பொருள்கள் வாங்கப் போகிறீர்களா…? ஒரு நிமிடம் …!

expence-billsஆடிட்டர் பெரோஸ்கான்

உதாரணம் ஒன்று :

ஒருவருக்கு மாத வருமானம் ரூபாய் ஐயாயிரம் என வைத்துக் கொள்வோம். ஆனால் அவர் ஒரு மாதத்தில் எட்டாயிரம் செலவு செய்கிறார். அதாவது தனது வருமானத்தைத் தாண்டி மூவாயிரம் ரூபாய் அதிகமாக செலவு செய்கிறார்.

இதைத்தான் தமிழில் வரவு எட்டணா செலவு பத்தணா என்று கூறுவார்கள்.

சரி அப்படி செய்த செலவுகளாவது பயனுள்ளதாகவும் அவசியத்தின் அடிப்படையிலும் உள்ளதா என்றால் அதுவுமில்லை. திருமணம், வளைகாப்பு, விருத்தசேதனம், பெண் பூப்படைதல், குடியேறுதல், ஹஜ் வழியனுப்புதல் என்று பிறருக்குக் காட்டுவதற்காக அவசியமில்லாத செலவுகள் ஒருபுறம்.

நமது கலாச்சாரத்திலோ, நமது மார்க்கத்திலோ, நமது முன்னோர்களிடத்திலோ கூட இல்லாத பிறந்த நாள், இறந்த நாள், திருமண நாள், காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் இன்னும் இது போல் எத்தனையோ தினங்கள். இவற்றுக்குச் செய்யும் வீண் செலவு இன்னொரு புறம்.

இவற்றைக் கணக்கிட்டால் 365 தினங்கள் ஒரு வருடத்தில் போதாது. இத்தகைய தினங்களால் அரசியல்வாதிகள், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், பணக்காரர்கள் பாடு கொண்டாட்டம். உழைத்து வாழும் நடுத்தர மக்கள், ஏழை எளியவர் பாடு திண்டாட்டம். (இது குறித்து நடைமுறையில் பலர் படும் சிரமத்தை உள்ளடக்கி “பிறந்த நாள் கொண்டாடலாமா?” எனும் தலைப்பில் நான் எழுதும் கட்டுரையை படித்தால் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.)

இந்த நிலையில் தன்னுடைய இந்த அதிகப்படியான செலவுக்கு அவர் எங்கு செல்வார்; என்ன செய்வார்…? Read the rest of this entry »

களை கட்டும் ‘கல்வி விளம்பரங்களும்’ , கண்ணீரோடு காத்திருக்கும் ‘கனவு விண்ணப்பங்களும்’ !

KK5‘அம்மா, ஆடு, இலை’ என்று துவங்கிய கல்வியின் ஆணி வேர்கள் 14 ஆண்டு கால வனவாசமாய், (LKG + UKG + முதலாம் வகுப்பு முதல் மேனிலை வகுப்புகள் வரை பன்னிரண்டு ஆண்டுகள்) புத்தகம் சுமக்கும் கூலிகளாய், நேரம் தவறாது பள்ளி சென்ற இயந்திரங்களாய், படித்து முடித்தும் ஆகி விட்டது. தேர்வெழுதி, தேர்வு முடிவுகளை எதிர் நோக்கி தூக்கம் தொலைத்த இராப் பொழுதுகளும் காணாமல் போய் விட்டது. அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவுகளால் பலருக்கு கை மேல் பலன் மதிப்பெண்கள் வாயிலாக கிடைத்தும் விட்டது. சிலருக்கோ தேர்ச்சி பெற மதிப்பெண்கள் மறுத்தும் விட்டது.

இப்பொழுது என்ன? கல்லூரி செல்ல வேண்டும். அது மருத்துவ கல்லூரியோ, பொறியியல் கல்லூரியோ, கலைக் கல்லூரியோ அல்லது டுடோரியல் கல்லூரியோ… ஆக இனி பள்ளி வாழ்க்கை முற்றுப் பெற்று கல்லூரி வாயில்கள் வரவேற்கத் தயாராகி விட்டது.

அதே வேலையில் தற்போதைய சூழலில் கல்வி வியாபரமாக்கப்பட்டு விட்டதா ? என்ற கேள்வியும்,

தங்கள் பிள்ளைகளின் வளமான எதிர் காலத்திற்காக, ஓடாய் உழைத்து சேமித்த பொருளாதாரத்தை தாரை வார்க்க துணியும் பெற்றோர்களின் ஆசைகள் நிறைவேறுமா ?

எதிர் காலத்தில் பணம் குவிப்பதை மட்டுமே இலட்சியமாய் கொண்டு இவர்கள் கற்கும் கனவுக் கல்விகள் கை கொடுக்குமா? Read the rest of this entry »

தினசரி உடற்பயிற்சியினால் உடலுக்கு கிடைக்கும் 20 நன்மைகள்..!

17-1371469127-10-peace-yoga-600இந்த அவசர உலகத்தில் வேலை பார்க்க மட்டும் தான் பலருக்கும் நேரம் உள்ளது. ஆனால் உடலை பராமரிக்க நேரம் கிடைப்பதில்லை. மேலும் பார்க்கும் வேலைகளிலும் உடல் உழைப்பு இருப்பதில்லை. இதனால் பாதிப்படைய போவது உடல் தான். ஆகவே உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியமான ஒன்று.

ஒழுங்கான உணவு மற்றும் உடற்பயிற்சியின் கலவை தான் நல்ல கட்டமைப்போடு இருக்கும் உடல். நாம் என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்கும் போது உடற்பயிற்சியை மறந்தே விடுவோம். உணவிற்கு தரும் முக்கியத்துவத்தை போல் உடற்பயிற்சிக்கும் தர வேண்டும்.

உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகையான தேவைபாடுகளுக்கு பல வகையான உடற்பயிற்சி உள்ளன. சில உடற்பயிற்சி ஆரோக்கியமான உடல்நலத்துக்கும், சில உடற்பயிற்சி நோயை குணப்படுத்தவும் உதவும். யோகா போன்ற சில உடற்பயிற்சிகள் மன நலனுக்காகவும் பயன்படுகிறது. இப்போது அத்தகைய உடற்பயிற்சியினால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம்!!!

Read the rest of this entry »

ஈசியா தொப்பையை(பெல்லி) குறைக்க சில எளிய டிப்ஸ்…

தொப்பையை குறைக்க சில எளிய டிப்ஸ்

தொப்பையை குறைக்க சில எளிய டிப்ஸ்

உடல் எடை மற்றும் தொப்பையால் நிறைய பேர் அவஸ்தைப் படுகின்றனர். அதுமட்டுமின்றி, இத்தகைய அதிகப்படியான உடல் எடையால், உடலில் பல நோய்களும் எளிதில் தாக்குகின்றன. ஆகவே பலர் தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு ஜிம், டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.

பெரும்பாலானோர் தொப்பை விரைவில் குறைய வேண்டுமென்று கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். அவ்வாறு மேற்கொள்வதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக உடலுக்கு கேடு தான் விளையும். எனவே தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது அவசரப்படாமல், ஒருசிலவற்றை சரியாகவும், நம்பிக்கையுடனும் மேற்கொண்டால், அதற்கான பலனைப் பெறுவது உறுதி.

ஆகவே தொப்பையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, அதனைக் குறைக்க சில எளிமையான மற்றும் ஆரோக்கியமான டிப்ஸ்களை படித்து, தினமும் நம்பிக்கையுடன் பின்பற்றி வந்தால், நிச்சயம் தொப்பை குறைவது உறுதி.

எலுமிச்சை ஜூஸ்

தொப்பையை குறைக்க எளிய ஒரு வழியென்றால், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை விட்டு, சிறிது உப்பு சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைத்து, நாளடைவில் தொப்பை மறைந்துவிடும். Read the rest of this entry »

உலர் பழங்களில் உள்ள சத்துக்கள்..

dry-fruits

உலர் பழங்களில் எண்ணற்ற மருத்துவ குணங்களை இயற்கை நமக்கு வழங்கியுள்ளது. அவை நம்முடைய உடல் நலனுக்கு மிக இன்றியமையாததாக உள்ளன, அவற்றை பற்றி சில..

• அத்திப்பழம் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிகம் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.

• உலர்ந்த ப்ளம்ஸை, மல்டி-வைட்டமின் மாத்திரை என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவில் அதில் வைட்டமின்கள் உள்ளது மேலும் இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது.

• பெர்ரிப் பழங்களில் ஒன்றான ப்ளூபெர்ரியிலும், உலர்ந்து இருக்கிறது. இந்த உலர் ப்ளூபெர்ரியில் வைட்டமின் சி, பி மற்றும் ஏ அதிக அளவில் நிறைந்துள்ளது. இது மைய நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத சத்துக்கள் உள்ளடக்கியது.

Read the rest of this entry »

%d bloggers like this: