அடுத்தவர் குறைகள்!

 அந்த இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள்.

அதிகாலை காபி குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள். “அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்”

கணவனும் பார்த்தான். ஆனால் பதில் எதுவும்  சொல்லவில்லை. தினமும் அவர்கள் எழுந்து காபி குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.

திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள். “அப்பாடா. இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை… இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..”

கணவன் அமைதியாகச் சொன்னான். “இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்” Continue reading “அடுத்தவர் குறைகள்!”

தேர்வில் அதிக மதிப்பெண் பெற எளிய ஆலோசனைகள்

தேர்வில் அதிக மதிப்பெண் பெற..
தேர்வில் அதிக மதிப்பெண் பெற..

பள்ளித் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் இத் தருணத்தில் பொதுத்தேர்வினர் மட்டுமின்றி அனைத்து தரப்பு மாணவ, மாணவிகளும் அதிக மதிப்பெண் பெற எளிய வழிமுறைகளை விளக்குகிறார் கோபாலாபுரம் டி.ஏ.வி., பள்ளியின் முன்னாள் முதல்வரும், பாவை பள்ளிக் குழுமத்தின் இயக்குநருமான சதிஷ்:

மத்திய, மாநில அரசுகள் தங்களது பள்ளி பாடத்திட்டத்தில் சி.சி.இ., (தொடர் மதிப்பீட்டு முறை) பின்பற்றி வருவது வரவேற்கத்தக்கது. மாணவர்களின் மன அழுத்தத்தை இம்முறை மாற்றிவிடும். தற்போது பொது தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் பதட்டம், பயத்தை தொலைத்துவிட்டாலே வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. மாணவர்கள் தங்கள் பாடபுத்தகத்தின் முதல் எழுத்தில் இருந்து கடைசி எழுத்து வரை கவனமாக படித்து பார்க்கவேண்டும்.

ஒவ்வொரு பாடங்களின் பின்புறமும் கொடுக்கப்பட்டுள்ள பாடச்சுருக்கங்களையும் தெளிவாக புரிந்து படிப்பது அவசியம். அதன் பின்பு கடந்த 5 ஆண்டுகளாக பொது தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள், ஆசிரியர் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள கேள்விகள், அவரவர் மனதிற்கு முக்கியம் என்று படும் கேள்விகளை எழுதி வைத்து அதற்கான பதில்களை படித்து பலமுறை தனக்கு தானே சத்தமாக சொல்லி பார்க்கவேண்டும். இவ்வாறு செய்யும் போது கேள்விகளும், அதற்கான பதில்களும் மனதில் புரிதலுடன் தெளிவாக பதிந்துவிடுகிறது. Continue reading “தேர்வில் அதிக மதிப்பெண் பெற எளிய ஆலோசனைகள்”