உண்மையான அமைதி எங்கே இருக்கிறது..

ஒரு தாவோ கதை. டெரெக் லின் என்ற தாவோ அறிஞர் சொன்னது…

ஒரு சக்கரவர்த்தி தன் அன்றாட வேலைகளைச் செய்வதில் முழு கவனத்தோடு ஈடுபட முடியாமல் தவித்தார். உள்நாட்டுப் பிரச்சினைகள், வெளிநாடுகள் மூலம் பிரச்சினைகள், நிர்வாகப் பிரச்சினைகள், குடும்பப் பிரச்சினைகள், அவ்வப்போது முடிக்க வேண்டியிருந்த அவசர வேலைகள் என பல விஷயங்களை அவர் கவனிக்க வேண்டி இருந்த்து.

முழு கவனத்தோடு எல்லா அம்சங்களையும் ஆராய்ந்து ஒவ்வொரு பிரச்சினையையும் அணுகி தீர்க்க வேண்டி இருந்தது. அதற்கு மன அமைதி முக்கியத் தேவையாக இருந்தது. மன அமைதி இல்லாத போது எதிலும் முழுக் கவனம் செலுத்துவது முடியாத காரியமாக இருந்தது.

இந்த சிக்கலை எப்படித் தீர்ப்பது என்று ஆலோசித்தவர் தன் மந்திரியை அழைத்துச் சொன்னார். “தினசரி நாலா பக்கங்களில் இருந்தும் நான் கவனிக்க வேண்டிய வேலைகளும், பிரச்சினைகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த நேரங்களில் அவற்றைச் சரியாகக் கையாளத் தேவையான அமைதி இல்லாமல் தவிக்கிறேன். அதனால் அந்த நேரத்தில் பார்த்தவுடன் அமைதி கிடைக்கும் ஏதாவது ஓவியம் என் முன் இருந்தால் அதைப் பார்த்து நான் என் அமைதியை மீட்டுக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். நம் நாட்டில் உள்ள ஓவியர்களில் சிறந்த ஓவியரைத் தேர்ந்தெடுத்து “உண்மையான அமைதி” என்ற தலைப்பில் எனக்காக ஒரு ஓவியம் வரையச் சொல்லுங்கள்.” Continue reading “உண்மையான அமைதி எங்கே இருக்கிறது..”

டெங்குவை விரட்டுகிறது பப்பாளி இலைச்சாறு..!

பப்பாளி இலை

இன்றைய சூழ்நிலையில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. இந்நிலையில் புதிய தகவலாக  ‘பப்பாளி இலைச்சாறு கொடுத்தால் தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என்று அனுபவரீதியில் முயற்சித்துப் பார்த்து வெற்றி அடைந்துள்ளனர்.

டாக்டர் ஒருவரின் மகன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ‘பப்பாளி இலைச்சாறு கொடுத்தால் தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என்று அனுபவரீதியில் சிலர் அந்த டாக்டரிடம் சொல்ல… அதை அவர் முயற்சித்துப் பார்த்துள்ளார். ஆச்சரியப்படும் வகையில் தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, அவரின் மகன் டெங்கு பாதிப்பிலிருந்து மீண்டார். Continue reading “டெங்குவை விரட்டுகிறது பப்பாளி இலைச்சாறு..!”