டெங்குவை விரட்டுகிறது பப்பாளி இலைச்சாறு..!

பப்பாளி இலை

இன்றைய சூழ்நிலையில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. இந்நிலையில் புதிய தகவலாக  ‘பப்பாளி இலைச்சாறு கொடுத்தால் தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என்று அனுபவரீதியில் முயற்சித்துப் பார்த்து வெற்றி அடைந்துள்ளனர்.

டாக்டர் ஒருவரின் மகன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ‘பப்பாளி இலைச்சாறு கொடுத்தால் தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என்று அனுபவரீதியில் சிலர் அந்த டாக்டரிடம் சொல்ல… அதை அவர் முயற்சித்துப் பார்த்துள்ளார். ஆச்சரியப்படும் வகையில் தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, அவரின் மகன் டெங்கு பாதிப்பிலிருந்து மீண்டார்.

இந்தத் தகவலை தன்னுடைய சக டாக்டர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார். அறிவியல்ரீதியில் எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் அனுபவங்கள் நேர்மறையாக உள்ளதால், ‘புதிய தலைமுறை’ வாசகர்களுக்குப் பயன்படுமே என்று பிரபல மகப்பேறு மருத்துவர் டாக்டர். எஸ்.பாலசரஸ்வதி, சக டாக்டரின் அனுபவத்தை நமக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.

இதைப்படித்த நம்முடைய வாசகர்கள் சிலரும் பப்பாளி இலைச்சாறு தட்டணுக்களை அதிகப்படுத்துவது அனுபவரீதியில் உண்மை என்று கண்டிருக்கிறார்கள். அவர்களின் அனுபவங்கள் சில…

வேதமூர்த்தி, லயன்ஸ் கிளப் தலைவர், தஞ்சாவூர்

கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி என் மகன் செல்வ பிரவீணுக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தட்டணுக்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தவுடன் டாக்டர்கள் 5 யூனிட் ரத்தம் உடனடியாக ஏற்ற வேண்டும் என்று கூறினார்கள. எனக்கு உடனே, ‘புதிய தலைமுறை’ கட்டுரைதான் நினைவுக்கு வந்தது. உடனடியாக காலை, மாலை இருவேளையும் பப்பாளி இலைச் சாறு பிழிந்து என் மகனுக்குக் கொடுத்தேன். தொடர்ந்து 4 நாட்கள் இதைச் செய்ததில் டாக்டர்களே வியக்கும் அளவிற்கு தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, அதன்பிறகு ரத்தம் ஏற்றத் தேவையில்லை என்று சொல்லி விட்டார்கள்.

கணேசன், தலைமை ஆசிரியர், ஆல்வின் பள்ளி, தஞ்சாவூர்

எனக்கு டெங்கு பாதித்த பிறகு தட்டணுக்களின் எண்ணிக்கை 21 ஆயிரம் இருந்தது. 25 யூனிட் ரத்தம் ஏற்றிய பிறகு 40 ஆயிரத்தைத் தொட்டது. பப்பாளி இலைச்சாறு குடித்த பிறகு, சாதாரணமாக நம் உடலில் இருப்பதைப்போல பல லட்சங்களில் தட்டணுக்கள் உற்பத்தியானது. மேலும் சளித்தொல்லை போன்ற வேறு உபாதைகளும் சரியாகிவிட்டன.

மெல்வின், தஞ்சாவூர்

உடல் வலி, லேசான ஜுரம் போன்ற ஆரம்ப கட்ட அறிகுறிகள் என் வீட்டில் அனைவருக்கும் இருந்தன. ‘புதிய தலைமுறை’யில் வெளியான அந்தக் கட்டுரையைப் படித்து, பப்பாளி இலைச்சாற்றை எல்லோரும் குடித்தோம். நல்ல பலன் இருந்தது.

கீதா, கோட்டுர்

டெங்கு பாதித்து, மிக ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவமனைக்குச் சென்ற என்னை, நிறைய யூனிட் ரத்தம் ஏற்ற வேண்டும் என்று சொல்லி, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். சிகிச்சை ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும் தொடர்ந்து தினமும் ஒருமுறை பப்பாளி இலைச்சாறு குடித்தேன். தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, டெங்கு பாதிப்பு முற்றிலும் சரியாகிவிட்டது.

வேதமூர்த்தி, தன்னுடைய அனுபவத்தை முடிந்தவரை எல்லோரிடமும் குறிப்பாக, டெங்கு பாதித்தவர்களிடம் சொல்லி வருகிறார். லயன்ஸ் கிளப் சார்பில் பப்பாளி இலைச்சாற்றுக்கு உள்ள மருத்துவ குணங்களைப் பற்றியும் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த இலைச்சாற்றை ஆரம்ப சுகாதார மையங்களில் வைத்து, அனைவருக்கும் கொடுக்க பரிந்துரை செய்யும்படியும் தமிழக முதல்வரிடம் மனு அளிக்க இருப்பதாகக் கூறினார்.

– புதிய தலைமுறை

Advertisements

2 thoughts on “டெங்குவை விரட்டுகிறது பப்பாளி இலைச்சாறு..!

  1. mohamed taha January 2, 2013 / 4:59 pm

    arumaiyaana maruththuva kurippu anaivarukku ubayogamaaga irukkum idhuponra seidhiyai veliyitta udayanadu inaiyaththalathirkkum anbu nanbar muhammadhu niyaas avargalukku yenadhu manamaarndha nanri vassalaam

    • udayanadu January 6, 2013 / 6:22 pm

      கருத்துக்களுக்கு மிக்க நன்றி : தாஹா பாய்.

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s