செரிமானத்தை சீராக்கும் உடற்பயிற்சிகள்..

செரிமான பயிற்சிகள்

இன்றைய காலத்தில் உணவில் கட்டுப்பாடு இல்லாமல், அளவுக்கு அதிகமாக உணவு உண்டு, பின் செரிமானம் ஆகாமல் நிறைய பேர்   அவஸ்தைப் படுகிறார்கள். அப்படி செரிமானம் ஆகவில்லை என்பதற்காக மாத்திரைகளை சாப்பிட்டால் உடல் தான் கெடும். ஆனால் அதைவிட ஈஸியான சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்தாலே செரிமானம் ஆகிவிடும். அது என்னென்ன ஈஸியான உடற்பயிற்சி…

1. அதிகமாக சாப்பிட்டப்பின், சிறிது தூரம் நடக்கவும். ஏனென்றால் அதிகமாக உண்டபின் நடந்தால் செரிமானத் தன்மை அதிகரிக்கும். மேலும் உண்டபின் நடப்பதால், உணவில் உள்ள கொழுப்பு உடலில் தங்காமல், உடல் எடை போடாமலும் இருக்கும்.

2. பிறகு குனிந்து நிமிர்வது, இடுப்பு தசைகளை முறுக்கும் (Twisting) பயிற்சிகள், மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது போன்ற பயிற்சிகளை செய்யும்போது தசைகளுக்கு வலிவும், பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

3. செரிமானத்தில் மூச்சுப் பயிற்சியும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. முதலில் நேராக உட்கார்ந்து, மனதிற்குள் 5 வரை எண்ணிக் கொண்டு, மூச்சை 2-3 நிமிடம் உள் இழுக்கவும். பின் அதேபோல் மனதிற்குள் 5 வரை எண்ணிக் கொண்டு, மூச்சை வெளிவிடவும். இவ்வாறு செய்தால் செரிமானமாவதோடு, மனதும் ரிலாக்ஸ் ஆகும்.

4. அடுத்ததாக தரையில் உட்கார்ந்து, கால்கள் இரண்டையும் நீட்டி, பின் அவற்றில் வலது காலை மடக்கி, பின் இரண்டு கைகளாலும் இடது காலின் பாதத்தை தொடவும். அப்போது நன்கு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடவும். இதை அப்படியே தலைகீழாக செய்யவும்.

உடற்பயிற்சியைத் தவிர நினைவில் கொள்ள வேண்டியவை :

1. செரிமானம் ஆகவில்லை என்றால் குளிரிச்சியானவற்றை குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் அதை குடித்தால் செரிமானத்தன்மை குறைந்துவிடும். செரிமானம் உடல் வெப்பத்தைப் பொறுத்தே நடைபெறும்.

2. இயற்கை பானமும் செரிமானத் தன்மையை அதிகரிக்கும். ஃபுரூட் ஜூஸோடு சிறிது ஆப்பிள் பழச்சாற்றினாலான ஒரு வகை சாஸை விட்டு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நல்லது.

3. நெல்லிக்காய் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு அகலும். ஏனென்றால் நெல்லிக்காயில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால் இது எளிதாக உணவுப் பொருட்களை செரித்துவிடும். மேலும் நெல்லிக்காயை கறுப்பு உப்புடன் தொட்டு சாப்பிட்டு, சிறிது சுடு தண்ணீரை சாப்பிட்டால் நல்லது.

4. தினமும் யோகாசனம் செய்வது ஒரு நல்ல, உடலுக்கு ஆரோக்கியமான, செரிமானத்திற்கு சிறந்த பயிற்சி. அதிலும் ப்ராணயானம் செய்தால் மிகவும் நல்லது.

நன்றி : tamil.boldsky

Advertisements

2 thoughts on “செரிமானத்தை சீராக்கும் உடற்பயிற்சிகள்..

 1. udayanadu June 11, 2012 / 2:22 pm

  மேற்கூறிய இரண்டு விஷயங்களும் மருத்துவர்கள் வழங்கிய அறிவுரைகள். தாங்கள் செரிமான கோளாரினால் பாதிப்படைந்திருந்தால் சிறிது தூரம் நடந்தால்(வெகுதூர Walking அல்ல) நல்லது என்பது அவர்கள் கூற்றின் மையம். அருகில் உள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெர்றுக்கொள்ளவும்.

  கருத்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே..

 2. Anonymous June 11, 2012 / 12:11 am

  செரிமானத்தை சீராக்கும் உடற்பயிற்சிகள்.. Posted by udayanadu ⋅ 10/06/2012
  அதிகமாக சாப்பிட்டப்பின், சிறிது தூரம் நடக்கவும். ஏனென்றால் அதிகமாக உண்டபின் நடந்தால் செரிமானத் தன்மை அதிகரிக்கும்.

  சாப்பிட்ட உடன் செய்யகூடாத 7 விஷயங்கள் Posted by udayanadu ⋅ 04/06/2012 ⋅ Leave a Comment

  சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.

  எதை நான் கடை பிடிக்க…………..

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s