கேன்சரை குணமாக்கும் “காட்டு ஆத்தாப்பழம்”

காட்டு ஆத்தாப்பழம் / Soursop

புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக “காட்டு ஆத்தாப்பழம்” கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இப்பழம் சீதாப்பழத்தின் குடும்ப வகையை சார்ந்தது.

இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை கீமோ மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.

புற்றுநோய் என்றாலே ஒரு உயிர்கொல்லி நோய்தான் என்று இன்றைக்கு பலரும் அஞ்சிக்கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு காரணம் புற்றுநோய் என்பது இன்றைக்கும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. Continue reading “கேன்சரை குணமாக்கும் “காட்டு ஆத்தாப்பழம்””

இதயத்தை பத்திரமா பாத்துக்கங்க..

இன்றைய சூழ்நிலையில் எந்த நேரத்தில் யாருக்கு என்ன நேரும் என்று யாராலும் அறிய முடிவதில்லை. இதமாய் ஒரே லயத்தோடு துடித்துக்கொண்டிருக்கும் இதயம் திடீரென்று நின்றுவிடுகிறது. மருத்துவமனைக்கு சென்று பார்த்த பின்புதான் மாரடைப்பு என்று அறியமுடிகிறது.

இந்தியாவில் மட்டும் பல லட்சம் பேர் இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாறிவரும் உணவு ப்பழக்கத்தினால் உடல் பருமன் அதிகமாகி மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது. எனவே இதயத்தின் நலனை காக்க சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர் நிபுணர்கள். Continue reading “இதயத்தை பத்திரமா பாத்துக்கங்க..”

நன்றியறிதல் கல்… Gratitute Rock…

ஒரு சிறிய கூழாங்கல் உங்களுக்கு கிடைத்தால் அதை கழுவி சுத்த படுத்தி உங்கள் கைப்பை அல்லது சட்டை பாக்கெட்டில் பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு பொருளை எடுக்க உங்கள் கை பையின் உள்ளே செல்லும்போது நீங்கள் உங்களையும் அறியாமல் அந்த கல்லை தொட நேரும்போது நீங்கள் யாருக்கு நன்றியுடையவராக இருக்கிறீர்களோ அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். Continue reading “நன்றியறிதல் கல்… Gratitute Rock…”

உயிர் உடைத்த புகைப்படம்…

புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?

கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.

1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.

குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.

பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார். Continue reading “உயிர் உடைத்த புகைப்படம்…”

பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்..

இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காத காரணத்தினால் நீரிழிவு, இதயநோய், ரத்தசோகை போன்றவைகளுக்கு ஆளாகின்றனர். சரிவிகித சத்துள்ள உணவுகளை கொண்டாலே பெரும்பாலான நோய்களை தவிர்த்து விடலாம்.

குடும்பத்தை பற்றிய சிந்தனையும், பணிச் சூழலும் பெண்களுக்கு தங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது. எனவே பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுகளை குடும்பத்தினர் வாங்கிக்கொடுக்கலாம். இந்த சுதந்திர நாளில் இருந்து அனைத்து பெண்மணிகளையும் ஊட்டசத்து நிறைந்த பெண்களாக மற்ற உறுதியேற்போம்.

கரோட்டினாய்டு உணவுகள்

பெண்கள் உண்ணும் உளவில் கரோட்டினாய்டு சத்துக்கள் அவசியம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறி பழங்களில் கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன. இந்த உணவுகளை உட்கொள்வதன் பெண்களுக்கு மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும். Continue reading “பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்..”