நட்பு முறிவதற்க்கான சில அறிகுறிகள்!!!

friendship breaks
Why friendship breaks?

உறவுகளிலேயே மிகவும் புனிதமானது நட்பு தான். அத்தகைய நட்பு இல்லாமல் எவராலும், இந்த உலகில் நிம்மதியாக வாழ முடியாது. நட்பு இல்லாவிட்டால், உலகமே வெறிச்சோடி காணப்படும். ஏனெனில் ஒருவரது தனது உணர்ச்சியை, கஷ்டத்தை யாரிடம் பகிராமல் இருந்தாலும், நிச்சயம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது. “தோள் கொடுப்பான் நண்பன்” என்று சும்மாவா சொன்னாங்க…

ஏனெனில் எந்த ஒரு கஷ்டமான நிலையிலும், யார் விட்டு சென்றாலும், நண்பர்கள் மட்டும் பிரிந்து செல்லமாட்டார்கள். அந்த கஷ்ட காலத்தில், அதனை போக்குவதற்கு முயல்வதோடு, சந்தோஷமாகவும் வைத்துக் கொள்வார்கள். இந்த உலகில் அனைவருக்கும் மிகவும் நெருங்கிய நண்பர் என்ற ஒருவர் இருப்பார்கள். அத்தகையவர்களின் மீது நிச்சயம் ‘தனக்கு மட்டுமே சொந்தம்’ என்ற எண்ணம் இருக்கும். அத்தகைய எண்ணத்தால், யாரிடமும் அவர்களை விட்டுத் தர மாட்டோம். Continue reading “நட்பு முறிவதற்க்கான சில அறிகுறிகள்!!!”

எத்தனை அதிர்ஷ்டக்காரர் நீங்கள்? – சுயமுன்னேற்ற தகவல்

Positive-Thinkingல்லதே பார், நல்லதே நினை, எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்”என்று நம்பியது மட்டுமல்லாமல் அனைவருக்கும் அதை உபதேசிப்பவர் அந்த அறிஞர். இறைவன் தந்திருக்கும் நன்மைகளை சிந்திக்கவும், அவற்றிற்காக நன்றியுடன் இருக்கவும் தன் பிரசாரங்களில் கூறுவார் அவர். இருப்பவற்றிற்காக நன்றியுடன் இருந்தால் மட்டுமே மேலும் நன்மைகள் நம்மிடம் வந்து சேரும் என்று அவர் உறுதியாகச் சொல்வார்.
“ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நடுவே ஒரு கோடு வரையுங்கள். வலது புறம் பெரிதாய் + குறியிட்டு உங்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல விஷயங்களை எழுதுங்கள். இடது புறம் – குறியிட்டு உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளையும், தீமைகளையும் எழுதுங்கள். உண்மையாக ஆழமாக சிந்திப்பீர்களானால் கண்டிப்பாக வலது புறம் உள்ள பட்டியல் தான் நீண்டு இருக்கும். நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டக்காரர் என்பதை அப்போது தான் உங்களால் உணர முடியும்”என்று ஒரு சொற்பொழிவில் அவர் சொன்னதுடன் அனைவருக்கும் ஒரு வெள்ளைத் தாளைத் தந்து அப்போதே அப்படி எழுதிப் பார்க்கச் சொன்னார்.
அப்படி எழுதியவர்களில் பெரும்பாலானோருக்கு – குறியில் தான் எழுத நிறைய இருந்தது. ஒருசிலர் மட்டுமே + குறியில் நிறைய எழுதி இருந்தார்கள். அவர்களிடம் இப்போது இருக்கும் வாழ்க்கைக்கு இறைவனிடம் நன்றி சொல்லி விட்டுக் கிளம்பச் சொன்னார். Continue reading “எத்தனை அதிர்ஷ்டக்காரர் நீங்கள்? – சுயமுன்னேற்ற தகவல்”

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், இதயத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்

இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள
இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு, இதய நோய்கள், மூளை இரத்தக் குழாய் அடைப்பு(வாத நோய்) ஆகிய நோய்கள் வர 20 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இவர்கள் தங்கள் இதயத்தை சிறுநீரகங்களை விட அதிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள் இதோ உங்களுக்காக…

1. தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொண்டு செய்யுங்கள்.

2. எண்ணெய், வெண்ணெய், நெய், கிரீம், மிருகக் கொழுப்பு அதிகம் உள்ள ஆட்டைறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல் முதலான உறுப்பு இறைச்சிகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

3. உங்கள் உணவில் பூண்டிற்கு முதல் இடம் கொடுங்கள். Continue reading “சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், இதயத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்”

நல்ல மனநிலையில் எழுவது எப்படி?

sleepகாலையில் நல்ல மனநிலையில் எழ வேண்டும் என்று பலரும் நினைப்பர். ஆனால் எல்லோருக்கும் இது சாத்தியமாகாத விஷயமாக உள்ளது. இதற்கு முந்தைய நாளின் செயல்களே காரணமாக அமைகிறது.

பல்வேறு காரணங்களில் தாமதமான தூக்கமும் ஒரு காரணம். தாமதமான தூக்கம், ஒருவரை தாமதமாக எழ வைக்கும். நல்ல தூக்கம் நல்ல மனநிலையில் நம்மை எழ வைக்கும். எனவே காலையில் எழுந்ததும், நன்கு புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் இருப்பதற்கு பல வழிகளை பின்பற்றலாம். அத்தகைய வழிகள் என்னவென்று பார்க்கலாம்.  Continue reading “நல்ல மனநிலையில் எழுவது எப்படி?”