனால் அந்த நாள் முழுவதும் சோர்வுடன் இருக்க நேரிடும். ஆகவே உடற்பயிற்சி செய்த 30 நிமிடங்களில் உணவை உண்ண வேண்டும். ஏனென்றால் இந்த நேரத்தில் தான் உடற்பயிற்சியால் இழந்த ஊட்டச்சத்துக்கள் வேகமாக மறுபடியும் உடலில் ஏறும். உடற்பயிற்சி செய்த பின் சோர்வு ஏற்படுவதால், சில சமயங்களில் அதனை தினமும் செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழக்கூடும்.

இனிமேல் கவலையை விட்டொழியுங்கள். இழந்த ஊட்டச்சத்துக்களை மீண்டும் பெறுவதற்கு, உடற்பயிற்சி செய்த பின் சாப்பிட வேண்டிய உணவு வகைகளை என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை உடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிட்டு வாருங்கள்.

ஆம்லெட்

22-1374470310-1-omlette

உடற்பயிற்சி செய்த பின், உடலில் உள்ள தசை வளர்ச்சிக்கு அதிக புரதச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். இத்தகைய புரதச்சத்து, முட்டையில் உள்ள வெள்ளை கருவில் போதுமான அளவில் உள்ளது. மேலும் அதில் அத்தியாவசிய அமினோ அமிலங்களும், வைட்டமின்களும் அடங்கியுள்ளது. உடற்பயிற்சி செய்த பின், பாதிப்படைந்த திசுக்களின் மறு வளர்ச்சிக்கு அமினோ அமிலங்கள் உதவி புரியும். Read the rest of this entry »

மருந்தில்லாமல் இரத்த கொதிப்பை கட்டுப்படுத்தலாம்

heart1தற்போது இளம் தலைமுறையினரையும் விட்டு வைக்கவில்லை இரத்த கொதிப்பு. இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இரத்த கொதிப்பு எனப்படும் “ஹைப்பர் டென்ஷன்” பலரின் வாழ்வில் குடிகொண்டுள்ளது.

இதற்கு காரணம் அலுவலகத்தில் பல மணி நேர வேலை, சரியான உடற்பயிற்சி இல்லாமை, பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவு, நொருக்கு தீனிகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளுதல், என தினமும் தொடர்ந்து நிகழ்வதால் இரத்த ஓட்டம் சீரான நிலையில் இல்லாமல் இரத்த கொதிப்பு அதிகரிக்கிறது. இதனால் அதிகமானோர் பாதிப்படைகின்றனர்.

இந்தியாவில் 40 சதவீத மக்கள் உயர் ரத்த கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவ ஆய்வு கூறுகின்றது. மாத்திரை மருந்து இல்லாமல் இரத்தை அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்.

இரத்த கொதிப்பை கட்டுப்படுத்த வழிமுறைகள்;

* வாரத்தில் ஒரு நாள் சுமார் 1 மணி நேரமாவது ஜாக்கிங் (சீரான ஓட்டம் எடுத்து கொள்ளலாம். இதனால் உடலுக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக செயல்படுவதோடு, இதயம் நன்றாக செயல்படும். Read the rest of this entry »

மறுமலர்ச்சி தரும் ரமளான்

ரமதான் கரீம்

ரமதான் கரீம்

புண்ணியம் பூத்துக் குலுங்கும், நன்மையும் நற்செயலும் செழிக்கும், இறையச்சமும் தியாகமும் வளர்க்கும் புனித ரமளான் வந்துவிட்டது. ஈடு இணையற்ற நன்மைகளை வாரிச் சொரியும் ரமளான் கிடைத்து விட்டது. மனிதருள் ரமளான் தரும் வாழ்க்கை மாற்றங்கள் எண்ணிலடங்காதவை. அல்லாஹ் தந்த அருட்கொடைகளில் ரமளான் மாதம் மறக்க முடியாததாகும்.

ரமளானின் மேன்மையையும், சிறப்பையும் அறிந்தவர்களெல்லாம் காலம் முழுதும் ரமளானாக இருக்கக் கூடாதா? என ஏங்கித் தவித்தார்கள். ஸஹாபாக்களும், இறை நேசர்களும், ஞானிகளும் ரமளானில் நோன்பு வைப்பத்திலும் திருக்குர்ஆன் ஓதுவதிலும் இரவெல்லாம் நின்று வணங்குவதிலும் அவர்களுக்கிருந்த பேரானந்தமும், பேராசையும் சொல்லில் வடிக்க முடியாதவையாக இருந்தன.

ரமளான் மனிதனுடைய செயல்பாடுகளையும், அவனுடைய நித்திய வழக்க முறைகளையும் அல்லாஹ்வின் அன்பிற்காக மாற்றி அமைக்கிறது. தினமும் நேரம் தவறாமல் மிகச்சரியாக உண்டு பருகியவன், சாப்பிட்டு மகிழ்ந்தவன்; மற்ற காலங்களில் மறந்தும் சாப்பிடாத, பருகாத ஒரு நேரத்தில் உண்ணுகிறான் பருகுகிறான் என்றால் யாருக்காக – அல்லாஹ்வின் கட்டளைக்காகத் தானே …!

ஸஹர் நேரம் என்ற அந்த அதிகாலை வைகறைப் பொழுது என்பது மனிதரெல்லாம் ஆழ்ந்து உறங்குகின்ற அதி அற்புத நேரம். இரவெல்லாம் உறங்காதவர் கூட தன்னை மறந்து மறந்தே உறங்கிப் போகின்ற நேரம். உலகின் எந்த மூலையில் வாழுகின்ற மனிதனும் சாப்பிடாத – சாப்பிடப் பிடிக்காத – மனம் ஒப்பாத ஒரு நேரத்தில் அல்லாஹுவுக்காக – அல்லாஹ்வின் ரஸுலுக்காக – அவர்களின் கட்டளைக்காக தங்களை முழுமையாக அர்பணித்தவனாக சாப்பிடுகிறான்.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
“அல்லாஹுதஆலாவும், அவன் மலக்குகளும், ஸஹர் சாப்பிடுவோரின் மீது அருள் புரிகின்றனர்”.
அறிவிப்பாளர் ஹள்ரத் இப்னு உமர் (ரளி) அவர்கள்
நூல் : அத்தர்ஙீப்

Read the rest of this entry »

%d bloggers like this: