“மன அமைதிக்கு தியானம் சிறந்த பயிற்சி”

meditatingவாழ்க்கை என்பது என்ன… சவால்கள், சலனங்கள், சங்கடங்கள், சந்தர்ப்பவாதங்கள், ஏமாற்றங்கள், ஏற்றம், தாழ்வு, மோசடி, வருத்தம், சோகம், சந்தோஷம் இப்படி ஒவ்வொரு அம்சமும் ஒன்றாகக் கலந்த ஒரு கூட்டுக் கலவை. ஒவ்வொரு தருணத்திலும் ஒரு அம்சம் வெளிப்பட்டு வியாபித்து விஸ்வரூபம் எடுத்து நிற்கும்.

அந்தந்த அம்சத்திற்கேற்ப சாமர்த்தியமாக நடந்து அதை சமாளித்து வெல்வதில்தான் வாழ்க்கையை வெற்றிகரமாக வைத்துக் கொள்வது அடங்கியுள்ளது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கப் போகும் வரை எத்தனை டென்ஷன், பதட்டம், படபடப்பு, அவதி, அவஸ்தை..

வேலைக்குப் போவோருக்கு ஒரு டென்ஷன் என்றால், வீட்டில் உள்ளோருக்கு ஒரு வகையான டென்ஷன். நினைவுகளின் அழுத்தம் தரும் பதட்டம், காதல் தரும் பதட்டம், கணவர்களால் ஏற்படும் பதட்டம், மனைவியரால் ஏற்படும் பதட்டம், ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் வரும் பதட்டம் என பதட்டங்கள் பலவிதம். ஆனால் இதில் அப்படியே மூழ்கிப் போய் விட்டால் என்னாகும்.. மனம் நொறுங்கும், வாழ்க்கை சிதறிப் போகும். அதிலிருந்து மீள என்ன செய்யலாம்…? Read the rest of this entry »

விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல்

விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம்

விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம்

எப்போதும் துறுதுறுவென விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகமாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

விளையாடிக் கொண்டே இருக்கிறான், கொஞ்ச நேரம் கூட உட்கார மாட்டான் என்றும், எப்போதும் துறுதுறுவென எதையாவது செய்கிறான் என்று புலம்பும் பெற்றோரா நீங்கள். அப்படியானால் இந்த ஆராய்ச்சி முடிவு உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும்.

ஆம், நெதர்லாந்தில் உள்ள வ்யூ யூனிவர்சிட்டி மெடிக்கல் சென்டரின் எம்கோ சுகாதார ஆராய்ச்சி நிறுவனம், குழந்தைகளின் உடல் அசைவுகளுக்கும், அவர்களது கல்வித் திறனுக்கும் உள்ள தொடரபு குறித்து ஆய்வு செய்தனர்.

இவர்கள் நேரடியாக குழந்தைகளை இந்த ஆய்வில் பங்கேற்கவைக்காமல், ஏற்கனவே குழந்தைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட ஆய்வுகளை வைத்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர். Read the rest of this entry »

பலவீனத்தைப் பந்தாடு (சுயமுன்னேற்ற கட்டுரை) – வெ.இறையன்பு I.A.S.

"மற்றவர்களின் பலவீனமே நம் பலம் என்பது யுத்தநெறி"

“மற்றவர்களின் பலவீனமே நம் பலம் என்பது யுத்தநெறி”

ஒண்டிக்கு ஒண்டி மோதுவதாக இருந்தாலும், ஊருடன் ஊர் மோதுவதாக இருந்தாலும் சரி, பலவீனமான பகுதி எது எனத் தெரிந்து அதைத் தாக்குவதுதான் வெற்றிபெறுவதற்கான ஒரே வழி.

மிகவும் பலசாலியாக இருக்கிறவனுக்கும் ஒரு பலவீனம் கட்டாயம் இருக்கும். அதை அறிவதுதான் யுத்தத்திற்கான முதல்படி. அது தெரியாதவரை எதிரியை எதுவும் செய்ய முடியாது.

ஸ்டிக்ஸ் நதியில் நனையாமல் போன அக்கிலஸின் குதிகால் மட்டும் பலவீனமானது என்கிற நுண்ணிய தகவலை ஹெலன் மூலம் தெரிந்துகொண்ட பாரிஸ், அதை நோக்கி அம்பு செலுத்தி வீழ்த்துகிறான். கிரேக்கப்படைகள் அக்கிலஸை இழந்து தவிக்கின்றன. Read the rest of this entry »

%d bloggers like this: