மனசோர்வை குறைக்கும் 6 உணவுகள்..

மனச்சோர்வை தடுக்கும் 6 உணவுகள்

எல்லாரும் இப்போதெல்லாம் ஐஸ் கிரீம், சிப்ஸ், பிஸ்கட், ஃபாஸ்ட் புட்-ன்னு அதிகமாக சாப்பிடுகிறார்கள். அதுவும் இதை வேலை செய்பவர்கள் அதிகம் உண்பதால் அவர்களுக்கு பசியானது அடிக்கடி சீக்கிரமாக ஏற்படுகிறது.

அப்போது அவர்களால் வேலையை சரியாக செய்ய முடியாமல் போய்விடுகிறது. இதனால் அவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகி விடுகிறார்கள் என்று விஞ்ஞானப் பூர்வமாக கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

மேலும் ஒரு சில உணவுகளை உண்டால் மனச்சோர்வு ஏற்படாது என்றும் கூறி அந்த உணவுகளையும் பட்டியலிட்டுள்ளனர்.

பாதாம் பருப்பு:-

அதில் அளவுக்கு அதிகமாக மக்னீசியம் உள்ளது. உடலில் மக்னீசியமானது குறைவாக இருந்தால் நரம்புகளில் கோளாறு ஏற்பட்டு, இதனால் மனச்சோர்வு ஏற்படும். மேலும் காராமணி, பசலைக் கீரை மற்றும் உருளைக் கிழங்கிலும் மக்னீசியம் அதிகமாக உள்ளது. Read the rest of this entry »

இலக்கை நிர்ணயிங்கள், முன்னேறிக் கொண்டே இருங்கள்!!

“கவலைப்படாதீங்க! எல்லோருக்கும் இது நிகழும்”

“வேளையில் அடிக்கடி ஆர்வம் குறைகிறதா? காரணமே இல்லாமல் சலிப்பாய் இருக்கிறதா?
ஒரு விஷயத்தைப் பாதியிலே விட்டு விட்டு சிறிது நேரம் எங்கோ வெறித்து நோக்கிவிட்டு
மீண்டும் தொடர்கிறீர்களா?”

வரிசையாய் கேள்விகள் கேட்டார் அந்த மனநல நிபுணர்.

“ஆமாம்! ஆமாம்!” பதில் சொல்லிக் கொண்டே வந்தவருக்கு எதிர்பார்ப்பு கூடியது. அறிகுறிகளையெல்லாம் சரியாய்ச் சொல்கிறார். தனக்கிருக்கும் நோயையும் சரியாக சொல்வார் என்று.

நீங்கள் நலமாக இருக்கிறீர்கள். உங்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. கொஞ்சம் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள் என்றார் மனநல நிபுணர்.

“நன்றி…. ஆனா…” தயக்கத்துடன் இழுத்தவரின் தோள்களை அழுத்தமாய் தட்டிவிட்டுச் சொன்னார், “கவலைப்படாதீங்க! எல்லோருக்கும் இது நிகழும்” Read the rest of this entry »

திராட்சை பழச்சாறு = புற்றுநோய் சிகிச்சை

திராட்சை ஜூஸ்

புற்றுநோயைக் குணப்படுத்திய திராட்சை ஜூஸ்! — Dr.M.A. ஹாரூன், மயிலாடுதுறை

திராட்சை பழச்சாறு மருத்துவ மகிமையைப் பற்றி அமெரிக்காவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில், புற்றுநோயை எதிர்த்து செயல்படுவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை உணர்த்தும் வகையில் ஒரு உண்மை சம்பவம் நடந்துள்ளது.

திருமதி. ஜானாபிரண்டிட் என்பவர் ஒருநாள் திடீரென வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டார். எவ்வளவோ நவீன மருந்துகளை சாப்பிட்டார். ஒன்றும் பலனில்லை. பின்பு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு பலவித பரிசோதனைகள் எடுக்கப்பட்ட பின், அவருக்கு வயீறில் புற்றுநோய் என்று மருத்துவர்கள் கண்டுபிடித்து கூறிவிட்டனர்.

டாக்டர்கள் அவரை உடனே அறுவை சிகிச்சை, ரேடியோ கதிர் சிகிச்சை செய்யச் சொன்னார்கள். இவ்வாறு செய்து மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்ட வேறு நோயாளியைப் பார்த்ததால், மறுத்துவிட்டார்.

பின்பு, நோன்பு மருத்துவம் பற்றி டாக்டர் அப்டன்சின்கிளேர் எழுதிய நூலைப் படித்து, அதன்படி செய்து பார்த்தார். பலன் இல்லை. மீண்டும் 9 வருடங்களுக்குப் பின்பு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் புற்றுநோய் கட்டி இரண்டாக வளர்ந்திருந்தது. இந்த முறை டாக்டர்கள் கடுமையாக எச்சரித்தார்கள். மீண்டும் ஆபரேஷன் செய்ய மறுத்தார். Read the rest of this entry »

டயட்-ல இருக்கும் போது, சிவப்பு உணவுகளையும் சேத்துக்கோங்க…

காய்கறி மற்றும் பழங்களில் இருக்கும் நன்மைகள் அனைத்தும் அனைவருக்கும் நன்கு தெரியும். ஆனால் சிவப்பு நிற காய்கள் மற்றும் பழங்களில் நன்மைகளைப் பற்றி யாருக்கும் அவ்வளவு தெரியாது.

பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டும் சாப்பிட்டால், உடலில் இருக்கும் நோய்கள் சரியாகும் என்று நினைக்க வேண்டாம். சிவப்பு நிறக் காய்கறி மற்றும் பழங்களிலும் நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிலும் தற்போது நிறைய பேர், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்காக உணவில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்கள். மேலும் எந்த நேரத்தில் எந்த காய் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும் என்று ஒரு பட்டியலையே பின்பற்றி வருகின்றனர்.

அத்தகையவர்கள் ஒருசில சிறந்த உணவுகளான சிவப்பு நிற காய்கறி மற்றும் பழங்களின் முக்கியத்துவத்தை மற்றும் அதன் நன்மைகளைப் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். சிவப்பு நிறத்தில் இருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக அளவு கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உதாரணமாக தக்காளி ஒரு சிவப்பு நிற ஆரோக்கிய உணவுப் பொருள்களுள் ஒன்று. இந்த தக்காளியை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் இது போன்ற மற்ற சிவப்பு நிற உணவுகளை உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஏற்படும் பல நோய்கள் கட்டுப்படுவதுடன், உடல் நன்கு பலத்துடன் இருக்கும். இப்போது அந்த சிவப்பு நிற உணவுப் பொருட்களில், எந்த காய் மற்றும் பழங்களைச் சாப்பிட்டால், எந்த நோய் சரியாகும் என்பதைப் பற்றி பார்க்கலாம்… Read the rest of this entry »

உடல் எடையை அதிகமாக்க விரும்புரிங்கள.. இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க…

இன்றைய மக்களுள் சிலர் எடை அதிகமாக உள்ளது என்பதற்காக அதை குறைக்க நிறைய முயற்சிகளை எடுக்கின்றனர். அதே சமயம், சிலர் எடை அதிகமாகவில்லை என்று அதற்காக பல முயற்சிகளை எடுக்கின்றனர்.

அவ்வாறு முயற்சி செய்யும் போது, எல்லா உணவுகளையுமே சாப்பிடக் கூடாது. உடல் ஆரோக்கியமாக இருக்கும் வகையில் உணவுகளை சாப்பிட்டால் தான், உடல் எடை அதிகமாவது, குறைவது போன்றவை ஏற்படுவதோடு, உடலை எந்த ஒரு நோயும் தாக்காமல் இருக்கும். இப்போது எந்த உணவுகளை எப்போது, எப்படி சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.. Read the rest of this entry »

%d bloggers like this: