எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ்க்கை உங்கள் வசமாகும் – சுய முன்னேற்ற கட்டுரை

சுய முன்னேற்ற கட்டுரை

ஒரு சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் உலாவிய போது த-வினோத் அவர்களுடைய சுய முன்னேற்றம் என்ற தமிழ் புத்தகம் கிடைத்து. அதை முழுவதும் படித்த போது மிகச்சிறந்த ஒரு Positive Energy எனக்கு கிடைத்து.

வாழ்வில் முன்னேற துடிக்கின்ற, வெற்றிபெற, Energy இழந்த என அனைவருக்கும் பயன்படும் என்ற வகையில்,  இங்கே போதுமான வரை அந்நூலில் உள்ள தகவல்களை இணைத்துள்ளேன்…

அடிப்படை

முயற்சி திருவினையாக்கும், முயன்றால் முடியும், முயன்றால் “மட்டுமே” முடியும்.

– லேனா தமிழ்வாணன்

மனப்பாங்கு

 • நேற்மறை
 • எதிர்மறை

மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலம் தனது வாழ்க்கையை மாற்றி கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பகும்.

– வில்லியம் ஜேம்ஸ் (மன நல நிபுனர் – ஹார்வர்டு பல்கலைகழகம்)

நேற்மறை மனபாங்குள்ள மக்கள்: (முடடியும் முயற்சிப்போம்)

 • தன்னம்பிக்கை
 • விடா முயற்சி
 • அறிவுகூர்மை
 • சாதிக்க விரும்புவது
 • மாற்றத்தை வரவேற்பது

எதிர்மறை மனபாங்குள்ள மக்கள்: (முடியாது வீண்முயற்சி)

 • எல்லாம் என் நேரம்.
 • எல்லாம் என் தலைவிதி
 • அதெல்லாம் நமக்கு வேண்டாம்
 • இதெல்லாம் நமக்கு ஒத்து வராது.
 • இது போதும்.
 • நடப்பது நடக்கட்டும் போ!.

மாற்றம்:

ஒவ்வொரு மனிதனும் உலக்கத்தை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை. – லியோ டால்ஸ்டாய்.

மாற்றம் என்பது மானிட தத்துவம். மாறாதிருக்க நான் வனவிலங்கல்லன் – கவியரசு கண்ணதாசன்

 1. நாம் மாற வேண்டும்
 2. நாம் மாறியே ஆக வேண்டும்
 3. நாம் கண்டிப்பாக மாறியே ஆக வேண்டும்

எண்ணங்களை மேம்படுத்துங்கள்:

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. – திருவள்ளுவர்.

உயர்வான எண்ணங்கள்
|
நேர்மறையான மனப்பாங்கு
|
நல்ல நடத்தை
|
சிறந்த செயல்பாடு
|
சரியான முன்னேற்றம்

தானே வகுத்த கட்டுப்பாட்டு நம்பிக்கையை தகர்தெரியுங்கள்:

தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தனிதலும் அவற்றோறன்ன – புறநானூறு.

 • நான் அதிஷ்டம் இல்லாதவன்
 • நான் அவ்வளவாக படிக்காதவன்
 • எனக்கு புத்திசாலிதனம் போதாது
 • எனக்கு திறமை குறைவு
 • எனக்கு உதவி செய்ய யாருமே இல்லை.
 • எனக்கு போதுமான நேரமில்லை
 • எனக்கு யாரிடம் எப்படி பேச வேண்டுமென தெரியவில்லை.
 • எனக்கும் பொறுமைக்கும் ரொப்ம தூரம்.
 • என்னை யாரும் மதிப்பதில்லை.

உற்சாகமே உயர்வு :

உற்சாகம் இல்லாமல் பெரிய காரியங்களை யாரும் சாதிக்க முடியாது – எமர்சன்

 • சிலரிடம் காணப்படும் பதட்டம், படபடப்பு, ஆர்பாட்டம் ஆகியவற்றை சுறுசுறுப்பென்றோ, உற்சாகம் என்றோ நம்ப வேண்டாம்.
 • உண்மையான உற்சாகத்தில் பதட்டமோ, ஆர்பாட்டமோ, படபடப்போ இருக்காது.

பிறகு எப்படி உற்சாகமாக இருப்பது?

 • இரவில் ஆழ்ந்த உறக்கம் (7 மணி நேரம்)
 • சுறுசுறுப்பாக நாளைத் தொடங்குவது (படபடப்பு, பதட்டம் இல்லாமல்)
 • நேர்மறையான எண்ணங்களுடன் வேலையை செய்வது
 • நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பது.
 • மகிழ்ச்சியுடன் அன்றைய வேலையை முடிப்பது.

தவறு:

தவறு செயவது மனித இயல்பு – பொதுமொழி

நாம் ஒரு தவறை செய்யும் போது,

 • அதை நியாயப்படுத்தக் கூடாது.
 • அதை மறைக்க கூடாது.
 • பிறரைக் குற்றம் சாட்டக் கூடாது.
 • அதை மீண்டும் செய்யக் கூடாது.

பிறகு என்னதான் செய்ய வேண்டும்,

ஒப்புக் கொள்ளுங்கள்
|
மன்னிப்புக் கோருங்கள்
|
கற்றுக் கொள்ளுங்கள்

முடிவெடுக்கும் திறன்:

தேனிக்கள் கொட்டும் என்று அஞ்சி கொண்டேயிருந்தால் என்றைக்கும் உங்கள் நாக்கால் தேனின் சுவையை உணரவே முடியாது. – பெயர் தெரியாத நபர்
எதர்க்கும் பிறரையே சார்ந்திருக்க ஊனமுற்றவர்கள்கூட விரும்புவதில்லை – சுகி சிவம்

முடிவெடுங்கள்:

 • தன்னம்பிக்கையுடன் (பயமின்றி)
 • திட நம்பிக்கையுடன் (சந்தேகமின்றி)
 • முழி நம்பிக்கையுடன் (தயக்கமின்றி)

முடிவுகள் :

சிக்கல் / சந்தர்ப்பம்
|
தீர்வுக்கான வழிகள் (1,2,3,4,5,6)
|
சிறந்த வழி
|
முடிவு
|
செயல்படுத்தல்
|
ஆய்வு

குறிக்கோள் – இலட்சியம் – இலக்கு:

 • இலக்கினை தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.
 • இலக்குகள் சாதிக்க கூடியதாக இருக்க வேண்டும்.
 • இலக்குகள் கால எல்லைக்குள் இருக்க வேண்டும்.
 • இலக்கினை அடைய முடியும் எனற நம்பிக்கை வேண்டும்.
 • நேர்மறை சிந்தனைகளை வளர்க்க வேண்டும்.
 • இதுதான் வேண்டும் என்பதை திட்டவட்டமாக தெளிபட நிர்ணயித்து செயல்பட வேண்டும்.

இலக்குகளை நிர்ணயித்தல்:

 • நீண்ட கால இலக்குகள் (5 ஆண்டுகளுக்குள்)
 • இடைப்பட்ட கால இலக்குகள் (3 ஆண்டுகளுக்குள்)
 • குறுகிய கால இலக்குகள் (1 ஆண்டுக்குள்)

1 ஆண்டு இலக்குகள், (குறுகிய கால இலக்குகள் நல்ல பலனை தரும்)

 • இந்த மாதம் (1-3 மாதம் வரை, 3-6 மாதம் வரை, 6-12 மாதம் வரை)
 • இந்த வாரம்
 • இந்த நாள்
 • இந்த நிமிடம்

நேர உணர்வு:

இன்றே உங்களால் செய்ய முடிந்ததை ஒருபோதும் நாளை வரை தள்ளிப் போடாதீர்கள் – பெஞ்ஜமின் ஃபிராங்க்ளின்

 • நிர்வாகத்தின் குறிக்கோளை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
 • தினசரி பணிகளை திட்டமிட்டு சரியான வரிசையில் செயல்படுத்தவும்.
 • சரியான நேரத்தில் வேலையை தொடங்கவும்.
 • தேவைக்கு அதிகமாக நேரம் எடுத்துக் கொள்ளக்கூடாது.
 • தேவையில்லா வேலைகளைத் தவிர்க்கவும்.
 • தள்ளிபோடும் மனப்பான்மையை அகற்றவும்.
 • மற்றவர்கள் நம் நேரத்தை வீணாக்க அனுமதிக்க கூடாது.
 • மற்றவர்களின் நேர விரயமும் நம்மால் தவிர்க்கப்பட வேண்டும்.

பேசும் கலை:

எந்த இடத்தில் எதை சொல்லவேண்டும் என்பதில் உள்ள தெளிவு
எந்த இடத்தில் எதை சொல்லக்கூடாது என்பதிலும் இருக்க வேண்டும். – சோம.வள்ளியப்பன்

 • தெளிவாக / புரியும்படி
 • சுறுக்கமாக
 • தேவைபடும் நேரங்களில் விளக்கமாக
 • தேவையான விஷயங்களை மட்டும்
 • தேவையான நேரத்தில்
 • சமையத்தில் உடணடியாக
 • வேறு சில சமயங்களில் கொஞ்சம் பொறுத்து
 • கவனமாக
 • சொற்களால் சுடாமல்

எனப் பல்வேறு சந்தர்பங்களில் பல்வேறு விதமாக நாம் பேச வேண்டும்.

கேட்கும் / கவனிக்கும் திறன்:

ஒரு திறந்த இதயத்தின் நம்பக்கூடிய
ஒரே அறிகுறி திறந்த காதேயாகும். – டேவிட் ஆக்ஸ்பர்கர்

 • கண், காது, மனம் இவை மூன்றும் ஒரு சேர கேட்கவும்.
 • சொற்களை கவனமாக கேட்கவும்.
 • பொறுமையுடன் கேட்கவும்.
 • கோபம் / உணர்ச்சிகளை வெளிப்படுத்தகூடாது.
 • இடைமறித்து பேசக்கூடாது.
 • இவர்தானே! இது என்ன பெரிய விஷயமா! இவர் என்னத்தை சொல்ல போகிறார்! என்கிற மெத்தனப் போக்கு / அலட்சியம் கூடாது.
 • சரியாக கேட்காமல் தவறாக புரிந்து கொண்டு பதில் அளிப்பதோ அல்லது வேலை செய்வதோ கூடாது.

தவிர்க்க வேண்டியவை:

 • மூடிய மனது
 • பொறாமை
 • சாக்கு போக்குகள்
 • அலுவலக அரசியல்
 • வம்பு பேசுவது
 • பிரச்சினைகளை பெரிதாக்குவது
 • மாற்றத்தை எதிர்ப்பது
 • குழம்பி இருப்பது
 • அறியாமை
 • சகாக்களின் கட்டாயத்திற்கு இணங்குவது.

நேற்று, இன்று, நாளை:

இன்றிருக்கும் நான் நேற்றிருந்த நான்-ஐ விட அறிவு, எண்ணம், படிப்பு, செயல், திறமை, பழக்கம்,… ஆகிய ஏதோ ஒன்றிலாவது, சிறிதளவாவது முன்னேறி இருக்க வேண்டும்.

நான் வேறு யாரோடும் போட்டியிடத்தேவையில்லை. நேற்றைய நானுடன் இன்றைய நான் போட்டியிட்டு முன்னேற வேண்டும். நாளைய நான் இன்றைய நானை விட ஒரு படியாவது மென்னேற வண்டும்.

வாழ்த்துக்கள் நன்றி. (சுய முன்னேற்றம் – Self Development by த-வினோத்)

Advertisements

10 thoughts on “எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ்க்கை உங்கள் வசமாகும் – சுய முன்னேற்ற கட்டுரை

 1. காத்தவராயன் October 22, 2016 / 11:58 am

  அருமையிலும் அருமை.
  நான் அடிக்கடி மற்றவருடன் என்னை ஒப்பிட்டு பொறாமை அடைகிறேன் அவனுக்கு இவ்வளவு வருமானம் மேலாளர் அவருக்கு (என் கீழ் நபருக்கு) உதவி செய்கிறார் எனற பொறாமை இதை எப்படி சரி செய்வது

 2. m.kumar October 16, 2016 / 7:11 am

  super sir

 3. m.kumar October 16, 2016 / 7:07 am

  வாழ்க்கையின் பொறுமை ஒருவன் வாழ்க்கை என்னும் வட்டத்தையே தீர்மானிக்கிறது

 4. ManiS July 14, 2016 / 9:29 pm

  மிக்க நன்றி!!!!

 5. Anonymous February 11, 2016 / 2:36 pm

  super sir

 6. Anonymous June 28, 2014 / 5:04 pm

  very nice sir

 7. P.Sathiya May 8, 2014 / 1:47 pm

  unmaiyilaiye energy drinks thaan super….

 8. PRABAKARAN January 10, 2014 / 7:09 pm

  அருமை அருமை வாா்த்தை வேறு வரவில்லை

 9. GUKANESH August 19, 2013 / 5:17 pm

  VERY VERY HELP FULL

 10. Mani August 12, 2013 / 11:17 am

  Very nice.
  today i will try .
  thank u brother.

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s