அன்பையும் சமாதானத்தையும் கற்க கல்வி அனைவருக்கும் கடமை : UAE-ன் இளவரசர் ஷேக் முகமது

malala-meets-sheik-mohamed-uaeபாகிஸ்தானின் பெண் கல்வி முன்னேற்றத்திர்க்காக பேசியதற்காக தாலிபானால் தலையில் சுடப்பட்ட மலளா யூசுப்சய் தனது பெற்றோரொடுடன் உம்ரா செல்லும் வழியில் மாண்பிமிகு ஐக்கிய அரபு எமிரேட்சின் இளவரசர் மற்றும் துணை ராணுவ தலைமை அதிகாரி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களை சந்தித்து பேசினார் 
தான் உயிருக்கு போராடும் போது  மருத்துவ சிகிச்சைக்காக தனி மருத்துவ குழுவை அனுப்பிவத்தமைக்கும், உதவி செய்தமைக்கும், தனது கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகமைக்கும் நன்றி கூறினார்.
ஷேக் முகமது மலளாவின் உறுதியையும்  சிரமங்களை கடந்து அவரது உன்னதமான செய்தி முன்னோக்கி செல்ல தொடர்ந்து முயற்சிப்பதையும் பாராட்டினார். மேலும் அன்பையும் சமாதானத்தையும் பெறவும் கற்கவும்  கல்வி அனைவருக்கும் கடமை என்றும், மலளாவின் நிலைபாடு இந்த உலகத்துன் கல்விக்கான குறிப்பிடத்தக்க மயமாக இருக்கும் என்று வாழ்த்தினார். மன்னிப்பு மற்றும் சகிப்புத்தன்மை மதிப்புகளை  ஊக்குவிக்க மலளா தொடர்ந்து பணியாற்ற கேட்டு கொண்டார். Read the rest of this entry »

உலகின் மிகச் சிறந்த 20 இணையத்தளங்கள் (World’s Top 20 Websites):

உலகின் மிகச் சிறந்த 20 இணையத்தளங்கள்

உலகின் மிகச் சிறந்த 20 இணையத்தளங்கள்

உலகிலேயே அதிக எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது என்று கேட்டால் கண்களை மூடிக் கொண்டு கூகுள் (Google) என்று சொல்லி விடுவோம் , அதுதான் இல்லை. அண்மையில் எடுக்கப்பட்ட அறிக்கையின் படி முதல் 20 இடங்களை பெற்ற இணையதளங்களை இங்கே பார்க்கலாம்.

இந்த வகையில் அதிக யூஸர் அக்கவுண்ட்களை கொண்டுள்ள முதல் இருபது இணைய தளங்களை, அதன் சிறப்புகளையும் காணலாம். சரி இப்பொழுது 20 வது இடத்தில் இருந்து தொடங்குவோம்.

20 அமேசான்:

எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், உடைகள், விளையாட்டு சாதனங்கள், ஏன் உணவு கூட இங்கு விற்பனை செய்யப் படுகிறது. இதன் தனி நபர் வாடிக்கையாளர் எண்ணிக்கை 16 கோடியே 30 லட்சம்.

www.amazon.com

19 சினா:

மீடியா மற்றும் பயனாளர்கள் உருவாக்கும் தகவல்களைத் தாங்கித் தரும் சீனநாட்டு இணைய தளம்.சினா டாட் காம் தள சந்தாதாரர் எண்ணிக்கை 16 கோடியே 90 லட்சம்.

http://english.sina.com/index.html

18 வேர்டு பிரஸ்:

17 கோடியே 9 லட்சம் பேர் பயன்படுத்தும் வலைத்தளம்

www.wordpress.com Read the rest of this entry »

வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!

theweekend_zps7bbb2ae6வாரம் முழுவதும் வேலை, சனிக் கிழமை ஞாயிற்றுக் கிழமைகளில் தூக்கம் என்று இயந்திர மயமாகிவிட்டது வாழ்க்கை. வாழ்க்கையை சற்று திரும்பி பார்த்தால், தூக்கம், உழைப்பு என்கிற இரண்டே காரியங்கள் தான் இருப்பதாகத் தோன்றும். உபயோகமாக ஏதாவது செய்யலாம் என்று நினைத்தால், அதற்கு வார நாட்கள் பொருத்தமாக இருக்காது.

வேலை செய்து களைத்துப் போய் வீடு திரும்பியதும் படுத்து உறங்குவதற்கே நேரம் சரியாக இருக்கும். அதிலும் வார இறுதி என்றதுமே குதூகலம் அடைந்துவிடுகிறோம். மகிழ்ச்சியாக களிக்கவும், ஓய்வெடுக்கவும் இரண்டு நாட்கள் கிடைத்துவிட்டது என்கிற எண்ணம் ஏற்படுகிறது. ஆனால், வாரம் முழுவதும் கடினமாக உழைத்த பிறகு உறங்குவதையும், நண்பர்களோடு ஊர் சுற்றுவதையும் தவிற உபயோகமாக என்ன செய்ய முடியும்? எத்தனை ஆண்டுகள் இப்படியே வார இறுதிகளை வீணாக்குவது.

வீட்டில் ஒரு அட்டவணை போட்டு, அதில் வாரம் முழுவதும், வார இறுதியிலும் செய்யும் வேலைகளை பட்டியலிட்டால், நம் மீதே நமக்கு கோபம் வரும். இரண்டு நாட்கள் எப்போது வரும் என்று காத்திருந்த பின்பு, வார இறுதியின் முடிவில் எதையும் சாதிக்காத ஒரு குற்ற உணர்வே காணப்படுகின்றது. ஆனால், இதற்கு ஒரு மாற்று வழி இருக்கிறது. படுக்கையிலே புரண்டு, தொலைக்காட்சி பார்ப்பதற்கு, பதிலாக கீழே குறிப்பிட்டுள்ள ஆரோக்கியமான விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள். Read the rest of this entry »

மூளையின் சக்தியை கூர்மையாக்கும் எளிய பயிற்சிகள்…

Brain-wavesபொதுவாக உடலைக் கட்டுக்கோப்புடன், தகுதியாக வைத்துக் கொள்ள, உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் மனதைக் கட்டுக்கோப்புடன் தகுதியாக வைத்துக் கொள்ள என்ன செய்வது? தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கும் குறுக்கெழுத்துப் புதிர்க்கட்டங்களை நிரப்பலாம்.

கணிப்பொறியிலோ, செல்ஃபோனிலோ பதிவிறக்கம் செய்யப்பட்ட புதியதொரு மென்பொருளைப் பற்றி ஆராயலாம். ஆனால் இவையெல்லாம் போதாது. கீழே சொல்லப்பட்ட முறையான பயிற்சிகளை சரியாக செய்து வந்தால், மூளைக்குள்ளே உள்ள பலதரப்பட்ட திறமைகளை, முதுமையின் காரணமாகவோ, சரியான தூண்டுகோலின்மையினாலோ, அத்திறமைகள் மங்குவதற்கு முன்பாகவே, எப்போதும் புதுப்பித்துக் கொள்ள முடியும். இப்பயிற்சிகள் வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் இவற்றை தினப்படியான செயல்களுடன் ஒன்றிணைத்து செய்யத் தொடங்கினால், அதுவும் சிலவாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால், வேறுபாட்டை உணர முடியும். Read the rest of this entry »

அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை!

"முயன்றால் முடியாதது ஏதும் இல்லை"

” முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள். பார்வையை விரிவுபடுத்துங்கள் “

முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.

மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர். ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.

ஓரு மகன் சொன்னான். “நான் இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்கு விற்றேன்”
வியாபாரி கேட்டான். “எப்படி?”

“புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன். இரண்டு புத்த பிக்குகளுக்கு அது சரியென்றுபட்டது. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள் வாங்கினார்கள்:”

இன்னொரு மகன் சொன்னான். “நான் பத்து சீப்புகள் விற்பனை செய்தேன்”

வியாபாரி ஆச்சரியத்துடன் கேட்டான். “எப்படி?”

“வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள அந்தப் புத்த மடாலயத்திற்குப் போபவர்கள் தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது. அப்படிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த மடாலயத்தில் சொன்னேன். ஒரு பெரிய கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால் அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்து கொண்டு புத்தரை தரிசிக்க செல்வது ந்ன்றாக இருக்கும் என்ற ஆலோசனையும் சொன்னேன். ஒத்துக் கொண்டு பத்து சீப்புகள் வாங்கினார்கள்”

வியாபாரி அந்த மகனைப் பாராட்டினான். Read the rest of this entry »

%d bloggers like this: